பூவுடன் ஒப்பிட்டேனே தவிர கஞ்சாவுடன் இல்லை: மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர்

இந்தியா,ஓக 19 நடிகர் கார்த்தி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் விருமன். இந்த படத்தில் ‘கஞ்சா பூ கண்ணால’ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இளைஞர்கள் அதிகம் பேர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலையில், கஞ்சாவை மையப்படுத்தி பாடல் வரிகள் இடம் பெறலாமா என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. விருமன் இந்த நிலையில், ‘கஞ்சா பூ கண்ணால’ பாடல் வரிகளுக்காக தான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக பாடலை எழுதிய பாடலாசிரியர் […]

Continue Reading

நியூயார்க்கில் காந்தி சிலை சேதம்: இந்திய தூதரகம் கண்டனம்

நியூயார்க்,ஓக 19 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்து கோயில் முன்பு இருந்த மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இது குறித்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை வெறுப்பை ஏற்படுத்தும் குற்றமாக கருதி நியூயார்க் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் […]

Continue Reading

கரை ஒதுங்கிய படகில் துப்பாக்கிகள் மீட்பு

மகாராஷ்டிர, ஓக 19 மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்காட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகில் ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் அடையாளம் தெரியாத படகு ஒன்றும், ராய்காட் மாவட்டத்தில் உள்ள பரத்கோல் என்ற இடத்தில் ஒரு படகும் இருப்பதை பொலிசார் கண்டறிந்தனர். முன்னதாக ,மும்பையில் இருந்து 190 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீவர்தன் பகுதியில் படகு […]

Continue Reading

குட்டி இலங்கையாகும் தமிழகம்: அண்ணாமலை விமர்சனம்

சென்னை, ஓக 19 குட்டி இலங்கையாக தமிழகம் மாறுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அண்ணாமலை,  அப்போது மது விற்பனையை நம்பி மட்டுமே ஆட்சி செய்யும் மாநிலம் தமிழகம் என்றும் இலவசங்களைக் கொடுத்தால் வளர்ச்சி எப்படி கிடைக்கும் என்பதை திமுக நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.  மேலும் தமிழகம் குட்டி இலங்கை ஆக மாறுகிறது என்றும் இலங்கையில் ஒரு குடும்பனத்தினர் வசம் ஆட்சி அதிகாரம் […]

Continue Reading

நடிகை கீர்த்தி சுரேஷின் மாஸ் லுக்: வைரலாகும் புகைப்படம்

இந்தியா,ஓக 18 இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் 2018-ல் தெலுங்கில் வெளியான ‘மகாநதி’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘சாணிக் காயிதம்’ மற்றும் ‘சர்காரு வாரி பாட்டா’ படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, கீர்த்தி […]

Continue Reading

இன்ஸ்டாகிராமில் கணவர் பெயரை நீக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி

சென்னை, ஓக 18 இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக தற்போது திகழ்கிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனஸ்ரீ வர்மா சமூக வலைத்தளங்களில் மிகவும் ‘ஆக்ட்டிவாக’ இருப்பவர். இவர் பதிவிடும் நடன வீடியோக்களை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 50 […]

Continue Reading

10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இந்தியா,ஓக 18 இந்தியா மற்றும் Zimbabwe அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஸிம்பாவேயின் Harare சர்வதேச விளையாட்டரங்கில் நடைற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. இதன்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Zimbabwe அணி 40.3 ஓவர்கள் நிறைவில் 189 ஓட்டங்களை பெற்று ககல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் இந்திய அணியின் Deepak Chahar , Prasidh Krishna […]

Continue Reading

முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவிற்கு 190 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஜிம்பாப்வே

ஹராரே, ஓக 18 இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களும், நடு வரிசை பேட்ஸ்மேன்களும் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை […]

Continue Reading

மனைவி அல்லாத வேறு பெண்களுடன் பாலியல் உறவு கொண்ட 3.6 சதவீத ஆண்கள்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி,ஓக 17 ஆணுறை பயன்பாடு உள்ளிட்ட சில காரணிகளை மையமாக வைத்து 2019-2021-ம் ஆண்டில் தேசிய குடும்ப நல அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. குறைந்த ஆணுறை பயன்பாடு, எச்.ஐ.வி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதால் அதிக ஆபத்துள்ள உடலுறவு மற்றும் அத்தகைய உடலுறவின்போது ஆணுறை பயன்பாடு ஆகியவற்றின் பரவலை அளவிடும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆய்வில் தரவுகள் சேகரிக்கப்பட்டன. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்ட இந்த […]

Continue Reading

ரூ.17 லட்சம் மதிப்புள்ள சாக்லேட் பார்கள் திருட்டு: பொலிஸ் விசாரணை

லக்னோ,ஓக 17 உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ அருகே சின்ஹாட் பகுதியில் உள்ள சாக்லேட் குடோனில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள கேட்பரி சாக்லேட் பார்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்ஹாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ராஜேந்திர சிங் சித்து என்பவருக்கு சொந்தமான சாக்லேட் குடோனில் திங்கள் கிழமை நள்ளிரவுக்கு மேல் கதவுகள் உடைக்கப்பட்டு சாக்லேட்டுகள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து ராஜேந்திர சிங் கூறுகையில், […]

Continue Reading

இலங்கைக்கு நிதியுதவி வழங்கிய தமிழகத்தின் முன்னாள் முதல்வர்

கொழும்பு, ஓக 17 தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இலங்கை மக்களுக்கு 50 இலட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலையை தமிழக அரசிடம் வழங்கியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கூறியுள்ளதாவது: இலங்கை ஒரு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழக அரசின் சார்பில் இலங்கை நாட்டிற்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தபோது, என் […]

Continue Reading

சீன கப்பல் எதிரொலி: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு

சென்னை, ஓக 17 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல்  நேற்றையதினம் (16) நங்கூரமிட்டதை அடுத்து தமிழகம் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடிஉள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 8 கப்பல்களும், 2 விமானம், 3 ஹெலிகொப்டர்கள் உள்ளிட்டவை இடைவிடாத […]

Continue Reading