சமோசா கடையில் வெடித்து சிதறிய சிலிண்டர்: 6 பேர் காயம்

நெல்லை,30 நெல்லை மாவட்டம் டவுண் வடக்கு ரத வீதியில் சமோசா கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் செயல்பட்டுவந்த கடையில் இன்று மாலை சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. அப்போது திடீரென சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலிண்டர் வெடித்ததில் கடை எரிந்து நாசமானது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Continue Reading

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் இருந்து பயணிகளை ஏற்றி சென்ற பஸ் ஜம்மு – பூஞ்ச் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. ஜம்முவின் அக்னூர் பகுதியில் சென்ற போது திடீரென பஸ் அங்குள்ள தாண்டா மோர் என்ற பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மீட்பு […]

Continue Reading

மீண்டும் மெகா ஸ்டாருடன் இணையும் மோகன் ராஜா

சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட்ஃபாதர் படத்தை இயக்கினார். சிரஞ்சீவி முதன்மை பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மோகன் ராஜா. இவர் இயக்கத்தில் வெளியான பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இவர் எழுதி இயக்கிய தனி ஒருவன் படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளை இயக்குநர் மோகன் ராஜா துவங்கினார். […]

Continue Reading

ஹர்திக் பாண்டியா – நடாஷா ஜோடி விவாகரத்து?

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதி சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் பதிவுகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இருவரின் புகைப்படங்களை நடாஷா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் வெளியிட, அவை பலரின் கவனத்தை ஈர்ப்பது வாடிக்கையான ஒன்றுதான். இந்த நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து பாண்டியா என்ற பெயரை நீக்கியுள்ளார். இன்ஸ்டா பயோ-வில் இருந்து பாண்டியா பெயர் நீக்கப்பட்டு இருப்பதை அடுத்து, இருவரும் பிரிந்துவிட்டார்களோ […]

Continue Reading

மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு இளையராஜா கடிதம்!

அனுமதியின்றி குணா பட பாடலை பயன்படுத்தியதாக கூறி, மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் படத்தில், கமல் நடித்து 90களில் வெளியான குணா படத்தின் ‘கண்மணி அன்போடு’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது இந்த பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக மஞ்சும்மல் பாய்ஸ் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சட்டத்தரணி சரவணன் கடிதம் அனுப்பியுள்ளார். “பாடலை உருவாக்கியவர் […]

Continue Reading

லண்டனில் குழந்தையை பெற்றெடுக்கும் பாலிவுட் நடிகை

பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப்-க்கும் நடிகர் விக்கி கவுஷலுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக நடிகை கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் பரவின. இதுகுறித்து அத்தம்பதிகள் கருத்துகள் எதுவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து மகாராஷ்டிராவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நடிகை கத்ரீனா கைஃப் வாக்களிக்காதது பெரும் சர்ச்கையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகை கத்ரீனா கைஃப் இங்கிலாந்து குடியுரிமை வைத்துள்ளார். கத்ரீனாவின் தந்தை முகமது கைஃப் காஷ்மீர் வம்சாவளியைச் […]

Continue Reading

அஜித்தின் புதிய படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் இவ்வளவு தொகையா?

நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜான் நாட்டின் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் குட் பேட் அக்லி (Good bad Ugly) படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அத்துடன் சண்டை காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து மூன்று கட்டங்காளக படப்பிடிப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குட் பேட் அக்லி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Continue Reading

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்றுப் பரவல்!

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா, இந்தியாவின் சில பகுதிகளில் பரவ ஆரம்பித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்திய சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 324 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த தொற்றுப் பரவலினால் அச்சமோ, பதற்றமோ கொள்ளத் தேவையில்லை எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது சிறந்தது என்றும் இந்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், பொது இடங்களுக்கு முகக்கவசம் […]

Continue Reading

இந்தியன் 2 படத்தின் “பாரா” பாடல் வெளியானது

இயக்குநர் சங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் “இந்தியன் 2”. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் “பாரா” வெளியானது. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. முன்னதாக இந்த பாடலுக்கான ப்ரோமோ வீடியோ நேற்று வெளியான நிலையில், தற்போது இந்த பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தியன் 2 படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, […]

Continue Reading

விரைவில் ரீ-ரிலீசாகும் ரஜினியின் ‘படையப்பா’

வெற்றிபெற்ற திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் டிரெண்ட்டில் கில்லி, பில்லா உள்ளிட்ட பல படங்கள் ரீ-ரிலிஸ் ஆனது. கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸிலும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘படையப்பா’ படம் மீண்டும் ரீ-ரிலீஸாக உள்ளது. 1999-ல் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினி, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நாசர், ராதாரவி, லெட்சுமி. ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம். 1999-ல் படையப்பாவைக் கண்டுகளிக்காத தமிழ் சினிமா […]

Continue Reading

ஆட்டோ பின்னால் துரத்திய ரசிகர்களை எச்சரித்த நடிகை டாப்சி

மும்பை,18 தமிழில் ‘ஆடுகளம்’ படத்தில் அறிமுகமாகி பிரபல கதாநாயகியாக உயர்ந்த டாப்சி இந்தியில் தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். டாப்சியின் படங்கள் நல்ல வசூல் பார்த்து வருவதால் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக உயர்ந்து இருக்கிறார். வெளிநாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் டாப்சி தனது தோழியுடன் ஆட்டோவில் சென்ற வீடியோ, புகைப்படங்கள் வலைதளத்தில் வெளியாகி […]

Continue Reading

சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் உயிரிழப்பு

பிரபல கன்னட மற்றும் தெலுங்கு சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது குடும்பத்தினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்ற போது பவித்ரா ஜெயராம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார். பவித்ரா ஜெயராமின் வாகன சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையால் அவர்கள் பயணித்த மகிழுந்து, பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன் விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பவித்ராவின் மரணத்துக்கு இரசிகர்கள், திரைப்பிரபலங்கள் […]

Continue Reading