தலைக்கவசத்தைக் கட்டாயமாக்கும் தமிழகம்

மோட்டார் சைக்கிள்களின் பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுவை அரசின் சமூக நலத்துறை சார்பில் ஊனத்தை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தடுப்பது எப்படி என்ற தலைப்பில் நெல்லித்தோப்பு கீர்த்தி மகாலில் நேற்று இடம்பெற்ற விழிப்புணர்வு முகாமை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இப்போது மோட்டார் சைக்கிள் விபத்துகளினால்தான் அதிகளவானோர் பாதிக்கப்படுவதாகவும், எனவே, ஹெல்மெட் அணிய வேண்டுமெனத் தெரிவித்துள்ளதாகவும் இதற்காக மேலும் அவகாசமளித்து திகதியை தள்ளிப்போட வேண்டுமென […]

Continue Reading

கைதானார் விஜய் மல்லையா

இந்திய வங்கிகளின் கடன்களைத் திரும்ப செலுத்தாமல், லண்டனில் பதுங்கியிருந்த விஜய் மல்லையா ஸ்கொட்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விஜய் மல்லையா, இந்தியாவிலுள்ள பல வங்கிகளில் 9,000 கோடி கடன் பெற்றதனால் அதைத் திருப்பி செலுத்தவில்லை என்பதால், அவர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், கைது நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக அவர் லண்டன் தப்பி சென்றிருந்தார். எனவே, அவரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததுடன், ஸ்கார்ட்லாந்து யார்டு பொலிஸாhரின் உதவியை […]

Continue Reading

பிறநாட்டு அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் இந்தியா

பிறநாடுகளைச் சேர்ந்த சுமார் 03 லட்சம் அகதிகள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கை, மியன்மார், பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் மூன்று இலட்சம் அகதிகள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக இந்திய மத்திய அரசின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி குறிப்புக்களின் பிரகாரம் 28 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்து 89 ஆயிரத்து 394 அகதிகள் இந்தியாவில் வசித்து வருவதாகவும், அதில் உள்நாட்டுப்போர் காரணமாக இலங்கை அகதிகள் மட்டும் சுமார் ஒரு லட்சத்து […]

Continue Reading

கடவுச்சீட்டு கிடைத்து விட்டது – எஸ்.பி.பி உருக்கம்

தனது கடவுச்சீட்டு கிடைத்து விட்டதாக தென்னிந்திய பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் கணக்கில் வீடியோ ஒன்றினை வெளியிட்டு, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது பாடல் துறைக்குள் பிரவேசித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு சர்வதேச ரீதியில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதுடன், அவற்றில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்று வருகின்றார். இதற்கமைய, அமெரிக்காவில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியொன்றிற்கு அவர் சென்றிருந்த சந்தர்ப்பத்தில், அவரது […]

Continue Reading

கிரிக்கெட் வீரர்களுக்காக பரிந்துரைத்த கோஹ்லி

ஏ தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டுமென இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி கோரிக்கை முன்வைத்துள்ளார். இந்தியா கிரிக்கெட் வீரர்கள் ஏ, பி, சி எனப் பிரிக்கப்பட்டு மூன்று விதமாக ஊதியம் வழங்கப்படுவதாகவும், இதில் ஏ தர வீரர்களுக்கு 2 கோடியும், பி தர வீரர்களுக்கு ஒரு கோடியும், சி தர வீரர்களுக்கு 50 இலட்சம் ரூபாவும் ஊதியமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த மாதம் அதிகரிக்கப்பட்டது. இதுதொடர்பில் இந்திய அணியின் தலைவரான […]

Continue Reading

தனி ஈழத்திற்கு ஆதரவான மையம் கைவிடப்பட்டதா?

இலங்கையில் தனி ஈழத்திற்கு ஆதரவாக ஒரு மையம் இல்லையென பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளமொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டதுடன், இந்தியா எப்படி மற்றைய நாடுகளை பிரிக்குமென கேள்வியூடாகப் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புகளுக்கு ஆதரவாக வைகோ பேசக்கூடாது என்று வைகோவிற்கு தடையிருந்தது. அதனை மீறி அவர் கருத்து வெளியிட்டிருந்தமையினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், வைகோவுக்கு உதவியாக தேசதுரோக வழக்கில் ப.சிதம்பரம் கைது […]

Continue Reading

நந்தினியின் கணவர் தற்கொலை

சரவணன் மீனாட்சி புகழ் மைனா நந்தினியின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். பிரபல சின்னத்திரை நடிகையான நந்தினி வெள்ளித்திரையில் சில படங்கள் நடித்திருந்தாலும், அவருக்கான மிகப்பெரும் அடையாளத்தையும், புகழையும் சரவணன் மீனாட்சி நெடுந்தொடர் கொடுத்திருந்தது. அதில் மைனா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். நந்தினி கார்த்திகேயன் என்பரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து இருவரும் சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் வசித்து வந்த போதிலும் இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து […]

Continue Reading

விஷால் அணிக்கு வெற்றி – விரைவில் பதவியேற்பு

இந்தியாவின் தமிழகத்தின் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான நம்ம அணியினர் அபார வெற்றி பெற்றனர். அந்த அணி சார்பில் போட்டியிட்ட தலைவர் விஷால் 476 வாக்குகள் பெற்று, 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், மேலும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். அத்துடன், பொருளாளராக எஸ்.ஆர்.பிரபுவும், செயலாளராக கே.ஈ.ஞானவேல்ராஜாவும் தேர்வு செய்யப்பட்டுள்ள அதேவேளை, மொத்தமாக 21 பேர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களது பெயர் […]

Continue Reading

விடுதலைப் புலிகள் விவகாரம் – வைகோ கைது

தமிழ் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகப் பேசியதால் 08 ஆண்டுகளின் பின்னர் இன்று மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புகளுக்கு ஆதரவாக வைகோ பேசக்கூடாதென வைகோவிற்கு தடையிருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியதைத் தொடர்ந்து, அந்தக் காலப்பகுதியில் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, […]

Continue Reading

இந்திய மீனவர்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை – சுஷ்மா சுவராஜ்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கடற்படைகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை இடையிலான கடற்பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருவதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது. இதுபோல், குஜராத் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் அந்த மாநில மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை பிடித்துச்செல்வதுடன், படகுகளையும் கைப்பற்றிவரும் நிலையில், டெல்லி […]

Continue Reading

ஈழத்தமிழர்களுக்கான ரஜனியின் பிறிதொரு கடிதம்

வவுனியாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக லைக்கா நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத சூழலில், ஈழத் தமிழ் ரசிகர்களுக்கு மீண்டுமொரு கடிதத்தை தமிழ் திரைப்பட பிரபல நடிகர் ரஜினிகாந்த் எழுதியுள்ளார். இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கென வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட பிரபல நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்பட்டிருந்தார். இவ்வாறானதொரு சூழ்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தமிழக […]

Continue Reading