10 நாட்களில் துணை முதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) , காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில் நடைபெறுகிறது. தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் குறித்த முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, க.பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பவள விழா […]

Continue Reading

திருப்பதி பிரமோற்சவ விழாவின்போது மலைப்பாதையில் 3 நாட்களுக்கு உந்துருளி உள்ளிட்ட வாகனங்களுக்குத் தடை!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 4ஆம் திகதி வருடாந்திர பிரமோற்சவ விழா கோலாகலமாகத் தொடங்குகிறது. 12ஆம் திகதி வரை பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளுவார். விழாவில் 8ஆம் திகதி கருட சேவை நடக்கிறது. கருட சேவையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக வசதி செய்யப்படுகிறது. மேலும் பிரத்தியேக வாசல்களும் அமைக்கப்படுகின்றன. கருட சேவையையொட்டி 7ஆம் திகதி இரவு 9 மணி முதல் 9ஆம் திகதி காலை 6 மணி வரை 2 […]

Continue Reading

பணிச்சுமையால் உயிரிழந்த ஊழியர்: தாயார் எழுதிய உருக்கமான கடிதம் இணையத்தில் வைரல்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியன் (26) என்பவர் எர்ன்ஸ்ட் & யங் (EY) நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் வேளைக்கு சேர்ந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 20-ம் தேதி பணி முடிந்து விடுதிக்கு திரும்பிய அன்னா செபாஸ்டியன் அறையில் உயிரிழந்து கிடந்தார். இவரின் உயிரிழப்பு, காரொப்பரேட் ஊழியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அன்னா செபாஸ்டியனின் மரணத்திற்கு காரணம் பணிச்சுமை தான் என அவரது தாயார் அனிதா எர்ன்ஸ்ட் & யங் இந்தியா தலைவர் […]

Continue Reading

திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாத்தியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசிய சந்திரபாபு நாயுடு, “கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் வெட்கப்பட வேண்டும். திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு […]

Continue Reading

பதவியிலிருந்து விலகினார் அரவிந்த் கெஜ்ரிவால்!

ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமது பதவியிலிருந்து விலகியுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த ஜூன் 26ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.  குறித்த வழக்கில் கடந்த 13ஆம் திகதி அவர் டெல்லி மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.  நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அவர், 48 மணிநேரத்துக்குள் தாம் பதவி விலகப்போவதாக அறிவித்தார்.  இந்தநிலையில் டெல்லி துணை நிலை ஆளுநரைச் சந்தித்து இன்று (17) மதியம் தமது பதவி […]

Continue Reading

D52 திரைப்படத்தின் அதிகாரப்பூரவ அறிவிப்பு

தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன் மற்றும் துஷரா விஜயன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது இவர் இயக்கும் 3 திரைப்படமாகும். படத்தின் பாடலான கோல்டன் ஸ்பேரோ பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. […]

Continue Reading

விரைவில் `விடாமுயற்சி’ டீசர்?

அஜித் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து இருக்கும் இரு படங்கள் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ், திரிஷா போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் படக்குழு ரிலீஸ் தேதிக்கான […]

Continue Reading

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமைதியை நிலைநாட்டக்கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து, மேற்கு இம்பால், தவுபால் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது

Continue Reading

சித்தார்த்-அதிதி ராவ் ஹைதாரி திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் திருமணம் செய்து கொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் `பாய்ஸ்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு வெளிவந்த சித்தா படம் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலில் இருப்பதாக செய்திகள் […]

Continue Reading

SIIMA Awards 2024: விருது வென்ற கோலிவுட் பிரபலங்கள்

2024 ஆம் ஆண்டு தென்னிந்திய SIIMA விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதி துபாயில் நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். தமிழில் விருது வென்ற நபர்களின் பட்டியல் சிறந்த படம் – நெலசன் திலிப்குமார் {ஜெயிலர்} சிறந்த நடிகர் – சீயான் விக்ரம் [ பொன்னியின் செல்வன் 2] சிறந்த நடிகை – நயன்தாரா […]

Continue Reading

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்: இருவர் பலி

இந்தியா – கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா – கேரளாவில் மலப்புரத்தில் 23 வயது மாணவர் அண்மையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு நிபா வைரஸ் உறுதியானது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேரளாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த இளைஞருக்கு மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது […]

Continue Reading

2024இல் அதிகம் வசூலித்த தமிழ்த் திரைப்படம் The GOAT!

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்.  இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா, யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  குறித்த திரைப்படம் கடந்த 5 ஆம் திகதி வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 150 கோடி ரூபாயை […]

Continue Reading