நிறைமாத கர்ப்பம்- தீபிகா படுகோனே போட்டோஷூட்

இந்தி திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கர்ப்பமானார். அவர் தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். இந்த மாத இறுதியில் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இந்த மாதம் தங்கள் முதல் குழந்தையை வரவேற்க தயாராக உள்ளனர். நிறைமாத கர்ப்பத்தில் இருக்கும் தீபிகா படுகோனே தற்போது […]

Continue Reading

தியேட்டர்களில் விஜய் பேனர்-கட்அவுட் வைக்க தடை

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கோட்’ திரைப்படம் நாளை மறுநாள் (5-ந்தேதி) வெளியாகிறது. விஜய் அரசியல் பிரவேசம் செய்துள்ள நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த படத்தை வரவேற்று தியேட்டர்களில் ரசிகர்கள் கட்-அவுட் மற்றும் பேனர்களை வைப்பதற்கு மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். ஆனால் தியேட்டர்களில் விஜய் பட பேனர்களை வைப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் […]

Continue Reading

`ஒரு அற்புதமான தரமான படம்’ – வாழை படத்தை வாழ்த்திய ரஜினிகாந்த்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது வாழை திரைப்படம். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்தி இருந்தார். அதைத்தொடர்ந்து தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் மாரி செல்வராஜிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ” மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழை […]

Continue Reading

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு!

தமிழகம், திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அம்பிகாபுரம் காந்திஜி தெருவில் வசிப்பவர் ஜான் ஜுடிமெயில். இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மகள், திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பாடசாலையில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  இந்த நிலையில் நேற்று (01-09-240 இரவு சிறுமி வழக்கம்போல் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்து தூங்கியுள்ளார்.  காலையில் அவர் கண் விழிக்காததால் அவரது பெற்றோர் எழுப்பி பார்த்தபோது அவர் கண் […]

Continue Reading

38 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி, சத்யராஜ்

வேட்டையன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வருகிறது. முதற்கட்டமாக ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது. கூலி படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, மஞ்சுமெல் பாய்ஸ் […]

Continue Reading

அதிக விலைக்கு “கோட்” டிக்கெட்டை விற்க கூடாது- த.வெ.க தலைமை உத்தரவு

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் 3 பாடல்கள் இதற்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் 4-வது பாடல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு ஓன்றை விடுத்துள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் கோட் திரைப்பட […]

Continue Reading

இளைய தளபதியின் பார்ட்டி – `மட்ட’ பாடல் வெளியானது

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் 3 பாடல்கள் இதற்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் நான்காவது பாடலான மட்ட தற்பொழுது வெளியாகியுள்ளது. மங்காத்தா படம் வெளியான அதே தேதியில் கோட் படத்தின் மட்ட பாடல் மற்றும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் யுவன் ஷங்கர் ராஜா […]

Continue Reading

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு மோடி வாழ்த்து

புதுடெல்லி:31 பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. இன்று நடைபெற்ற போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மணீஷ் நர்வால் வெள்ளியும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர். தடகளத்தின் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார். இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் […]

Continue Reading

“தி கோட்” – டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

சென்னை,30 இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். ‘தி கோட்’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் ‘தி கோட்’ படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இதில் டிஏஜிங் […]

Continue Reading

இந்தியாவில் வேகமாக பரவும் வைரஸ்: 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு

இந்தியாவில் சண்டிபுரா எனும் வைரஸ் பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் முதல் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் மாத்திரம் இந்தியாவில் 245 பேருக்கு அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் எனும் மூளையழற்சி நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 82 பேர் உயிரிழந்ததாகவும் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நாடு முழுக்க 43 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் பாதிப்பு […]

Continue Reading

குஜராத்தில் வெள்ளப்பெருக்கு: இதுவரையில் 28 பேர் பலி!

குஜராத்தில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர்.  கடும் மழைக் காரணமாக 30,000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழைக் காரணமாகப் பல கங்கைகள் மற்றும் நீர்நிலைகள் பெருக்கெடுக்கும் நிலையை எட்டியுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ஷாருக் கான்

இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இடம்பிடித்துள்ளார். 2024 ஹூருன் இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் முதல் முறையாக இடம்பிடித்துள்ள நடிகர் ஷாருக் கானின் சொத்து மதிப்பு ரூ. 7 ஆயிரத்து 300 கோடி ஆகும். திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உலகளவில் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் […]

Continue Reading