70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: விருதுகளை அள்ளிய ‘பொன்னியின் செல்வன்’

புதுடெல்லி,17 இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்கள் சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1 சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரகுமான் (பொன்னியின் செல்வன் […]

Continue Reading

ஏ.ஆர்.ரகுமானுக்கு 7வது தேசிய விருது- முழு விவரம்

70-வது தேசிய பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2022-ல் சினிமாத்துறையில் சிறந்து விளங்கிய படங்கள், நடிகர்கள், நடிகைகள், சிறந்த இசையமைப்பாளர்கள், சிறந்த பின்னணி இசைக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பொன்னியின் செல்வன் 1 படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமானுக்கு இது 7வது தேசிய விருது ஆகும். முன்னதாக, 1990ம் ஆண்டு தனது முதல் படமான ரோஜா திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார். இதைதொடர்ந்து, 1996ம் ஆண்டு […]

Continue Reading

ஐ.பி.எல். போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா?: ஜெய் ஷா விளக்கம்

புதுடெல்லி:16 கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற்ற உள்ள ஐ.பி.எல். போட்டிகளின் எண்ணிக்கையை 84 ஆக உயர்த்துவது குறித்த விவாதம் நடந்து வருகிறது என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா கூறியதாவது: பி.சி.சி.ஐ.யின் ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களுக்கு இதுபோன்ற விரிவாக்கம் தேவைப்படுகிறது. ஆனாலும், வீரர்களின் பணிச்சுமையைக் கணக்கிட விரும்புகிறோம். ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் 2025-26ல் 84 போட்டிகளாகவும், […]

Continue Reading

பெண் வைத்தியர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி கொலை: வெடிக்கும் போராட்டம்!

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடமையாற்றிய 31 வயது பெண் பயிற்சி வைத்தியர் ஒருவர் கடந்த 9 ஆம் திகதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார். இந்தநிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் கொல்லப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி கோரி கடந்த சில நாட்களாகக் கொல்கத்தா முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய பல்வேறு மருத்துவ சங்கங்களும் இன்று நாடு முழுவதும் பாரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. இதன்காரணமாக பல பகுதிகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Continue Reading

இன்னைக்கு கண்டிப்பா வந்துடும்: கோட் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. […]

Continue Reading

இயக்குநர் சேரன் மீது போலீசில் புகார்

கடலூரில் தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குனர் சேரன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பெரியகங்கணா குப்பத்தின் வழியாக இயக்குநர் சேரன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் தனியார் பஸ் ஒன்று வந்தது. அதன் டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதோடு, தொடர்ந்து ஹாரன் அடித்தபடி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த சேரன் தனது காரை சாலையில் நிறுத்தி கீழே இறங்கினார். பின்னால் வந்த தனியார் பஸ்சும் சாலையில் நின்றது. இயக்குநர் சேரன் […]

Continue Reading

விஜய் மகனுக்கு நோ சொன்ன சூரி!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கிறார் விஜய். இவருடைய மகன் ஜேசன் சஞ்சய், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்கப்போவதாக அறிவிப்புகள்  கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. தற்போது இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முடிந்து நடிகர் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க கவின், விஜய் சேதுபதி உள்ளிட்ட சில நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜேசன் சஞ்சய், நடிகர் சூரியுடன் முழு நேர ஆக்ஷன் த்ரில்லர் […]

Continue Reading

மறு அறிவிப்பு வரும் வரை இஸ்ரேலுக்கான விமான சேவை ரத்து

புதுடெல்லி:09 இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா தனது விமான சேவையை நிறுத்தியது. 5 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த மார்ச் 3-ம் தேதி டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா மீண்டும் விமான சேவையை தொடங்கியது. ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்றபோதும், அந்த நாட்டிற்கான விமான சேவைகளை பல நிறுவனங்கள் […]

Continue Reading

விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு

நடிகர் விஜய் தலைமையிலான, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் இடம்பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  பொன்மலை ஜீ கார்னரில் தொடருந்து நிலையத்திற்குச் சொந்தமான இடத்தில் இந்த மாநாடு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இதற்கமைய, குறித்த இடத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையில் வாடகைக்குத் தருமாறு கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு சிறுகனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதி கோரப்பட்ட […]

Continue Reading

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென இம்முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், “7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் […]

Continue Reading

வங்காளதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்

புதுடெல்லி:05 வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக உண்டான மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த நில தினங்களுக்கு முன் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை மிகப்பெரிய அளவில் வெடித்தது. இதற்கிடையே, இன்று மதியம் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறிய வங்காளதேச […]

Continue Reading

சாதனை மேல் சாதனை படைக்கும் ராயன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

நடிகர் தனுஷ் அவரது 50 வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்து இருந்தார். திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்து இருந்தார் துஷாரா விஜயன். நேற்று படத்தின் திரைக்கதையை லைப்ரரி ஆஃப் தி அகாடெமி ஆஃப் மோஷன் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ச்- […]

Continue Reading