பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய சூப்பர் சூறாவளி

மணிலா,செப் 29 பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய சூப்பர் சூறாவளி ‘நோரு’ இந்த ஆண்டின் 16-வது சூறாவளியாக கருதப்படுகிறது. அதே சமயம் இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கும் முதல் சூறாவளி இது என்றும், அந்நாட்டின் தலைநகர் பகுதியை இது கடுமையாக தாக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து பல பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மணிலாவில் மோசமான வானிலை காரணமாக 5 சர்வதேச விமானங்கள் மற்றும் 44 உள்நாட்டு […]

Continue Reading

அமெரிக்காவில் பள்ளிக்குள் வாலிபர் புகுந்து துப்பாக்கி சூடு: 6 பேர் படுகாயம்

அமெரிக்கா,செப் 29 அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஒக்லாந்தில் இடை நின்ற மாணவர்களுக்கு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளிக்குள் ஒரு வாலிபர் துப்பாக்கியுடன் திடீரென்று நுழைந்து சரமாரியாக சுட்டார். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள். பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் தப்பி சென்றார். இந்த துப்பாக்கி சூட்டில் 6 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். தப்பி […]

Continue Reading

ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பொருட்கள் ஏலம்: ரூ.86 கோடி திரட்டப்படும் என எதிர்பார்ப்பு

லண்டன்,செப் 29 இங்கிலாந்தைச் சேர்ந்த நாவலாசிரியர் இயான் பிளெம்மிங் என்பவரால் 1953 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ‘ஜேம்ஸ் பாண்ட்’ என்ற கதாபாத்திரம். இங்கிலாந்தைச் சேர்ந்த ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு ‘007’ என்ற குறியீடு வழங்கப்பட்டது. இந்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இயான் பிளெம்மிங் 12 நாவல்களையும், 2 சிறுகதை தொகுப்புகளையும் எழுதினார். இந்த கதாபாத்திரத்தை வைத்து முதல் முதலாக 1962 ஆம் ஆண்டு ‘டாக்டர் நோ’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. சீன் கானரி முதல் […]

Continue Reading

உக்ரைனின் 4 பகுதிகளை இணைக்கவுள்ள ரஷ்யா

ரஷ்யா,செப் 29 நாளை வௌ்ளிக்கிழமை உக்ரைனின் மேலும் நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் முறையாக இணைத்துக் கொள்ளவுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பு முடிவுகளின் பிரகாரம் ரஷ்ய அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மேற்கத்திய நாடுகள் இது தொடர்பான வாக்கெடுப்பை ஏற்க முடியாது என்று தெரிவித்து வருகின்றன.

Continue Reading

புளோரிடாவை தாக்கிய ஐயான் சூறாவளி வெள்ளநீரில் அடித்துவரப்பட்ட சுறா

புளோரிடா,செப் 29 அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே ஐயான் சூறாவளி புயல் புதன்கிழமை மதியம் கரையை கடந்தது. இதனால், மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. சூறாவளி கரையை கடந்தபோது 4-ம் பிரிவில் அதிக ஆபத்து நிறைந்த சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை 2 மணி நிலவரப்படி இந்த சூறாவளி வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்றது. அப்போது அதன் வேகம் மணிக்கு 75 […]

Continue Reading

ஆங் சான் சூயிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை

நெய்பிடாவ், செப்.29 மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி. மியான்மரில் கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் சூகியின் தேசிய ஜனநாய லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. என்றாலும் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அலுவலக ரீதியான […]

Continue Reading

போரில் கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளை இணைக்கிறது ரஷ்யா

கீவ், செப்.29 உக்ரைன் நாட்டின் மீது கடந்த 7 மாதங்களாக ரஷியா போர் நடத்தி வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. மேலும் பல நகரங்களை கைப்பற்ற ரஷ்ய படைகள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன. இந்த நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த 4 பிராந்தியங்களை சேர்ந்த மக்களின் […]

Continue Reading

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

சியோல், செப்.29 வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இப்போது வரை 30-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. இந்த சூழலில் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 25-ந் திகதி குறுகிய தூரம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்தது. இந்த பரபரப்பு […]

Continue Reading

புயலால் மின்உற்பத்தி பாதிப்பு: இருளில் மூழ்கிய கியூபா

ஹவானா, செப்.29 கரீபியன் நாடான கியூபாவின் மேற்கு பகுதிகளை நேற்று முன்தினம் இவான் என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சூழன்றடித்தது. இந்த புயலால் அந்த நாட்டின் முக்கிய மின்உற்பத்தி நிலையங்கள் கடும் சேதம் அடைந்தன. இதனால் மின்உற்பத்தி மற்றும் பகிர்மானம் பாதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கியது. இதனால் அந்த நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. 1.10 கோடி மக்கள் இருளில் […]

Continue Reading

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் புதிய நிதி அமைச்சர் பதவியேற்பு

இஸ்லாமாபாத், செப்.29 பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பண நெருக்கடியில் தவித்து வருகிறது. இதற்கிடையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பருவமழை அந்த நாட்டை ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்புகளால் அந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானின் புதிய நிதி மந்திரியாக இஷாக் தார் நேற்று பதவியேற்றார். ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மூத்த தலைவரான இஷாக் தார் இதற்குமுன் 4 முறை நிதி […]

Continue Reading

சீனாவில் உணவகத்தில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி

பெய்ஜீங்,செப் 28 சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள சாங்சுன் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று மதியம் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து […]

Continue Reading

முதன் முதலில் பொதுவெளியில் தோன்றிய வடகொரிய ஜனாதிபதி கிம்மின் மகள்

வடகொரியா,செப் 28 அணு ஆயுத சோதனைகளின்மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரிய ஜனாதிபதி  கிம் ஜாங் உன் மகள் முதமுதலில் பொது வெளியில் பார்வ்வைக்கு கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன. அதேவேளை கடந்த காலங்களில் வடகொரிய ஜனாதிபதிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு கோமாவில் உள்ளதாக தகவல்கள் வெளியானது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் பொது நிகழ்ச்சியில் தோன்றி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கிம் ஜாங் உன். அதேவேளை  கிம் ஜாங் உன்னுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. […]

Continue Reading