தீவிர காற்று மாசுபாட்டால் மூச்சுத் திணறும் பாகிஸ்தான்: கட்டாய ‘லாக்டவுன்’ அமல்

வட இந்தியாவிலும் அண்டை நாடான பாகிஸ்தானிலும் காற்று மாசுபாடு கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாபில் புகை மூட்டம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. நேற்று காலை அந்நகரில் காற்றின் தரக் குறியீடு 2000 என்ற அளவைத் தாண்டி மோசமடைந்தது. இதனால் நகரம் புகைமூட்டமாக காட்சி அளித்தது. பஞ்சாபின் அனைத்து முக்கிய நகரங்களிலும் காற்றின் தரம் கடுமையான அளவில் மோசமடைந்ததால் காற்றின் மாசு அளவைக் குறைக்க பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து […]

Continue Reading

ரோபோவுடன் 6-வது திருமண நாளை கொண்டாடிய ஜப்பானியர்

பொருத்தமான ஜோடி பலருக்கு அமைவதில்லை. அதனால் சிலர் ஒரே பாலினத்தவரையோ, பொம்மையையோ, விலங்கையோ திருமணம் செய்த அரிய நிகழ்வுகளை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதுபோல ஒரு ஜப்பானியர் ரோபோவை திருமணம் செய்து 6 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருவது ஆச்சரியம் அளிக்கிறது. அவர் திருமண தின விழாவை கொண்டாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வரைலாகி உள்ளது. 41 வயதான அகிஹிகோ கோண்டோ என்பவர் கடந்த 2018-ம் ஆண்டில் மிகு என்ற ரோபோ பொம்மையை திருமணம் செய்து […]

Continue Reading

டிரம்பை கொல்ல ஈரான் மீண்டும் சதி?

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்பை கொல்ல ஈரான் முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் அதை ஈரான் மறுத்தது. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பாக டிரம்பை கொல்ல ஈரான் சதி திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டிரம்பை கொல்ல ஈரானின் சதித்திட்டத்தை எப்.பி.ஐ முறியடித்தது. ஈரான் புரட்சிகர காவலர் படையை சேர்ந்த பர்ஹாத் ஷகேரியிடம் டிரம்பை கொல்லும் திட்டம் ஈரான் ஆட்சியால் வழங்கப்பட்டது. அவர் மீது வழக்குப் […]

Continue Reading

மனைவி + 4 காதலிகள்.. ‘நான் அவன் இல்லை’ படத்தை மிஞ்சிய மோசடி மன்னன்

உலகம் போகும் வேகத்தில் ஒரு திருமணம் செய்து வாழ்க்கை நடத்தவே அனைவரும் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சீன நபர் ஒருவர் மனைவி மற்றும் 4 காதலிகளுடன் ஒரே காம்பவுண்டுகள் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் குடிவைத்து 4 வருடங்களாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். ஜியாஜூன் என்ற அந்த நபர் வடகிழக்கு சீனாவில் உள்ள ஜீலின் மாகாணத்தை சேர்ந்தவர். பண வசதி இல்லாததால் உயர்நிலைப் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் அளவுக்கு மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்டவர் ஜியாஜூன். […]

Continue Reading

பிரேசில் நாட்டின் மிகப்பெரிய விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி- 3 பேர் காயம்

பிரேசில் நாட்டின் மிப்பெரிய விமானம் குவாருல்கோஸில் உள்ள சாவோ பவுலோ சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்திற்கு காரில் வந்த சிலர் திடீரென துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்கும் புகுந்து சரிமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் காயம் அடைந்தனர். கொலை செய்யப்பட்டவர் அன்டோனியா வின்சியஸ் லோபஸ் கிரிட்ஸ்பேச் என போலீசார் கண்டறிந்ததுள்னர். இவருக்கு சர்வதேச கிரிமினல் குரூப் கொலை மிரட்டல் விடுத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர் கிரிப்டோகரன்சி வணிகத்தில் […]

Continue Reading

அனைத்து கனடா இந்துக்களும் மோடியை ஆதரிக்கவில்லை- சீண்டிய ஜஸ்டின் ட்ரூடோ

இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்ததையடுத்து மோதல் போக்கு ஏற்பட்டது. சமீபத்தில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவோம் என்று கனடா அரசாங்கம் தெரிவித்ததால் இரு நாட்டு உறவில் விரிசல் அதிகரித்தது. இந்த நிலையில் ஒட்டாவாவில் இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கனடாவில் காலிஸ்தான் […]

Continue Reading

பாகிஸ்தான் ரெயில் நிலையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு: 24 பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரெயில் நிலையத்தில் இன்று காலை பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் சுமார் 24 பேர் பலியாகினர். 30 பேர் காயம் அடைந்தனர். ரெயில் ஒன்று நடைமேடைக்கு வருவதற்கு சற்று முன்னதாக பிளாட்பாரத்தில் குண்டு வெடித்தது முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. பெஷாவரில் இருந்து ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சரியாக 9 மணிக்கு வர இருந்தது. ரெயில் வந்திருந்தால் பலி எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கும். தற்கொலை படை மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால், […]

Continue Reading

பிரேசில் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

பிரேசிலின் மிகப்பெரிய விமான நிலையமான சாவோ பவுலோ சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு மகிழுந்தில் வந்த சிலர், திடீரென துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்து சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.  இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் காயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அந்நாட்டுக் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Continue Reading

பாகிஸ்தான் தொடருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு: 20 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா தொடருந்து நிலையத்தில் இன்று (09) காலை பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.  இதில் சுமார் 20 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயம் அடைந்தனர்.  தொடருந்து ஒன்று நடைமேடைக்கு வருவதற்குச் சற்று முன்னதாக குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  குண்டு வெடிப்பு ஏற்பட்ட போது தொடருந்து நிலையத்தில் சுமார் 100 பேர் இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  சம்பவம் தொடர்பில் அந்நாட்டுக் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Continue Reading

ஆம்ஸ்டர்டாமில் பரபரப்பு: கால்பந்து போட்டியை பார்க்க சென்ற இஸ்ரேல் ரசிகர்கள் மீது தாக்குதல்

ஆம்ஸ்டர்டாம்:9 நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ளூர் கால்பந்து அணியான அஜாக்சுக்கும், இஸ்ரேல் கால்பந்து அணிக்கும் இடையிலான போட்டி நடந்தது. இதில் இஸ்ரேல் அணி தோல்வி அடைந்தது. அதனால் இஸ்ரேல் ரசிகர்கள் கோஷமெழுப்பினர். போட்டி முடிந்து ஆம்ஸ்டர்டாம் நகரின் தெருக்களில் சென்ற இஸ்ரேல் ரசிகர்கள் மீது மர்ம நபர்கள் தாக்கினர். அவர்களில் சிலர் பாலஸ்தீன கொடிகளை ஏந்தியபடி கோஷமெழுப்பினர். கலவரத்தில் ஈடுபட்ட நெதர்லாந்தை சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, நெதர்லாந்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட […]

Continue Reading

சுனிதா வில்லியம்ஸ் நலமுடன் உள்ளார்: நாசா அறிக்கை

வாஷிங்டன்:8 நாசா திட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவ்ரி மாதம் பூமிக்கு […]

Continue Reading

நாடு முழுவதும் மின்சார நிறுத்தம்: நைஜீரிய மக்கள் அவதி

அபுஜா:8 ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சமீப காலமாக மின் உற்பத்தி குறைந்து வருகிறது. அதன்படி மின் உற்பத்தி 4 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்தது. அபுஜா, லாகோஸ் மற்றும் கனோ ஆகிய நகரங்களில் மின்சாரம் தடைபட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஏராளமான தொழிற்சாலைகளும் இந்த மின் நிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டில் இது 10-வது நாடுதழுவிய மின் நிறுத்தம் ஆகும். இதுகுறித்து மின்சாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பவர் கிரிட் செயலிழந்ததால் போதுமான […]

Continue Reading