பிரான்சில் சிறுமிகளை தற்கொலைக்கு தூண்டியதாக டிக்-டாக் செயலி மீது 7 வழக்குகள் பதிவு

பாரீஸ்:6 பிரபல சமூகவலைதள செயலியான ‘டிக்-டாக்’ தனியுரிமையை மீறுவதாக கூறி பல நாடுகள் அதற்கு தடை விதித்துள்ளன. இதற்கிடையே பிரான்சில் இரு சிறுமிகள் தற்கொலைக்கு டிக்-டாக் செயலி காரணமாக இருந்ததாகவும், 4 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து குழந்தைகளிடையே மன அழுத்தம், தற்கொலை போன்றவற்றை ‘டிக்-டாக்’ செயலி தூண்டுவதாக கூறி ‘டிக்-டாக்’ செயலிக்கு எதிராக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணை பாரீஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் […]

Continue Reading

‘கங்குவா’ போஸ்டரை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த சுரேஷ் ரெய்னா

சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர். கங்குவா படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. திரைப்படத்தின் இரண்டாம் பாடலான யோலோ பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடப்பெற்றது. […]

Continue Reading

இனி அமெரிக்காவிற்கு பொற்காலம்: அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் வெற்றி உரை!

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் வெற்றிக்கு 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். […]

Continue Reading

ஓட்டு போடாதவனுக்கு எதுக்கு கல்யாணம்..? வருங்கால மனைவி எடுத்த முடிவு!

வருங்கால கணவர் அமெரிக்க தேர்தலில் வாக்களிக்க மறுத்ததால் நிச்சயதார்த்தத்தோடு திருமணத்தை முடிக்க விரும்புவதாக பெண் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் […]

Continue Reading

34 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த குடும்பத்தை உதறித் தள்ளிய நபர்

34 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்த சீன நபர், ஒரு வருடத்திற்குப் பிறகு உறவைத் துண்டிக்க முடிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 37 வயதான யூ தனது பிறந்த குடும்பத்தை கண்டுபிடித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் அவரது உண்மையான பெயரைக் கண்டுபிடிக்கும் வரை 34 ஆண்டுகளாக லி கியாங் என்று அழைக்கப்பட்டார். அவர் இரண்டு வயதாக இருந்தபோது சிச்சுவான் மாகாணத்தில் உள்ள அவரது தாத்தா பாட்டி வீட்டில் இருந்து கடத்தப்பட்டு, மத்திய சீனாவின் […]

Continue Reading

அமெரிக்க தேர்தல் முடிவுகள்: இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை நிறைவுபெற்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 277 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆறஉ வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியா, கிழக்கு கடற்கரையில் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட […]

Continue Reading

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஹர்மன்பிரித் உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்

துபாய்:05 நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய பெண்கள் அணி கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இதில் இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இங்கிலாந்து 2வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன. […]

Continue Reading

லாகூரில் மோசமான நிலையை அடைந்த காற்றின் தரநிலை: தொடக்க பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடல்

பாகிஸ்தானில் உள்ள லாகூரில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில், தொடக்க பள்ளிகளை ஒருவாரத்திற்கு மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சுவாசம் மற்றும் அதன் தொடர்பான மற்ற நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லாகூரில் 1.4 கோடி பேர் வசித்து வருகிறார்கள். அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. க்ரீன் லாக்டவுன் என்பதின் ஒரு பகுதியாக 55 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மோட்டார் பொருத்தப்பட்ட ரிக்ஷா போன்றவைகளுக்கு […]

Continue Reading

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை: 9 பேர் உயிரிழப்பு

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் செயல்படும் பல எரிமலைகள் காணப்படுகின்றன. அவற்றில் சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு மலையேற்ற வீரர்கள் சாகசத்தில் ஈடுபடுவதால் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. இந்தநிலையில் மராபி எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறியது. எனவே அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் […]

Continue Reading

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா சண்டையால் லெபனானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது

இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியதில் இருந்து லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு அவ்வப்போது இஸ்ரேல் பதிலடி கொடுத்து வந்த நிலையில் கடந்த அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருகிறது. தரைவழி தாக்குதலும் நடத்தி வருகிறது. இதனால் கடந்த 13 மாதங்களில் இஸ்ரேல்- லெபனான் சண்டையில் லெபனானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்- […]

Continue Reading

இந்தியர்களுக்கு இனி விசா தேவையில்லை: தாய்லாந்து அரசு

தாய்லாந்து செல்லும் இந்தியப் பயணிகள் முன்னதாகவோ தாய்லாந்தில் இறங்கிய பிறகோ விசா பெற வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 11-ம் தேதி நிறைவடைய இருந்த விசா சலுகையை காலவரம்பின்றி தாய்லாந்து அரசு நீட்டித்துள்ளது. தாய்லாந்து அரசாங்கம் இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய குடிமக்கள் நீண்ட நாட்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கி வரலாம். 2024-ஆம் ஆண்டின் நவம்பர் 11-ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த விசா தளர்வு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின் படி […]

Continue Reading

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மத்தியில் கடல்வழியாக வட கொரியா ஏவுகணை சோதனை

உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று மாலை தொடங்குகிறது. இந்நிலையில் தென் கொரியாவையும் அதற்கு உதவும் அமெரிக்காவையும் பரம எதிரியாக கருதும் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்து சர்வதேச அரங்கில் பீதியை கிளப்பியுள்ளது. சமீப காலங்களாகவே அமெரிக்காவுக்கு தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல் விடுத்துவரும் வட கொரியா எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ரஷியாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. உக்ரைன் போர் சூழலில் ரஷியாவுக்கு […]

Continue Reading