உக்ரைன் இதை செய்தால் உடனடி போர் நிறுத்தம்: உறுதி அளித்த ரஷிய அதிபர் புதின்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. ரஷியாவுக்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முயற்சி மேற்கொண்டு வருகிறார். அமைதிக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஜி-20 மாநாடு நடைபெறும் இத்தாலிக்கு சென்று தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் உக்ரைன் இரண்டு விசயங்களை செய்தால் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படும் என ரஷிய […]

Continue Reading

நேபாளத்தில் நிலச்சரிவு- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

நேபாளத்தில் கடந்த திங்கட்கிழமை பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கிழக்கு நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. தப்லேஜங் மாவட்டம் பக்டாங்லங் ஊரக நகராட்சி பகுதியில் நேற்று இடைவிடாமல் மழை பெய்த நிலையில், நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவின் இடிபாடுகளில் 2 வீடுகள் புதைந்தன. இதில் ஒரு வீட்டில் இருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு மகள்களும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன. அந்த குடும்பத்தினரின் சுமார் 50 ஆடுகள் […]

Continue Reading

தென் கொரிய நூடுல்ஸ் வகைக்கு டென்மார்க் தடை

தென் கொரிய நூடுல்ஸ் (Noodles) வகை ஒன்றிற்கு டென்மார்க் தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  தென் கொரியாவிலுள்ள பிரபல நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனமொன்று, உலகின் அதிக காரமான சுவை கொண்ட நூடுல்ஸை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.  உலகம் முழுவதும் இந்த நூடுல்ஸ் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் காரம் மற்றும் சுவை காரணமாக இந்த நூடுல்ஸிற்கு கேள்வி அதிகரித்து வருகின்றது.  எனினும் இந்த நூடுல்ஸில் அளவிற்கதிகமான காப்சைசின் என்னும் வேதிப்பொருள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் டென்மார்க்கில் குறித்த வகை நூடுல்ஸிற்கு தடை […]

Continue Reading

கின்னஸ் சாதனை படைத்த உலகின் குள்ளமான ஜோடி

கின்னஸ் உலக சாதனை அமைப்பு குறிப்பிடத்தக்க சிலரது சாதனைகளை தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அந்த அமைப்பு, உலகின் குள்ளமான ஜோடியின் திருமணத்தை அங்கீகரித்திருப்பது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரேசிலை சேர்ந்த பவ்லோ கேப்ரியல் டி சில்வா- கட்யூசியா லி ஹோஷினோ ஜோடி உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என பெயர் பெற்றவர்கள். பவ்லோவின் உயரம் 90.28 சென்டி மீட்டர் (35.54 அங்குலம்) ஆகும். கட்யூசியாவின் உயரம் 91.13 […]

Continue Reading

இதுவரை 15 லட்சம் பேர்: ஹஜ் பயணிகளால் நிரம்பி வழியும் மெக்கா

மெக்கா:13 முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும். ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து இதுவரை 15 லட்சம் பேர் மெக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதுகுறித்து சவூதி அரேபிய அதிகாரிகள் […]

Continue Reading

பணிநீக்கம்: எல்லாத்துக்கும் காரணம் எலான் மஸ்க் தான்.. வெளியான புது தகவல்

2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். அப்பொழுது அவரது நெருங்கிய நண்பர்களான ஸ்டீவ் டேவிஸ் மற்றும் ஜேம்ஸ் மஸ்க்- ஐ டுவிட்டர் நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் நாம் தரும் சம்பளத்திற்கு தகுதியானவர்களா? என்று ஆராய கூறினார். அதன்படி டுவிட்டர் நிறுவனத்தில் பணிப்புரிந்த 80 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய அதிரடி முடிவை எடுத்தார். இந்த முடிவு காரணமாக ப்ராடக்ட் அண்ட் டிசைன் பிரிவில் பணியாற்றி வந்த […]

Continue Reading

இந்தோனேசியாவில் வடக்கு சுலாவேசியில் நிலநடுக்கம்- ரிக்டரில் 5.9 ஆக பதிவு

இந்தோனேசியா:13 இந்தோனேசியாவில் வடக்கு சுலாவேசி என்ற பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்கவில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12:01 மணியளவில் தலாட் தீவுகளின் வடமேற்கே 41 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் 32 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Continue Reading

நண்பரின் பதிவால் வாலிபருக்கு கிடைத்த ஜாக்பாட் பரிசு

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்தவர் மெல்வின் புருக்ஸ். இவர் சமீபத்தில் லாட்டரி சீட்டு வாங்கி இருந்தார். அதில் அவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3.34 கோடி பரிசு விழுந்தது. இதனால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு செய்திருந்தார். அதில், எனது நண்பரின் வலைதள பதிவு ஒன்றை பார்த்தேன். அதில் அவருக்கு லாட்டரியில் 100 டாலர் கிடைத்ததாக பதிவிட்டிருந்தார். எனவே நானும் லாட்டரி வாங்க […]

Continue Reading

ஜி7 மாநாடு: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வரவேற்ற இத்தாலி பிரதமர்

ரோம்:13 அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஜி7 ஆகும். ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இன்று முதல் 15-ம் தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி புறப்பட்டுச் செல்கிறார். அமெரிக்க அதிபர் ஜோபைடன், […]

Continue Reading

மனிதர்களுடன் வாழும் ஏலியன்கள்: பகீர் கிளப்பும் ஆய்வறிக்கை

வாஷிங்டன்:13 இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏதுவான வேறு ஏதேனும் கிரகம் உள்ளதா, மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் மற்ற கிரகங்களில் உள்ளனவா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. வேற்று கிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பது விஞ்ஞான உலகில் நீண்ட காலமாகவே நீடித்து வரும் வாதமாக உள்ளது. சூரிய மண்டலத்திற்கு அப்பால் ஏதேனும் ஒரு கோளில் ஏலியன்கள் இருப்பதாக ஒரு தரப்பினரும், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஏலியன்கள் என்பது […]

Continue Reading

குவைத் தீ விபத்துக்கு சிலிண்டர் வெடிப்பே காரணம்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் இறந்துள்ளதுள்ளனர். இதன்மூலம், தமிழகத்தை சேர்ந்தவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மை […]

Continue Reading

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 15,694 சிறுவர்கள் பலி!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் 250 நாட்களைக் கடந்துள்ள நிலையில் சுமார் 15,694 சிறுவர்கள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் 17,000 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5 வயதிற்குட்பட்ட 8,000 சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

Continue Reading