பால்டிமோர் துறைமுகம் 11 வாரங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு

அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் ஆற்றின் குறுக்கே சுமார் 2.6 கி.மீட்டர் தூரத்திற்கு மிகப் பிரமாண்ட பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் கட்டப்பட்டிருந்தது. இந்த பாலத்தை கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி 984 அடி நீளம் கொண்ட ராட்சத சரக்கு கப்பல் கடந்து செல்லும்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பாலத்தின் ஒரு பகுதியில் இடித்தது. இதனால் பாலத்தின் பெரும்பகுதி (சுமார் 700 அடி) சீட்டுக்கட்டு போல் சரிந்தது. இதனால் அமெரிக்காவின் முக்கியமான சரக்கு துறைமுகமாக விளங்கிய பால்டிமோர் […]

Continue Reading

உக்ரைன் போர்: ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய மேலும் 2 இந்தியர்கள் பலி

மாஸ்கோ:12 ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். இந்தியாவைச் சேர்ந்த பல இளைஞர்களும் ரஷிய ராணுவத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். ரஷியாவில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏஜெண்டுகள் இந்திய இளைஞர்களை அங்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால்வேலை வாங்கி தராமல் உக்ரைனுடன் சண்டையிட, ரஷிய ராணுவத்தில் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்று புகார் எழுந்தது. இதற்கிடையே சில […]

Continue Reading

குவைத்தில் பயங்கர தீ விபத்து- தமிழர்கள் உள்பட 41 பேர் உயிரிழப்பு

குவைத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். தீயை கட்டுக்குள் கொண்டுவர மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

Continue Reading

மணிப்பூரில் ரிக்டர் 3.4 அளவில் லேசான நிலநடுக்கம்

மணிப்பூர் மாநிலம் காம்ஜோங் மாவட்டத்தில் இன்று மாலை 5.32 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2-ந்தேதி மணிப்பூரின் சாந்தல் மாவட்டத்தில் ரிக்டர் 3.5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

ஹண்டர் பைடன் குற்றவாளி: தீர்ப்பை ஏற்கிறேன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

போதை பழக்கத்துக்கு அடிமையான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் மூலம் பதவியில் உள்ள அமெரிக்க அதிபரின் மகன் ஒருவர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த போது, மகனுக்கு எதிரான தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவரை மன்னிக்க மாட்டேன் என்று அதிபர் பைடன் தெரிவித்து இருந்தார். […]

Continue Reading

ரூ. 300 நகையை ரூ. 6 கோடிக்கு விற்ற பலே வியாபாரி – பெண் கதறல்

ராஜஸ்தானை சேர்ந்த நகை கடை உரிமையாளர் அமெரிக்க பெண்ணிடம் ரூ. 300 மதிப்புள்ள போலி நகையை ரூ. 6 கோடிக்கு விற்பனை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த செரிஷ் என்ற பெண் ஜெய்பூரில் உள்ள ஜோரி பஜாரில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகளை வாங்கியுள்ளார். ரூ. 6 கோடி கொடுத்து வாங்கிய நகைகளை அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சியில் செரிஷ் காட்சிப்படுத்த ஆயத்தமானார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது, […]

Continue Reading

பிரசவத்துக்கு போறேன்: ஒரு மாதத்துக்கு dinner-ஐ செய்து குவித்த பாசக்கார மனைவி

நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்கு செல்வதால் கணவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான இரவு உணவை தயாரித்ததாக எக்ஸ் தளத்தில் செய்த பதிவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பானை சேர்ந்த 9 மாத கர்ப்பிணி ஒருவர் கடந்த 21-ந்தேதி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு செய்திருந்தார். அதில், பிரசவத்திற்காக நான் பெற்றோர் வீட்டிற்கு செல்ல உள்ளேன். நான் இல்லாத நேரத்தில் எனது கணவர் சரியாக சாப்பிட மாட்டார் என்பதால் அவருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான […]

Continue Reading

போட்டிக்காக திருமணத்தை தள்ளிவைத்த 3 அடி உயர பாடகர்

தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அபு ரோசிக். 3 அடி உயரம் கொண்ட இவர் தடைகளை தகர்த்து தனது திறமையின் மூலம் பாடகராகவும் திகழ்கிறார். சமூக வலைதளங்களிலும் பிரபலமான இவர் இந்தியில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவருக்கும் தஜிகிஸ்தான் பாடகி அமீராவுக்கும் திருமணம் முடிவாகி கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது வருங்கால மனைவிக்கு மோதிரம் அணிவித்த புகைப்படத்தை அபு சமூக வலைதளங்களில் வெளியிட்டதோடு, ஜூலை […]

Continue Reading

இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு- உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீவா:12 இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் ஏவியன் இன்புளுயன்சா ஏ (எச்9என்2) என்ற வைரசால் ஏற்படக்கூடிய அரிய வகை பறவைக் காய்ச்சல் 4 வயது ஆண் குழந்தையை பாதித்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அரிதாக காணப்படும் இந்த வகை வைரஸ் இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 2-வது பாதிப்பு பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- பாதிக்கப்பட்ட குழந்தை கடந்த பிப்ரவரி மாதம் மூச்சுத்திணறல் […]

Continue Reading

காங்கோவில் பயங்கர விபத்து: நதியில் படகு மூழ்கி 86 பேர் பலி

கின்ஷாசா:12 ஆப்பிரிக்க நாடான காங்கோவின் மாய்-நிடோம்பே மாகாணத்தில், காங்கோ நதியின் கிளை நதிகளில் ஒன்றான குவா நதி பாய்கிறது. இந்த நதியில் நேற்று முன்தினம் இரவு மிகப்பெரிய படகு ஒன்று கவிழ்ந்து மூழ்கியது. முஷீ நகரில் இருந்து தலைநகர் கின்ஷாசா நோக்கி வந்த படகு, லெடிபா கிராமத்தின் அருகே வந்தபோது விபத்துக்குள்ளானது. படகில் பயணித்த அனைவரும் நதியில் விழுந்து தத்தளித்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் கரையை நோக்கி நீந்தினர். மற்றவர்கள் நதியில் மூழ்கினர். இதற்கிடையே, விபத்து குறித்து தகவல் […]

Continue Reading

வாரத்துக்கு 400 சிகரெட்டுகள் – ஓட்டையான சிறுமியின் நுரையீரல்

அதிகமாக சிகெரெட் பிடித்ததால் 17 வயது இளம்பெண்ணின் நுரையீரலில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 17 வயதாகும் கைலா பிளைத் ஒரு வாரத்துக்கு சாராசரியாக 400 இ-சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார் அதாவது ஒரு வாரத்துக்கு சற்றேறக்குறைய 4000 பஃப்- களை அவர் உள்ளிழுத்துள்ளார். இந்நிலையில் கடந்த மே 11 ஆம் தேதி தனது தோழியின் வீட்டில் இருந்தபோது கைலா, திடீரென வயிற்றில் ஏற்பட்ட கடுமையான வலியால் அலறித் துடித்து மயங்கி விழுந்தார். உடனே […]

Continue Reading

தொடரும் இஸ்ரேலியர்களின் கோரத்தாக்குதல்: ஹமாஸின் தீர்மானம்

இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலில் பிடிபட்ட மற்றும் பிணைக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை சுட்டுக் கொல்லுமாறு ஹமாஸ் தலைவர்கள் தங்கள் போராளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இஸ்ரேலியப் படைகள் வார இறுதியில் காஸா பகுதியில் உள்ள இரண்டு கட்டிடங்களை சுற்றி வளைத்து தாக்கி, ஹமாஸ் பிடியில் இருந்த நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்டனர். இஸ்ரேலியப் படைகள் பிணைக் கைதிகளை மீட்டு, 240 பலஸ்தீனப் பொதுமக்களைக் கொன்றனர். அதன்படி, இஸ்ரேல் படைகள் மீண்டும் இதுபோன்ற தாக்குதலை […]

Continue Reading