நடுவானில் குலுங்கிய விமானம்: காயமடைந்த பயணிகளுக்கு நிவாரணம் அறிவித்த நிறுவனம்

லண்டன்:11 லண்டனில் இருந்து சிங்கப்பூருக்குச் சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலையால் கடும் குலுக்கலை எதிர்கொண்டது. நடுவானில் நிலைதடுமாறி குலுங்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், போயிங் 777-300ER விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தது. இதனால் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் […]

Continue Reading

என் company-க்குள்ள ஒரு ஐபோன் கூட இருக்கக்கூடாது.. எலான் மஸ்க்

ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை தனது இயங்குதளங்கள் அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகத்திற்குள் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், “ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை ஓ.எஸ். அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும். இது ஏற்றுக் கொள்ளவே முடியாத பாதுகாப்பு விதிமீறல். என் நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும். […]

Continue Reading

100 வயதில் காதலியை கரம்பிடித்த போர்வீரர்

இரண்டாம் உலக போரில் பங்கேற்ற அமெரிக்க முன்னாள் போர் வீரர் ஒருவர் தனது 100 வயதில் காதலியை கரம் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹரால்டு டெரன்ஸ் என்ற அந்த வீரர் தனது 100-வது வயதில், 96 வயதாகும் தனது காதலியான ஜீன்ஸ்வெர்லினை கரம் பிடித்துள்ளார். பிரான்ஸ்சில் நார்மாண்டி பகுதியில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த நகரத்தின் மேயர், ஹரால்டு டெரன்ஸ்-ஜீன்ஸ்வெர்லின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் […]

Continue Reading

ஹிஜாப் அணியத் தடை – வேலையை இராஜிநாமா செய்த ஆசிரியை

இந்தியா – கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் சட்டக் கல்லூரியில் ஆசிரியை ஒருவருக்கு ஹிஜாப் அணிய தடை விதித்ததால் அவர் பணியிலிருந்து விலகியுள்ளார். தனியார் சட்டக் கல்லூரியில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் ஆசிரியை சஞ்சிதா காதர், கடந்த மே 31 முதல் பணியிடத்தில் ஹிஜாப் அணிய கல்லூரி நிர்வாகம் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 5 முதல் பணியிலிருந்து இராஜிநாமா செய்வதாக ஆசிரியைத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பொதுவெளியில் கல்லூரி […]

Continue Reading

சுனிதா வில்லியம்ஸின் உயிருக்கு ஆபத்தா?- விண்வெளி மையத்தில் ஆபத்தான பாக்டீரியா கண்டுபிடிப்பு

போயிங் நிறுவனம் வடிவமைத்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சுமந்து கொண்டு விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி ஜூன் 5 அன்று புறப்பட்டுச் சென்றது. 25 மணி நேர பயணத்திற்குப் பிறகு ஜூன் 6 அன்று அவர்கள் விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். இந்த சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தன்னுடன் சுடச்சுட மீன் குழம்பை சுனிதா வில்லியம்ஸ் எடுத்துச் சென்றுள்ளார். மீன் குழம்பு எடுத்து […]

Continue Reading

‘வயாகரா’ குறித்த புதிய ஆய்வு: மருத்துவ உலகையே புரட்டிப்போடும் முடிவுகள் வெளியீடு

ஆண்களின் விறைப்புத்தன்மைக்கு பயன்படுத்தப்படும் பிரபலமான மருந்தான வாயாகரா குறித்த சுவாரஸ்யமான ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சில்தெனாபில் (Sildenafil) என்ற மருத்துவப் பெயருடைய இந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரான வாயாகராவே மருந்தின் பெயராக வெகுஜனத்தின் மத்தியில் அறியப்படுகிறது. வயாகரா உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்த நாளங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் ரத்த நாளங்கள் தளர்வதால் மனித மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் வாஸ்குலார் டிமென்ஷியா (Vascular Dementia) என்று […]

Continue Reading

இஸ்ரேலிய தாக்குதலில் 274 பாலஸ்தீனியர்கள் பலி: ஹமாஸ் சுகாதார அமைச்சு!

காசாவில் இஸ்ரேல் நடத்திய அண்மைய தாக்குதலில் 274 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கும் நோக்கில் இஸ்ரேல் குறித்த தாக்குதலை நடத்தியிருந்தது.  இந்த தாக்குதலில் அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் ஹமாஸ் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.  குறித்த தாக்குதலில் 100ற்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

Continue Reading

பெல்ஜியம் பிரதமர் பதவி விலகினார்

பெல்ஜியம் நாட்டின் பிரதமராக இருந்தவர் அலெக்சாண்டர் டி குரூ. 48 வயதான இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேசிய மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி படுதோல்வி அடைந்ததையொட்டி அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார். இது தொடர்பாக பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் அவர் கூறும் போது, “தேர்தல் பிரசாரத்தில் நான் முக்கிய தலைவராக இருந்தேன். இது நான் எதிர்பாராத முடிவு. எனவே இதற்கு நானே பொறுப்பேற்கிறேன். இன்று முதல் நான் எனது பிரதமர் பதவியை […]

Continue Reading

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பிறந்தநாள் இன்று

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனம் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சைக்கு இன்று பிறந்த நாள். ஜூன் 10, 1972 ஆம் ஆண்டு பிறந்த சுந்தர் பிச்சைக்கு இன்று 52 வயதாகிறது. பிறப்பு மற்றும் கல்வி சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில், மதுரை மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார். இவர் சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் […]

Continue Reading

ஒலிப்பெருக்கி மூலம் எதிர்ப்பு பிரசாரம் – 300 பலூன்களில் குப்பையை அனுப்பிய வட கொரியா

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தென் கொரிய எல்லைக்குள் குப்பைகளால் நிரம்பிய 300-க்கும் அதிக ராட்சத பலூன்களை வட கொரியா அனுப்பியுள்ளது. முன்னதாக கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங் எல்லை பகுதியில் ஒலிப்பெருக்கிகள் மூலம் பிரசாரம் செய்வதை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஒலிப்பெருக்கி பிரசாரம் செய்வதால் தேவையற்ற பிரச்சினைகள் எழலாம் என்று அவர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மிக அபாயகரமான […]

Continue Reading

அமெரிக்காவிலும் பிரபலமான பானிபூரி

வட இந்தியாவில் மிகவும் பிரபலமான, தெருவோர கடைகளில் தயாரிக்கப்படும் பானிபூரி தற்போது நாடு முழுவதும் தெருவோர கடைகளில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலும் பானிபூரி பிரபலமாகி வருகிறது. அங்குள்ள மினியாபோலிஸ் பகுதியில் ஒரு இந்திய உணவகத்தில் இந்த சிற்றுண்டி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதனை அங்குள்ள இளைஞர்களும், உள்ளூர் மக்களும் விரும்பி சாப்பிடும் காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது. சுமார் 39 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 90 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களையும் குவித்த இந்த வீடியோவை பார்த்த […]

Continue Reading

ஆழ்கடலில் ஏலியன் உருவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உயிரினம்

உலகில் முதல் உயிர் என்பது முதலில் கடலில் தோன்றியதாக கருதப்படுகிறது. பூமியின் 71 சதவீத இடத்தை ஆக்கிரமித்திருக்கும் நீர் பலட்சக் கணக்கான வித்தியாச வித்தியாசமான உயிரினங்களின் இருப்பிடமாக உள்ளது. ஆழ்கடலுக்குள் ஒளிந்திருக்கும் எண்ணிலடங்கா அதிசயங்கள் நம்மை வகையில் அவ்வபோது கண்டுபிடிக்கப்பட்டு நம்மை ஆச்சரியப்படுத்தி வருகின்றன. புதிதாக கண்டுபிடிக்கப்படும் விநோதமான உயிரினங்கள் மனிதன் இயற்கையை குறித்து அறிந்தது சொற்பமே என்று புலப்படுத்துகிறது. தற்போது பசிபிக் பெருங்கடலில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய உயிரினம் மனிதர்களால் வர்ணிக்கப்படும் ஏலியன் போன்ற தோற்றத்தில் […]

Continue Reading