அமெரிக்காவை எச்சரித்தது வடகொரியா

அமெரிக்க ஜனாதிபதி கடுமையான கருத்துக்களை தொடர்ந்தும் வெளியிடும் பட்சத்தில், அந்நாடு பேரழிவை எதிர்கொள்ள நேரிடுமென வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி இன்று வடகொரியாவிற்கு பயணிக்கவுள்ள நிலையில் வடகொரியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணைகளை ஜப்பான், அமெரிக்க ஆயுதங்களினால் சுட்டு வீழ்த்துமென ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியா, அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்டி ஒரு உறுதியான மற்றும் இரக்கமற்ற தண்டனையை விதிக்க நேரிடுமென கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

Continue Reading

கேட்டலோனியா தலைவரை விடுவிக்க உத்தரவு

தப்பியோடிய கேட்டலோனியா தலைவர் கார்லஸ் புக்டிமான்ட் மற்றும் 04 முன்னாள் அமைச்சர்களை பெல்ஜியம் நீதிமன்றம் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஸ்பெயினில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கேட்டலோனியா மாகாணம் சுதந்திரம் கேட்டு மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தியதில், வெற்றி பெற்ற நிலையில், கேட்டலோனியா ஒரு தனிநாடு என அறிவிக்கப்பட்டது. அதை ஏற்காத ஸ்பெயின் பிரதமர் மரியானோ ராஜேஸ், கேட்டலோனியா பாராளுமன்றத்தைக் கலைத்து அதை ஸ்பெயினின் நேரடி மேற்பார்வையில் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, கேட்டலோனியா தலைவர் கார்லஸ் புக்டிமான்ட் மற்றும் 04 முன்னாள் […]

Continue Reading

குட்டி இளவரசரை குறிவைக்கும் ஐ.எஸ். தீவிரவாதம்

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொலைப்பட்டியலில் பிரிட்டனின் குட்டி இளவரசர் ஜோர்ஜ் பெயரும் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் – கேத் மிடில்டன் தம்பதியின் 04 வயது மகனும் குட்டி இளவரசருமான ஜோர்ஜின் பெயர் ஐ.எஸ். கொலைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஐ.எஸ். அமைப்பு உறுப்பினர்கள் சமூக வலைத்தளத்தில் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளதாகவும், இந்த மிரட்டல் செய்தி அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ். அமைப்பினரின் அடுத்த இலக்கு குட்டி இளரவசர் ஜோர்ஜ் என்பது இந்த […]

Continue Reading

விவசாயிகளுக்கு உதவிய ஒபிலியா புயல்

அயர்லாந்தில் ஏற்பட்ட ஒபிலியா புயலால் விவவசாயிகள் நன்மைடைந்துள்ளனர். ஒபிலியா புயலால் கட்டிடங்கள், வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ள போதிலும், டிப்பெயரி பகுதி ஆப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு மட்டும் நன்மை கிடைத்துள்ளது. இந்த சீசனில் ஆப்பிள்கள் அதிகமாக தோட்டத்தில் விளைந்திருந்தன. இதனைப் பறிப்பது என்பது பல வாரங்களுக்கு செய்ய வேண்டிய கடினமான பணியென விவசாயிகள் நினைத்திருந்த போது, ஒபிலியா புயல் ஒரே இரவில் அனைத்து ஆப்பிள்களையும் நிலத்தில் தள்ளிவிட்டது. மழையில் ஆப்பிள்கள் அடித்துச் செல்லப்படாமல், போர்வை விரித்ததுபோல் நிலமே தெரியாதவாறு […]

Continue Reading

ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்துவோம் – வடகொரியா மிரட்டல்

பசுபிக் பெருங்கடல் பகுதியில் நிச்சயம் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தப்படுமென வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா சக்திவாய்ந்த அணுகுண்டுகளை அவ்வப்போது சோதித்து வருகிறது. அதில் பெரும்பாலானவை அமெரிக்காவின் அலாஸ்காலை குறிவைத்தே இடம்பெறுவதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்ததுடன், வடகொரியா மீது ஐ.நா பொருளாதார தடைவிதிக்கவும் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்காவின் மிரட்டல், பொருளாதார தடையால் கோபமடைந்த வடகொரியா தனது அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து, தொடர்ந்தும் […]

Continue Reading

ஆஸி. துணைப் பிரதமர் தகுதி நீக்கம்

அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் பார்னபி ஜோய்ஸ் இரட்டைக் குடியுரிமையுடன் தேர்தலில் போட்டியிட்ட காரணத்திற்காக அந்நாட்டு நீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்துள்ளது. பார்னபி ஜோய்ஸ் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தின் குடியுரிமையைப் பெற்றுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட்டு வென்றதாக வழக்கு தொடரப்பட்டது. அவுஸ்திரேலிய சட்டப்படி இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஜோய்ஸ் மட்டுமல்லாமல் இதே குற்றச்சாட்டின் கீழ் 07 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் ஜோய்ஸ் […]

Continue Reading

சொந்த நாடுகளுக்குச் செல்லும் ஐ.எஸ் ஆதரவாளர்கள்

கடந்த 02 வருடகாலப் பகுதியில் சிரியா மற்றும் ஈராக் உட்பட பல நாடுகளில் இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் தமது சொந்த நாடுகளுக்கு சென்றுள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான புள்ளிவிபர அமைப்பொன்று தெரிவித்துள்ளது. 33 நாடுகளில் தங்கியிருந்த குறைந்தது 5,600 பேர் நாடு திரும்பியுள்ளதாக அந்த அமைப்பினால் இன்று விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உருவான காலம் முதல் 100 நாடுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் […]

Continue Reading

ட்ரம்பிற்கு எதிர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அவரது கட்சியான குடியரசு கட்சியிலேயே எதிர்ப்புகள் அதிகரித்து வருவதாக சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே டொனால்ட் ட்ரம்பின் செயற்பாடுகள் தொடர்பில் குடியரசு கட்சியின் செனட் சபை உறுப்பினர் பொப் கோர்கெர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், தற்போது குடியரசு கட்சியின் அரிசோனா மாநில செனட் உறுப்பினர் ஜெஃப் ஃப்ளேக்கும் டொனால்ட் ட்ரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார். அரசாங்கத்தின் உயர்மட்ட தலைமையின் செயற்பாடுகளும் நடத்தையும் அபாயகரமானது என்றும், ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், தாம் மீண்டும் […]

Continue Reading

மிதமான போக்கைக் கடைப்பிடிக்க சவூதி தீர்மானம்

சவுதி அரேபியா விரைவில் மிதமான இஸ்லாமியத்திற்கு திரும்புமென அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்ற சவுதி – சர்வதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தக முதலீடுகள் குறித்த நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், சவுதி அரேபியா மிதமான இஸ்லாமியத்திற்கு விரைவில் திரும்பி அனைத்து மதங்களுக்கும் திறந்த நுழைவாயிலாக இருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தீவிரவாத எண்ணங்களை ஊக்குவிப்பவர்களை ஒழிக்கும் நடவடிக்கையிலும் சவுதி ஈடுபடவுள்ளதாக சல்மான் தெரிவித்துள்ளார். சவுதியில் பெண்களுக்கு எதிராக […]

Continue Reading

தண்டவாளம் இல்லாத ரயில் சேவை

சீனாவின் ஹ{னான் மாகாணத்தில் தண்டவாளமே இல்லாமல் இயங்கும் ஸ்மார்ட் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் மற்றும் மோனோ ரயில் போன்ற எவ்வித பிடிமானமும் இல்லாமல், தண்டவாளம் கூட இல்லாமல் இயங்கும் இந்த ஸ்மார்ட் ரயில் ஜுஜூ பகுதியில் முதற்கட்டமாக சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில் உற்பத்தி நிறுவனமான சி.ஆர்.ஆர்.சி. கார்ப்பரேஷன் லிமிட்டட் நிறுவனம் இந்த ஸ்மார்ட் ரயிலை தயாரித்துள்ளது. ரயில் செல்ல வேண்டிய வழித்தடம் சாலையில் வெண்ணிற கோடுகளாகக் காணப்படுகிறது. […]

Continue Reading

வடகொரியாவுக்குப் பதிலளிக்கத் தயார்

வடகொரியாவால் விடுக்கப்படும் அச்சுறுத்தல் தீர்மானமிக்கதும், நிச்சயமாக நடைபெறக் கூடியதுமாகுமென ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிலிப்பைன்ஸில் இடம்பெறும் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டில் உரையாற்றியபோதே ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுநோர் ஒனோடேரா இதனைத் தெரிவித்துள்ளதுடன், வடகொரியாவின் இந்த அசாதாரணமான அச்சுறுத்தல்களுக்கு எந்த நேரத்திலும் பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை, அமெரிக்க மற்றும் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர்களை சந்தித்தபோது அவர் இது குறித்து கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Continue Reading

மியன்மார் மீது பொருளாதாரத் தடை

ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் தொடர்பில் மியன்மார் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக, பொருளாதார தடை விதிப்பது தொடர்பில் அமெரிக்கா அவதானம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மியன்மாரின் ரொக்கின் பிராந்தியத்தில் வாழும் ரோஹின்கியா முஸ்லிம் மக்கள் மிகவும் துன்பத்திற்கு முகங்கொடுத்துள்ள நிலையில், மியன்மாருடனான இராணுவ பயிற்சியை நிறுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Continue Reading