பாகிஸ்தானில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு: 59 பேர் பலி

இஸ்லாமாபாத்,ஜுலை 10 பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் பலூசிஸ்தான், கைபர் பக்துவா ஆகிய மாகாணங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக 8 அணைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நகரங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பல சாலைகள் துண்டிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 59 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Continue Reading

நியூசிலாந்திலும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு

நியுசிலாந்து,ஜுலை 10 ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 55-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர். இந்த நோய் இப்போது நியூசிலாந்திலும் நுழைந்திருக்கிறது. அங்கு ஆக்லாந்தில் வசிக்கிற 30 வயதான ஒரு நபருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர் குரங்கு அம்மை நோய் தாக்கத்திற்கு ஆளாகியுள்ள வெளிநாடு ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பியவர் என தகவல்கள் கூறுகின்றன. இப்படி குரங்கு அம்மை பாதித்துள்ள நாடுகளுக்கு […]

Continue Reading

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் போட்டி

லண்டன், ஜுலை 9 இங்கிலாந்து உயர் பதவிக்கு இரண்டு இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் போட்டியிடுகின்றனர். ரிஷி சுனக் மற்றும் சுயெல்லா பிராவர்மேன் இருவரும் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரபல ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மருமகனான ரிஷி சுனக்(49 வயது), பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் போட்டியில் களம் காணும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போட்டியாளர்களில் ஒருவர். அவருக்கு போட்டியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேனும் களம் காணுகிறார். சுயெல்லா […]

Continue Reading

டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட்டார் எலான் மஸ்க்

வாஷிங்டன், ஜுலை 9 உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டரை வாங்க முடிவு செய்தார். இதையடுத்து, 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு டுவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கிடையே, டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி டுவிட்டர் […]

Continue Reading

ஜப்பான் முன்னாள் பிரதமர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததற்கு ஐ.நா. இரங்கல்

டோக்கியோ, ஜுலை 9 ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே (வயது 67). கடந்த 2006-07, 2012-20 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானின் பிரதமர் பதவி வகித்தவர். இவர், நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரெயில் நிலையம் முன்பு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஷின்ஜோ அபே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசத்தொடங்கிய சில நிமிடங்களில், அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நபர் […]

Continue Reading

தினமும் 10 லட்சம் போலி கணக்குகள் நீக்கம் டுவிட்டர் நிறுவனம் தகவல்

சான்பிரான்சிஸ்கோ, ஜுலை, 09 அண்மை காலமாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்த போலி கணக்குகள் பெரும்பாலும் மோசடி செய்வதற்கும், தவறான தகவல்களை பரப்புவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் டுவிட்டரில் போலி கணக்குகள் விவகாரம் தொடர்ந்து பிரச்சினையாக இருந்து வருகிறது. டுவிட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்ட உலகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டரில் 5 சதவீதம் போலி கணக்குகள் மட்டுமே […]

Continue Reading

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் போட்டி

லண்டன், ஜுலை 8 இங்கிலாந்து பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துள்ள போரிஸ் ஜான்ஸனுக்கு அடுத்தபடியாக, அந்தப் பதவியைப் பெற போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வெளிவிவகாரங்களுக்கான சிறப்புக் குழு தலைவராக பொறுப்பு வகித்து வரும் டாம் டுகென்தாட்டும் பிரதமா் பதவிக்கான போட்டியில் பங்கேற்கப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா். அதைடுத்து இங்கிலாந்தின் அடுத்த பிரதமரைத் தோந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி நடத்தவிருக்கும் வாக்கெடுப்பில் பங்கேற்கவிருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, நிதிமந்திரி பதவியிலிருந்து அண்மையில் […]

Continue Reading

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான ஜப்பான் முன்னாள் பிரதமர் உயிரிழப்பு

டோக்கியோ, ஜுன் 8 ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த 67 வயதான அபே, பிரசார உரையின் போது இன்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார். இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு மரணித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அபே மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 40 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் இச்சம்பவம் இன்று(8) ஜப்பானிய நேரப்படி முற்பகல் 11.30 அளவில் இடம்பெற்றுள்ளது. […]

Continue Reading

முன்னாள் ஜப்பான் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு

டோக்கியோ, ஜுலை 8 ஜப்பானின் முன்னாள்  பிரதமர் ஷின்சோ அபே, மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக ஜப்பானை தளமாகக் கொண்ட ஊடக நிறுவனமான NHK தெரிவித்துள்ளது.  இதனையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Continue Reading

இங்கிலாந்துடனான உறவு வலுவாக உள்ளது: ஜோ பைடன் உறுதி

கொழும்பு, ஜுலை 8 வாஷிங்டன், ஜுலை 8 பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவரது அமைச்சரவையில் இருந்து வெளியேறினர். இதனால் பெரும்பான்மை ஆதரவை இழந்ததால் போரிஸ் ஜான்சன், பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்வரை போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரிட்டன் அரசுடன் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பை வழங்க ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க […]

Continue Reading

இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

ரோம், ஜுலை 8 ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று ஆல்ப்ஸ் மலைத்தொடராகும். இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. சுற்றுலாதளமான இந்த மலைத்தொடரில் மலையேறுதல், பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகசங்களில் பலர் ஈடுபடுவார்கள். இத்தாலி நாட்டில் வழியாக செல்லும் இந்த மலைத்தொடரில், சுமார் 3300 மீட்டர் உயரத்தில் மர்மலாடா என்ற சிகரம் உள்ளது. புன்டா ரோக்கா எனற பகுதி வழியாக இந்த சிகரத்தை அடையலாம். இந்த பகுதியில் பலர் மலையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். […]

Continue Reading

ஐநா அகதிகள் தலைவர் உக்ரைனுக்கு பயணம்

உக்ரைன், ஜுலை 08 ஐநா அகதிகள் தலைவர் ஃபிலிப்போ கிராண்டி உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் அங்குள்ள இர்பின் மற்றும் புச்சா ஆகிய நகரங்களுக்கு சென்று பார்வையிட்டார். இது குறித்து ஃபிலிப்போ கிராண்டி கூறுகையில், உக்ரைனில் ஆயிரக்கணக்கான வீடுகளை ரஷிய படைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் உக்ரைன் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்தன் காரணமாக உலகளவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]

Continue Reading