ஈரானில் அடுத்தடுத்து 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி

தெஹ்ரான்,ஜுலை 02 ஈரான் நாட்டின் தெற்கே ஹார்முஜ்கன் மாகாணத்தில் ரிக்டரில் 6.0க்கும் கூடுதலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்டு உள்ளன. இதன்படி, முதல் நிலநடுக்கம் இன்று அதிகாலை ரிக்டரில் 6.1 அளவில் பதிவானது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து சில மணிநேரம் கழித்து ரிக்டரில் 6.3 அளவிலான 2 கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக ரிக்டரில் 4.0க்கும் கூடுதலான நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து உணரப்பட்டு உள்ளன. இதனால் […]

Continue Reading

ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பரவும் அபாயம்

மாஸ்கோ,ஜுலை 02 உலக சுகாதார அமைப்பின் தலைவர் மெலிடா உஜ்னோவிக், ரஷிய செய்தி ஊடகம் ஸ்புட்னிக்கிடம் பேசும்போது, மண்டல அளவில், உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி, ஐரோப்பிய பகுதியில் குரங்கு அம்மை பரவ கூடிய ஆபத்து அதிகம் உள்ளது. அனைத்து நாடுகளும் புதிய பாதிப்புகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த தொடர்பில் உள்ளவர்களையும் கண்டறிய வேண்டும். அதன் அதிவேக பரவலை தடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார். இங்கிலாந்து, ஸ்பெயின், […]

Continue Reading

சிரியாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 2 பேர் காயம்

டமாஸ்கஸ்,ஜுலை 02 சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. கடந்த பல ஆண்டுளில் வேலை இல்லா திண்டாட்டம், போதிய மருத்துவ வசதி, உணவு பற்றாக்குறை என சிரியா அதிகளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் பிரிவினையை தூண்டும் செயல்களில் மட்டுமே அரசு மொத்த கவனமும் வைத்திருந்தது. இதனால் கிளர்ச்சியாளர்கள் பெருகினர். அவர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை அழிக்கும் வேலையில் ஆசாத் அரசு இறங்கியது. அரசுக்கு உதவியாக […]

Continue Reading

ஸ்பெயினில் பற்றி எரியும் காட்டுத்தீ

ஸ்பெயின், ஜுன் 02 ஸ்பெயினில் சண்ட் அண்டொனி டி கலொன்ங் நகரில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக, நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். சுமார் 70 ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்கள் சேதமாகி உள்ளதால், காட்டுத்தீயை கட்டுப்படுத்த, அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கோஸ்டா பிராவாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.

Continue Reading

உக்ரைனின் பாம்பு தீவு மீது ரஷியா போர் விமானம் மூலம் குண்டு வீச்சு

கீவ், ஜுலை 02 உக்ரைன் மீது ரஷியா 129-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையில், உக்ரைனின் எல்லையில் உள்ள கருங்கடல் பகுதியில் பாம்பு தீவு உள்ளது. இந்த பாம்பு தீவை போரில் ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து உக்ரைன் படைகள் […]

Continue Reading

இந்தியாவின் ‘உண்மையான நண்பன்’ என தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி: நப்தாலி பென்னட்

ஜெருசலேம், ஜுலை 02 இஸ்ரேல் நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. அங்கு நவம்பர் 1-ந் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த நாடு 4 ஆண்டுகளில் 5-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. இஸ்ரேல் பிரதமரரக இருந்த நப்தாலி பென்னட் அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். அவரது அரசில் வெளியுறவு மந்திரி பதவி வகித்த யாயிர் லாபிட், காபந்து அரசின் பிரதமராகி உள்ளார். இந்த நிலையில், “இந்தியாவின் உண்மையான நண்பராக இருப்பதற்கு […]

Continue Reading

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு: 4 ஆண்டுகளில் 5 ஆவது தேர்தலை சந்திக்கிறது

ஜெருசலேம், ஜுலை 01 இஸ்ரேல் நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக அரசியல் ஸ்திரமற்ற நிலை நிலவி வருகிறது. அங்கு சித்தாந்த ரீதியில் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் கூட்டணியை வைத்துக் கொண்டு, 12 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்தவர், பெஞ்சமின் நேட்டன்யாகு. இவர் லிகுட் கட்சியின் தலைவர் ஆவார். அங்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ந் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் 2 ஆண்டுகளில் நடந்த 4-வது பொதுத் தேர்தல் ஆகும். இந்த […]

Continue Reading

அனைத்து மதங்களையும் மதித்தால் ஒற்றுமையுடன், அமைதியாக வாழலாம்: ஐ.நா

நியூயார்க், ஜீலை 01 ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கன்னையா லால் என்பவரை, ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் கொலை செய்து, அதை ‘வீடியோ’ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், உதய்பூரில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றியும், சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட, ‘தனியார் செய்தி நிறுவனத்தின்’ இணை நிறுவனர் முகமது சுபைர் கைது குறித்தும், ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் […]

Continue Reading

நிலக்கரி தேவை அதிகரிப்பால் சுரங்கப் பணிகளை தொடர செக் குடியரசு முடிவு

ப்ராக், ஜுலை 01 உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து ரஷிய நிலக்கரியை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்யதது. இதன் காரணமாக செக் குடியரசு நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்தாக, செக் குடியரசு தனது நிலக்கரி சுரங்கங்களில் பணியை நிறுத்தி வைக்க திட்டிமிட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் அந்த சுரங்கங்களில் மீண்டும் பணியை தொடர அந்நாடு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் நிதி மந்திரி தெரிவிக்கையில், நாட்டின் […]

Continue Reading

நிலக்கரி தேவை அதிகரிப்பால் சுரங்கப் பணிகளை தொடர முடிவு

ப்ராக்,ஜுன் 30 உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து ரஷிய நிலக்கரியை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்யதது. இதன் காரணமாக செக் குடியரசு நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்தாக, செக் குடியரசு தனது நிலக்கரி சுரங்கங்களில் பணியை நிறுத்தி வைக்க திட்டிமிட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் அந்த சுரங்கங்களில் மீண்டும் பணியை தொடர அந்நாடு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் நிதி மந்திரி தெரிவிக்கையில், நாட்டின் வடக்கு […]

Continue Reading

நேட்டோ நாடுகள் மீது ரஷியா: சீனா குற்றச்சாட்டு

மாட்ரிட்,ஜுன் 30 நேட்டோ நாடுகளின் உச்சிமாநாடானது, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிடில் நேற்றுடன் நடைபெற்று முடிவடைந்தது. இதில் சைபர் தாக்குதல்கள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட எண்ணற்ற அச்சுறுத்தல்களால் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளது என்று நேட்டோ நாடுகள் எச்சரிக்கையை வெளியிட்டது. நேட்டோ உறுப்பினர் நாடுகளாக சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு துருக்கி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, துருக்கி தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டது. இதனையடுத்து, நேட்டோ […]

Continue Reading

போலந்தில் நிரந்தர இராணுவத்தளத்தை அமைக்க அமெரிக்கா திட்டம்

அமெரிக்கா,ஜுன் 30 போலந்து நாட்டில் நிரந்தர இராணுவத் தளமொன்றை அமைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஸ்பெயினில் இடம்பெற்று வரும் நேட்டோ அமைப்பின் மாநாட்டின் போதே இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை அடுத்து, இந்த விடயம் தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை,வெளிநாட்டு ஊடகங்களை முடக்கும் செயற்பாட்டை இலகுவாக்கும் வகையில் ரஷ்ய நாடாளுமன்றம் சட்டமொன்றை நிறைவேற்றியுள்ளது. யுக்ரேன் மீதான யுத்தத்தின் காரணமாக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சட்டம் […]

Continue Reading