மோதல் தவிர்ப்பு நிறைவு

முஸ்லிம்களின் பெருநாளான ஈகைத் திருநாளை முன்னிட்டு, தலிபான்களால் ஆப்கானிஸ்தானில் முன்னெடுக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு, நேற்று முன்தினம் (17) இரவுடன் முடிவுக்கு வந்ததாக சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன. இம்மோதல் தவிர்ப்பை நீட்டிக்குமாறு, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டே, இது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரசாங்கத்தால் 07 நாட்களுக்கான மோதல் தவிர்ப்பு அமுல்படுத்தப்பட்டிருந்ததைத் தொடர்ந்தே, 03 நாட்களுக்கான மோதல் தவிர்ப்பை, தலிபான்கள் கடைப்பிடித்திருந்தனர். அரசாங்கத்தின் மோதல் தவிர்ப்பு, இன்றுடன் (19) நிறைவுக்கு வரவிருந்த நிலையில், மேலும் […]

Continue Reading

இந்திய – பாகிஸ்தான் ஜனாதிபதிகள் சந்திப்பு

சீனா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசைனை சந்தித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் நேற்று ஆரம்பமானது. அதில் கலந்து கொள்வதற்காக பல நாட்டுத் தலைவர்கள் சீனா சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு மாநாட்டின் மேடையில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

அமெரிக்க – ரஷ்ய ஜனாதிபதிகள் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பொன்று விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பு குறித்த திகதி விரைவில் அறிவிக்கப்படுமென ரஷ்ய ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த தீர்மானம் இருநாட்டு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் ஒன்றின் போதே தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சந்திப்பின் போது, சிரிய விவகாரத்தால் அமெரிக்கா – ரஷ்யா நாடுகளுக்கிடையிலான முறுகல் நிலை உள்ளிட்ட […]

Continue Reading

தாம் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை – புட்டின்

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிளவை ஏற்படுத்த ரஷ்யா முயற்சி எடுக்கவில்லையென அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார். அவர் ஒஸ்ட்ரியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், அந்த நாட்டின் ஊடகம் ஒன்றுக்கு இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஐக்கியமும், செல்வச்செழிப்பும் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தையே தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள புட்டின், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே ரஷ்யாவின் முக்கிய வர்த்தக மற்றும் பொருளாதார பங்காளியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Continue Reading

ஜோர்தான் பிரதமர் பதவி விலகல்

ஜோர்தானின் புதிய வருமான வரிச்சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஹானி அல் முல்கி பதவி விலகியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்புடன் பிரதமரால் கொண்டுவரப்பட்ட வருமான வரிச்சட்டம் நாட்டு மக்களை வெகுவாக பாதிப்பதாக தெரிவித்து, கடந்த நான்கு நாட்களாக அந்நாட்டில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளதுடன், பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை பதவி விலகுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நாட்டின் அமைதியை கருத்திற்கொண்டு பிரதமர் பதவி விலகுவதாக நேற்று […]

Continue Reading

அமெரிக்கா சென்றார் வடகொரிய முக்கியஸ்தர்

அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் வலது கை என்று கூறப்படும் முக்கிய அதிகாரியான ஜெம் கிம் யொங்-சொல் அமெரிக்காவை சென்றடைந்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளும் வடகொரியாவின் அதிமுக்கிய சிரேஷ்ட அதிகாரி அவர் என்றும், அவர் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். எதிர்வரும் ஜுன் மாதம் 12ஆம் திகதி அமெரிக்க மற்றும் வடகொரிய […]

Continue Reading

இஸ்ரேல் மீது தாக்குதல்

பலஸ்தீனிய போராளிகளால் இஸ்ரேல் மீது மோட்டார் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட மோட்டார் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், அவை ரொக்கட் தடுப்புக்கள் மூலம் வழிமறிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலில் உயிர் உடமை சேதங்கள் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த சில வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தொடர் தாக்குதல் இதுவென இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

Continue Reading

பாகிஸ்தானில் இடைக்காலப் பிரதமர் நியமனம்

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி நசிருல் முல்க் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இரண்டு மாதங்களுக்கு மட்டுமே நசிருல் முல்க் பிரதமராக கடமையாற்றவுள்ளதாகவும், இந்த பதவிக்காக பாகிஸ்தானின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்பில் சுமார் 6க்கும் மேற்பட்டவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், நசிருல் முல்க், ஒரு மனதாக இடைக்கால பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

சீனாவிலுள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

சீனாவிலுள்ள தமது இராஜதந்திரிகளை, அசாதாரண ஒலியலைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அமெரிக்கா எச்சரிக்கை செய்திருக்கிறது. சீனாவிலுள்ள அமெரிக்க இராஜதந்திரி ஒருவர், மர்மமான ஒலியொன்றை கேட்டதன் பின்னர், அசாதாரண உடல் மற்றும் மனநிலைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கியூபாவிலுள்ள அமெரிக்க இராஜதந்திரிகளும் இவ்வாறான ஒலியலை தாக்குதலுக்குள்ளாகி இருந்தனர். இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியானவை என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

Continue Reading

வடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பில் பயனில்லை

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜெங் உன் உடனான சந்திப்பு, பலனளிக்கப் போவதில்லையென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு இடையிலான சந்திப்பானது அடுத்த மாதம், சிங்கப்பூரில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக அமெரிக்கா தரப்பில் அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்தல், கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழித்தல் போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது சிறப்பான ஒன்றாக இருக்குமெனத் தெரிவித்த ட்ரம்ப், இந்த சந்திப்பு ஜூன் 12ஆம் திகதி […]

Continue Reading

முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை

துருக்கியில் 104 முன்னாள் இராணுவ வீரர்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ சதிமுயற்சியுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக துருக்கிய அரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அவர்களுக்கு கடுமையான ஊழியத்துடன் கடும் சட்டதிட்டங்களின் அடிப்படையில் இந்த தண்டனை அமையும் எனவும், சதித் திட்டத்தை தீட்டியவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்த […]

Continue Reading

அமெரிக்கா மீது ஈரான் கடும் கண்டனம்

தமக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளமைக்கு, ஈரான் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. வரலாற்றில் மிகக்கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்திருந்தமை தொடர்பில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜாவிட் சாரிப் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், இந்த அறிவிப்பின் மூலம், அமெரிக்காவின் தோல்வியடைந்த கொள்கைகள் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அமெரிக்காவின் இந்த செயற்பாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியமும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Continue Reading