ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் மோடி ஆலோசனை

அபுதாபி,ஜுன் 28 ஜி-7 நாடுகள் உச்சி மாநாடு ஜெர்மனியின் எல்மாவ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஜெர்மனியின் ஜனாதிபதி ஓலாப் ஸ்கோல்சின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் மோடி கலந்து கொண்டார். 2 நாள் நடைபெற்ற இந்த மாநாடு நிறைவடைந்ததும் அங்கிருந்து கிளம்பி, இந்தியா வரும் வழியில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அபுதாபி விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்போதைய அதிபர் ஷேக் முகம்மது பின் சையது […]

Continue Reading

சூடானில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 25 பேர் உயிரிழப்பு

சூடான்,ஜுன் 28 தெற்கு சூடானின் Warrap மாநிலத்தில் இருதரப்பினருக்கு இடையே இடம்பெற்ற மோதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அரச ஊழியர்கள் உட்பட 18 இராணுவ வீரர்களும் 7 பொதுமக்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அதிகாரிகள் குழுவொன்று கள விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அங்கு ஆயுதக் குழுவொன்றுடன் இடம்பெற்ற மோதலிலேயே 25 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Continue Reading

கண்டெய்னர் லாரிக்குள் இருந்து 46 பேர் சடலமாக மீட்பு: காரணம் வெளியானது

வாஷிங்டன், ஜுன் 28 அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சாண்டியாகோவின் புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நின்றுகொண்டிருந்தது. மாலை 6 மணியளவில் அப்பகுதிக்கு வந்த நகராட்சி ஊழியர் லாரி அருகே சென்றுபார்த்தபோது கண்டெய்னருக்குள் இருந்து உதவி கேட்டு அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாக, இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆள் அரவமற்ற ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் கண்டெய்னரை […]

Continue Reading

ஜி-7 மாநாடு: உலக தலைவர்கள் சந்திப்பு

பெர்லின், ஜுன் 28 அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாநாடு, ஜெர்மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்தநிலையில் ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் மோடியை […]

Continue Reading

கண்டெய்னர் லாரிக்குள் இருந்து 46 சடலங்கள் மீட்பு

வாஷிங்டன், ஜுன் 28 அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சண்டியாகோ புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த லாரியின் கண்டெய்னரை திறந்து பார்த்தனர். அப்போது, அந்த கண்டெயினரில் 50-க்கும் அதிகமானோர் மயக்கமடைந்த நிலையில் கிடைந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்களை பரிசோதனை செய்ததில் கண்டெய்னர் 40 பேர் ஏற்கனவே உயிரிழந்தது […]

Continue Reading

மோட்டார் சைக்கிளில் சாகசம்: 5 பேர் கைது

சிக்கமகளூரு,ஜுன் 27 சிக்கமகளூரு டவுன் வீட்டுவசதி குடியிருப்பு சாலையில் சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அதேப்பகுதியில் 5 பேர் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் பொலிஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 5 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். கைதான 5 பேர் மீதும் சிக்கமகளூரு டவுன் பொலிஸார் […]

Continue Reading

கடும் மின்சார நெருக்கடியால் இருளில் மூழ்கிய ஜப்பான்

டோக்கியோ,ஜுன் 27 மின்சார நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஜப்பான் அரசு மக்கள் மின்சிக்கனத்தை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஜப்பானில் மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் அங்கு ஜூன் மாதத்தில் 35 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஜப்பானில் வெப்பக்காற்று காரணமாக மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே நிலநடுக்கம் காரணமாக நாட்டின் அணுமின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேவை அதிகரித்திருப்பதால் அங்கு மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சிக்கனத்தை கடைபிடிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கும் […]

Continue Reading

ரஷியா மீதான பொருளாதார தடைகளை துரிதப்படுத்த முயற்சி

பெர்லின்,ஜுன் 27 அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார். மாநாட்டில், பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தது. உக்ரைன்-ரஷியா போர் முக்கிய இடம் பிடித்தது. 7 நாடுகளின் தலைவர்களும் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர்.உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஜி-7 மற்றும் நேட்டோ […]

Continue Reading

வீட்டை துளைத்து நின்ற ரஷ்ய ரொக்கெட்: கண்டுகொள்ளாது முகச்சவரம் செய்த உக்ரேனியர்

உக்ரைன்,ஜுன் 27 உக்ரைனில் ரஷ்ய ரொக்கெட்டின் ஒரு பகுதி வீட்டை துளைத்து நின்ற போதும், அதனைக் கண்டுகொள்ளாமல் நபர் ஒருவர் முகச்சவரம் செய்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 120 நாட்களையும் கடந்து நீடித்து வரும் நிலையில் உயிர், உடைமைகளை இழந்தாலும் உக்ரைன் மக்கள் துணிச்சலுடனும், நம்பிக்கையுடனும் வாழ்ந்து வருகின்றனர். தினமும் வெடிகுண்டுச் சத்தம் கேட்பது மக்களுக்கு பழகிவிட்டது. அதற்கு உதாரணமாக நபர் ஒருவர் முகச்சவரம் செய்த செயல் […]

Continue Reading

லெபனானில் 3 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்ததில் குழந்தை உயிரிழப்பு; பலர் காயம்

பெய்ரூட், ஜுன் 27 லெபனான் நாட்டின் வடக்கே குய்பே மாவட்டத்தின் திரிபோலி நகரில் 3 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து உள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழந்தது. பலர் காயமடைந்து உள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரிய வரவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்து மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் காயமடைந்த நபர்களை மீட்டனர். பின்னர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அந்நபர்களை சேர்த்து உள்ளனர் என […]

Continue Reading

ரஷ்யாவும் வெளிநாட்டு கடன் நெருக்கடியில்

மாஸ்கோ, ஜுன் 27 100 ஆண்டுகளில் முதல் முறையாக, ரஷ்யா ஒரு இறையாண்மை பத்திரத்திரத்திற்கான கட்டணத்தை செலுத்த தவறியிருக்கிறது. பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. ரஷ்யாவின் பொருளாதார, நிதி மற்றும் அரசியல் பிரச்சனைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading

ஜி-7 நாடுகள் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்

பெர்லின், ஜுன“ 27 அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாநாடு, ஜெர்மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். மாநாட்டில், பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தது. உக்ரைன்-ரஷியா போர் முக்கிய இடம் […]

Continue Reading