மனைவி உட்பட 42 பெண்களை கொலை செய்த சைக்கோ கொலையாளி கைது

கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாகக் கொன்று புதைத்ததாக ஜோமைசி கலிசியா (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைவிடப்பட்ட குவாரியில் உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ச்சியாக பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது கென்யாவில் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. இந்த குவாரிக்கு அருகில் இருந்த குற்றவாளியின் வீட்டை சோதனை செய்ததில், 10 செல்போன்கள், மடிக்கணினி, அடையாள அட்டைகள் மற்றும் பெண்களின் ஆடைகள், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உடல்களை அப்புறப்படுத்த உபயோகித்த 9 சாக்குகளை போலீசார் […]

Continue Reading

அமைதியான தனிமையான தொடர்ந்து கேலி செய்யப்பட்ட சிறுவன் மேத்யூ

அமேரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னால் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடந்தது. குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது. அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதை எதிர்த்து அவர் எழுதியிருந்த பேப்பர் குறிப்பை பார்பதற்காக அவர் சற்று தலைசாய்த்த நிலையில் நூலிழையில் உயிர்பிழைந்தார். அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தியது அப்பகுதியை சேர்ந்த […]

Continue Reading

இந்தியாவில் காற்று மாசுபாடு: வருடத்திற்கு 33,000 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக வருடத்திற்கு 33,000 பேர் வரையில் உயிரிழப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள 10 நகரங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டுள்ள ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி அஹமதாபாத், பெங்களூர், சென்னை, புதுடெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, சிம்லா மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களில் காற்று மாசுபாடு அதிகளவில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

புதிய வரலாறு படைத்த பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்

உலக அளவில், மக்களின் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு சமூக வலைதளமாக யூடியூப் விளங்குகிறது. நமக்கு ஏதாவது ஒன்று தெரியவில்லை என்று நினைத்தால் அதற்கு நிச்சயமாக யூடியூப்பில் விடை கிடைக்கும். யூடியூபில் சேனல் தொடங்குவது எளிது என்பதால், இணைய பயனர்கள் பலரும் தங்களுக்கென்று ஒரு சேனலை தொடங்கி அதில், தங்களுக்கு தெரிந்த விஷயங்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் அமெரிக்காவை சேர்ந்த மிஸ்டர் பீஸ்ட் என்ற யூடியூப் பக்கம் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் இந்த […]

Continue Reading

துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பியது கடவுளின் செயல்: ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் மீது நேற்றைய தினம் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிக்கொண்டிருந்த போது 20 வயது இளைஞனால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.  இந்நிலையில், குடியரசு கட்சியின் உத்தியோகப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்பை முன்மொழியும் குடியரசு கட்சியின் தேசிய மாநாடு விஸ்கான்சின் மாகாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க ட்ரம்ப் விஸ்கான்சின் புறப்பட்டுள்ளார். அப்போது அவர் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் கடவுளின் செயலாலோ அல்லது அதிர்ஷ்டத்தாலோ நான் காப்பாற்றப்பட்டேன். நான் […]

Continue Reading

2025 சாம்பியன்ஸ் டிராபி: டேவிட் வார்னருக்கு வாய்ப்பில்லை: ஜார்ஜ் பெய்லி அதிரடி

டேவிட் வார்னர் 3 வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருடன் டெஸ்ட்டிலும், ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையுடன் டி20 கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்தார். இப்படி அறிவித்ததையடுத்து அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட டேவிட் வார்னர் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான […]

Continue Reading

மூன்று சிறிய படகு மூலம் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி களிர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ஏமனில் உள்ள அல் ஹுதைதா கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியார்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மூன்று சிறிய படகு மூலம் கப்பலை வழிமறித்துள்ளனர். இரண்டு படகில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் […]

Continue Reading

இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு

லாகூர்: 15 சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியை தடை செய்ய ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அமைச்சர் அட்டாவுல்லா தரார் உறுதிப்படுத்தியுள்ளார். இது அந்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி பாகிஸ்தானின் மிகப்பெரிய எதிர்க்கட்சியாகும். பிடிஐ கட்சிக்கு தடை விதிக்க இருப்பதற்கான காரணங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அட்டாவுல்லா தரார், […]

Continue Reading

பெண்களுக்கு ஆலோசனை வழங்கி ரூ.163 கோடி சம்பாதிக்கும் பிரபலம்

சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கு தளமாக மட்டுமல்லாமல், சிலருக்கு பணம் ஈட்டித்தரும் தளமாகவும் விளங்குகிறது. அந்த வகையில் சீனாவை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு ஆலோசனைகள் கூறி ஆண்டுக்கு ரூ.163 கோடி சம்பாதிக்கிறார். ஆனால் இவர் கூறும் ஆலோசனைகள் சர்ச்சையாக உள்ளது. அதாவது பணக்கார ஆண்களை திருமணம் செய்வது எப்படி? என்பது குறித்து பெண்களுக்கு இவர் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார். க்யூ குவின் என்ற பெயர் கொண்ட இவர், காதல் உறவுகளை கையாள்வது […]

Continue Reading

இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட தொல்பொருட்களை மீளப் பெற நடவடிக்கை

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கதாரா தேவியின் சிலை உட்பட காலனித்துவ காலத்தில் நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்ட பல தொல்பொருட்களை மீண்டும் இந்நாட்டுக்கு பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். நாட்டுக்கும் கலாசாரத்துக்கும் ஏற்ற கல்வி முறையொன்று எமது நாட்டில் உருவாக்கப்பட வேண்டுமெனவும் அதன் ஊடாக நாட்டை நேசிக்கும் பெருமைமிக்க மக்களை உருவாக்க வேண்டுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் […]

Continue Reading

சோமாலியா தலைநகரில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: 5 பேர் உயிரிழப்பு

யூரோ 2024 கோப்பை இறுதிப் போட்டியை காண்பதற்காக சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு ஓட்டலில் ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியை இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் காயமடைந்தனர். வில்லா சோமாலியா என அழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஆலையில் காணாமல் போன 65,000 காபி கோப்பைகள்

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார். எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஆலையில் 65,000 காபி கோப்பைகள் காணாமல் போயுள்ளதாக அந்த ஆலையின் மேனேஜர் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில், ஒரு ஊழியர் சராசரியாக 5 காபி கோப்பைகளை தங்களது வீட்டிற்கு எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் […]

Continue Reading