நட்சத்திரம் வெடித்து சிதறுவதை வெறும் கண்களால் பார்க்கலாம்

ஒளி மாசுபட்ட நகரங்களில் இருந்தும் கூட வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய பிரகாசமான காட்சியை உருவாக்கும் என்றும் தெரிவித்தனர். ஒரு புதிய வெடிப்பைக் குறிக்கிறது என்றும், அந்த வெடிப்பு செப்டம்பர் மாதம் நிகழும் என்றும் தெரிவித்துள்ளனர். பூமியிலிருந்து 3 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள டி கொரோனே பொரியாலிஸ் என்ற விண்மீன் தொகுப்பில் ஒரு நட்சத்திரம் விரைவில் வெடித்து சிதறும் என்றும், அதை இரவில் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது ஒளி […]

Continue Reading

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

பனாமா சிட்டி,08 மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பனாமா. இந்நாட்டின் தலைநகரில் பனாமா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் வேளாண்துறை மாணவ, மாணவிகள் நேற்று களப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மாணவ, மாணவிகள் மீது சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தலைமறைவான நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Continue Reading

சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமினை உதாரணம் காட்டிய இம்ரான்கான்

இஸ்லாமாபாத்:08 பாகிஸ்தான் முன்னாள் பிரதம மந்திரியான இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வழக்கு ஒன்றுக்காக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று இம்ரான்கான் ஆஜரானார். அப்போது ஒரு நீதிபதி, லட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் கட்சித்தலைவராக உள்ள இம்ரான்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது வருத்தத்திற்கு உரியது என்றார். இந்நிலையில், நீதிபதிகள் முன் இம்ரான்கான் பேசுகையில், இந்தியாவில் பொதுத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக சிறையில் இருந்த டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு இந்திய சுப்ரீம் […]

Continue Reading

சிரியாவில் பள்ளி பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 7 பேர் பலி

சிரியாவின் வடமேற்கு பகுதியில் டார்குஷ் நகரின் அருகே பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது . ஆதரவற்றோருக்கான பள்ளியில் இருந்து மாணவர்கள் மற்றும் சில ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்து, நேற்று ஓரண்டஸ் ஆற்றை ஒட்டியுள்ள மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு இறங்கி பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றுக்குள் விழுந்தது.

Continue Reading

கிரீன்லாந்தை காக்க வந்த ரட்சகன்: ஆர்டிக்கில் உருவான ராட்சத வைரஸ்

கிரீன்லாந்தில் உள்ள பனி மூடிய ஆர்டிக் பிரதேசத்தில் ராட்சத வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை வைரஸ்கள் 1981 இல் முதன்முறையாக கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஐஸில் இப்போதுதான் முதன்முறையாக கடண்டுபிடிக்கப்படுள்ளது. பொதுவாக பாக்டீரியாவை விட 1000 மடங்கு சிறிய அளவில் உள்ள வைரஸ்கள் 20- 200 நானோ மீட்டர்கள் அளவே இருக்கும்.ஆனால் இந்த ராட்சத வைரஸ்கள் 2.5 மைக்ரோ மீட்டர்கள் என்ற அளவில் பாக்டீரியாவை விட பெரிதாக உள்ளன. இவை மனிதக் கண்களால் மட்டும் இன்றி […]

Continue Reading

ரஷியாவில் சோகம்: ஆற்றில் மூழ்கி இந்திய மாணவர்கள் 4 பேர் பலி

மாஸ்கோ:07 ரஷியாவில் மருத்துவம் பயின்று வந்த 4 இந்திய மாணவர்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகே அமைந்துள்ள ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ரஷிய நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து, இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். விசாரணையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹர்ஷல் அனந்தராவ் டேசலே, ஜிஷான் அஷ்பக் பின்ஜரி, ஜியா பிரோஜ் பின்ஜரி மற்றும் மாலிக் குல்ம்கோஸ் முகம்மது யாகூப் ஆகிய 4 மாணவர்களும் ரஷியாவின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று […]

Continue Reading

களைகட்டிய ஆனந்த் அம்பானி திருமண விழா – ஆத்திரத்தில் இத்தாலி மக்கள்

உலக பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் உள்ளிட்ட பெருநிறுவனங்களின் உரிமையாளருமான முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை விமரிசையாக நடத்தி வருகிறார். என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் சி.இ.ஓ விரென் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்செண்டுடன் ஆனந்த் அம்பானிக்குக் கடந்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன்பிறகு நடந்த ப்ரீ வெட்டிங் வைபவத்தில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன் ஆலியாபட் ஜான்விகபூர், கேத்ரீனா […]

Continue Reading

மகனை மன்னிக்கவே மாட்டேன்: குற்ற வழக்கில் சிக்கிய மகனால் தர்மசங்கடத்தில் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு நடையாக நடந்து வருகிறார். மூளை கேன்சரால் கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்த ஜோ பைடனின் இளைய மகன் பீயு பைடனின் மாணவி கடந்த 2018 ஆம் ஆண்டு ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கியையும், கோகைன் உள்ளிட்ட போதைப்பொருட்களையும் கண்டெடுத்தார். இதுதொடர்பாக அவர் போலீசுக்கு வாக்குமூலம் அளித்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு […]

Continue Reading

காசா போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் பதில் அளிக்கவில்லை

காசா:07 பாலஸ்தீனத்தின் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டி விட்டது. இந்த சண்டையில் அப்பாவி பெண்கள், குழந்தைகள் பலியாகி வருவதால் போரை உடனே நிறுத்தவேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் தொடரும் என்றும் ஹமாசை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் […]

Continue Reading

ஸ்பேஸ் எக்ஸ்-ன் மெகா ராக்கெட்டின் சோதனை வெற்றி

ஸ்பேஸ் எக்ஸ் 400 அடி (121 மீட்டர்) நீளம் கொண்ட உலகின் மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் இதற்கு முன் மூன்று முறை வானில் செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. மூன்று முறையில் ராக்கெட் செலுத்தப்பட்டதும் வெடித்து சிதறி சோதனை தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து ஏவிய நிலையில் வெற்றிகரமான வானில் சீறிப்பாய்ந்து மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது. இன்று காலை மெக்சிகோ வளைகுடாவில் இருந்து இந்திய பெருங்கடல் […]

Continue Reading

பாகிஸ்தான் உள்பட 5 நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக தேர்வு

பாகிஸ்தான், சோமாலியா, டென்மார்க், கிரீஸ் மற்றும் பனமா ஆகிய நாடுகள் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் இரண்டு வருட உறுப்பினர் பதவி காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதியில் இருந்து தொடங்கும். ஐ.நா, பொது சபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்த ஐந்து நாடுகள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2025 ஜனவரி 1-ந்தேதியில் இருந்து 2026 டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த நாடுகளில் உறுப்பினர் பதவிக்காலமாகும். ஆப்பிரிக்கா மற்றும் […]

Continue Reading

பிரேசிலில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி

பிரேசில்:06 தெற்கு பிரேசிலின் சான்டா கட்டரினா மாகாணம் வால்டரேஸ் நகரில் இருந்து மினாஸ் கிரேஸ் மாகாணம் புளோரினோபொலிஸ் நகருக்கு சிறிய ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இடபோ நகர் அருகே நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதன் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனிடையே கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை விமானிகள் உடனடியாக இழந்தனர். இதனால் நடுவானில் இருந்து கீழே தரையில் விழுந்து அந்த விமானம் நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி உள்பட 2 […]

Continue Reading