திருமண வயதை அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்: கொண்டாடி தீர்த்த எம்.பி.க்கள்

லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குழந்தைத் திருமணங்களை ஒழிக்கும் முகாந்திரத்தில் புதிய மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டுள்ளது. கொலம்பியாவில் இதுவரை பெற்றோர் சம்மதத்துடன் 14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இதற்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது. அவர்கள் சிறுமிகள்! மனைவிகள் அல்ல! என்ற முழக்கம் அந்நாட்டில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இந்த மசோதா மீது தற்போது கொலம்பிய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு […]

Continue Reading

40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகிறார்கள்: ஆய்வறிக்கையில் தகவல்

இஸ்லாமாபாத்:16 ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. முதல் 5 நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்.) மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையை பாகிஸ்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதில், ‘கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து அதிகம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். […]

Continue Reading

2 ஆண்டுகள் சிறையில் இருந்த ரேசா பாங்கி எக்ஸ் தளத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமனம்

எலான் மஸ்க் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல சமூக ஊடகமான டுவிட்டரை 44 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கினார். பின்னர் எலான் மஸ்க் டுவிட்டருக்கு எக்ஸ் என்ற பெயர் மாற்றம் செய்தார். இந்நிலையில், எக்ஸ் தளத்தின் தலைமை நிதி அதிகாரியாக துபி ஸ்ட்ரீமிங் தளத்தின் முன்னாள் நிதித் தலைவரான மஹ்மூத் ரேசா பாங்கி நியமிக்கப்பட்டுள்ளார். மஹ்மூத் ரேசா பாங்கி தான் எக்ஸ் தளத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் நபர் ஆவார். எக்ஸ் தளத்தில் […]

Continue Reading

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சுகாதார அவசர நிலை பிரகடனம்

இஸ்லாமாபாத்:16 பாகிஸ்தானில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு காற்று தரக்குறியீடு 1,600 என்ற அளவில் உயர்ந்து உள்ளது. இது பேரழிவு அளவாக இருக்கிறது. அம்மாகாணத்தில் தொடர்ந்து புகை மூட்டம் நிலவி வருகிறது. காற்று மாசுக்களால் ஏற்படும் அடர்ந்த புகை, பஞ்சாபின் பல நகரங்களை சூழ்ந்துள்ளது. லாகூர் மற்றும் முல்தான் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர். அவர்கள் சுவாசப் பிரச்சனைகள், […]

Continue Reading

வெள்ளை மாளிகைக்கு 27 வயது பெண்ணை செய்தி தொடர்பாளராக நியமித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவியேற்கிறார். அவர் தற்போது தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம் பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக கரோலின் லீவிட் என்ற 27 வயது பெண்ணை நியமனம் செய்துள்ளார். இவர் டிரம்பின் பிரசார உதவியாளராக பணியாற்றி இருந்தார். இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, கரோலின் லீவிட் மேடையில் சிறந்து விளங்குவார் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, மேலும் அமெரிக்காவை […]

Continue Reading

உக்ரைன் போர் விரைவில் முடிய உள்ளது: அடித்து கூறிய ஜெலன்ஸ்கி

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இது நடந்தால் தங்கள் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் ரஷியா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போர் ஒரு முடிவை எட்டாமல் நீண்டுகொண்டே செல்கிறது. உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் ராணுவ பலத்தை ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு வழங்கி வருகிறது.வட […]

Continue Reading

குத்துச்சண்டை ‘ஜாம்பவான்’ மைக் டைசனை தோற்கடித்தார் ஜேக் பால்

முன்னாள் உலக ‘ஹெவிவெயிட்’ சாம்பியனான மைக் டைசன் (58 வயது), இதுவரை விளையாடிய 58 குத்துச்சண்டை போட்டியில், 50-ல் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை ‘நாக்-அவுட்’ முறையில் வீழ்த்தினார். ஆறு போட்டியில் மட்டும் தோல்வியடைந்தார். எதிரணி வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சையில் சிக்கியதால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பி உள்ளார். இவரை அமெரிக்காவை சேர்ந்த […]

Continue Reading

ரோகித் சர்மா – ரித்திகா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2015 ஆண்டு ரித்திகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2018 ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், ரோகித் – ரித்திகா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ரோகித்திற்கு ஆண் குழந்தை பிறந்ததை ஒட்டி இணையத்தில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ரித்திகா கர்ப்பமாக இருந்ததால் பார்டர்-கவாஸ்கர் கோப்பை பயிற்சிக்காக ரோகித் ஆஸ்திரேலியா செல்லாமல் தனது […]

Continue Reading

உலகின் 2வது பணக்காரருக்கு 60 வயதில் 2வது கல்யாணம்: குஷியில் ஜெஃப் பெசோஸ்

உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க்குக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் 235 பில்லியன் டாலர் சொத்துடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார்.60 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்துக்குத் தயாராகி வருகிறார். தனது நீண்ட நாள் காதலியான 54 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் நடக்க உள்ளது. இவர்கள் இருவருக்கும் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திருமணம் நடைபெற உள்ளதாக அமெரிக்க இதழான […]

Continue Reading

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: கோலி பொறுமையாக விளையாடுவது அவசியம்: ரவி சாஸ்திரி

மும்பை:15 இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா சொந்த மண்ணில் இழந்தது. இதனால் இந்திய அணி நெருக்கடியில் உள்ளது. இத்தொடரில் விராட் கோலியின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை. இந்த நிலையில் கோலிக்கு முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- கோலி தனது […]

Continue Reading

போட்டிக்கு முன் எதிராளியை அறைந்த மைக் டைசன்

இர்விங்:15 அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி இன்று நடக்கிறது. இதில், அமெரிக்காவின் மைக் டைசன், ஜேக் பால் மோதுகின்றனர். முன்னாள் உலக ‘ஹெவிவெயிட்’ சாம்பியனான மைக் டைசன் (58 வயது), இதுவரை விளையாடிய 58 போட்டியில், 50-ல் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை ‘நாக்-அவுட்’ முறையில் வீழ்த்தினார். ஆறு போட்டியில் மட்டும் தோல்வியடைந்தார். எதிரணி வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என […]

Continue Reading

17 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் போயிங்: ஊழியர்கள் அதிர்ச்சி

உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் அதிரடி பணிநீக்க நடவடிக்கையை துவங்கியுள்ளது. உலகம் முழுக்க பணியாற்றி வரும் போயிங் ஊழியர்களில் 10 சதவீதம் பேர், சுமார் 17 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி ஜனவரி மாத மத்தியில் பணிநீக்க நடவடிக்கை அமலுக்கு வரவுள்ளது. பணிநீக்க நடவடிக்கையில் தெற்கு கரோலினா மற்றும் வாஷிங்டன் ஆலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். பணிநீக்க நடவடிக்கை தொடர்பாக போயிங் தலைமை […]

Continue Reading