டிரம்ப் ஆட்சியில் இருந்து அமெரிக்க மக்கள் தப்பிக்க கப்பல் நிறுவனம் புதிய ஆஃபர்

அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றார். தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரியுடன் முடிவடையும் நிலையில் பதவியேற்பு அமைச்சகதுக்கானவர்களை தேர்வு செய்யும் வேளைகளில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். ஜனவரியில் பதவியேற்கும் டிரம்ப் அடுத்த 4 வருடங்களுக்கு 2029 வரை ஆட்சியில் இருப்பார். […]

Continue Reading

மாவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதா நகல் கிழிப்பு: பாராளுமன்றத்தில் எம்.பி. நடனம்

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் எம்பியான ஹனா ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் ஹக்கா எனப்படும் பழங்குடி நடனம் ஆடி சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட நகலை பாராளுமன்றத்தில் கிழித்த சம்பவம் உலகத்தின் கவனத்தை பெற்றுள்ளது.. ஹனா-ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் எனும் 22 வயதான இளம் எம்பி, தனது கன்னி உரையின் போதே மாவோரி மொழியில் பேசியது நியூசிலாந்து மட்டுமல்லாது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நியூசிலாந்து அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் […]

Continue Reading

25 வயதுக்கு மேல் திருமணம் செய்ய தடை: 30 வயதில் கட்டாய கருப்பை நீக்கம்

உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்த வண்ணம் உள்ளது. ரஷியாவில் இதனால் தனியாக பாலியல் அமைச்சகத்தையே உருவாக்க அதிபர் புதின் திட்டமிட்டு வருகிறார். ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பாலியல் உறவின் மீதும் நீண்ட கால காதல் மற்றும் திருமண உறவில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் தென் இந்தியாவில் குழைந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் தம்பதிகள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர […]

Continue Reading

ஆஸ்பத்திரியில் இடம்மாறிய குழந்தைகள்: பல வருடங்களுக்கு பின் பள்ளியில் நடந்த டுவிஸ்ட்

சினிமாக்களில் வருவதுபோல் வியட்நாமில் நடந்த ஒரு உண்மை சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வியட்நாமை சேர்ந்த தந்தை ஒருவருக்கு பள்ளிக்கு செல்லும் வயதில் மகள் இருந்துள்ளார். தனது மகள் வளர வளர அவள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் போலும் இல்லாமல் மிகவும் அழகாக இருந்ததால் அவள் உண்மையில் தனக்குத்தான் பிறந்தாளா என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார். எனவே மகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்துள்ளார். இதில் அவள் தனது மகள் இல்லை என்று அவருக்கு தெரியவந்தது. இதற்குப் பிறகு […]

Continue Reading

துபாயில், புதிய தனியார் பல்கலைக்கழகம்- வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் திறந்து வைத்தார்

துபாய்:15 இந்தியா மற்றும் அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே சிறப்பான நட்புறவு நிலவி இருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் அரசுமுறை பயணமாக நேற்று அமீரகம் வருகை புரிந்தார். அவரை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் வரவேற்றார். இந்த வருகையின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. சிம்பயோசிஸ் சர்வதேச (டீம்ட் யுனிவர்சிட்டி) என்ற தனியார், நிகர்நிலை பல்கலைக்கழகம் […]

Continue Reading

மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம் விதித்த ஐரோப்பிய ஆணையம்

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை ‘மெட்டா’ நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க் ஜுக்கர்பெர்க் நிர்வகித்து வருகிறார். இதனிடையே மெட்டா நிறுவனம், மார்க்கெட்பிளேஸ் எனும் விளம்பர சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சேவையை ஃபேஸ்புக்கில் புகுத்திய மெட்டா, பயனர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மார்க்கெட்பிளேஸ்ஸை கட்டாயம் அணுகும் வகையில் நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதனால், தவறான நடைமுறைகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக பல நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. இதனை […]

Continue Reading

இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக சச்சினை நியமிக்க வேண்டும்: முன்னாள் வீரர் வலியுறுத்தல்

புதுடெல்லி:15 இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக (0-3) இழந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. அங்கு ‘பார்டர்-கவாஸ்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு இந்திய அணிக்கு ஆலோசகராக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ.வி.ராமன் வலியுறுத்தியுள்ளார். […]

Continue Reading

டிரம்ப் வெற்றிக்கு உதவிய துளசி கபார்ட்டுக்கு தேசிய உளவுத்துறை இயக்குனர் பதவி

வாஷிங்டன்:14 அமெரிக்க அதிபர் தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார். இதில் துளசி கபார்ட்டை தேசிய உளவுத்துறை இயக்குனராக டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, முன்னாள் எம்.பியான, லெப்டினன்ட் கர்னல் துளசி கப்பார்ட், தேசிய புலனாய்வு இயக்குநராக பணியாற்றுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 2 தசாப்தங்களாக நமது நாட்டிற்காகவும், அனைத்து அமெரிக்கர்களின் சுதந்திரத்திற்காகவும் போராடியுள்ளார். அவர் தனது புகழ்பெற்ற வாழ்க்கையை […]

Continue Reading

எனக்கு உடல் நல பாதிப்பு இல்லை- சுனிதா வில்லியம்ஸ் தகவல்

அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 6-ந்தேதி ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர். ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. விண்வெளியில் சிக்கி உள்ள இருவரும் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. இதில் சுனிதாவின் உடல் மெலிந்து காணப்பட்டதால், […]

Continue Reading

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சி!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.06 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.28 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.97 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

Continue Reading

தெற்கு ஸ்பெயினில் வெள்ளப்பெருக்கினால் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!

தெற்கு ஸ்பெயினின் கோஸ்டா டெல் சோல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மலாக்கா மற்றும் வடகிழக்கு கட்டலேனியா ஆகிய பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை பதிவாகக் கூடுமென அந்த நாட்டு வானிமை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் அங்குள்ள முக்கிய சுற்றுலா வலயங்களிலும் வெள்ளப் பெருக்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பெயினின் கிழக்கு வலென்சியா பகுதியில் ஏற்பட்ட திடீர் […]

Continue Reading

மெக்சிகோவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

மெக்சிகோவில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. ஹூலையன் கவுண்டியில் உள்ள ஜியன் என்ற பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

Continue Reading