எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்பு வழங்கிய டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்துக்கு ஏற்ப நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். அந்த வகையில் டொனால்டு டிரம்ப் வெற்றிக்கு உதவிய டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் மற்றும் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகியோர் அந்த நாட்டின் செயல்திறன் துறையை (Department of Government Efficiency or DOGE) வழி நடத்துவார்கள் என டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவை […]

Continue Reading

கங்குவா திரைப்படத்தை நிபந்தனையுடன் வெளியிட அனுமதி

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் நாளை வெளியாகவுள்ளது. இதற்கிடையே, அர்ஜுன் லால் என்பவர் திரைத்துறையில் பலருக்கு கடன் கொடுத்துள்ளார். நிதி இழப்பு ஏற்பட […]

Continue Reading

வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனுடன் டிரம்ப் சந்திப்பு

வாஷிங்டன்:14 அமெரிக்காவின் 47-வது அதிபராக, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபரான கமலா ஹாரிஸ் ஆகியோர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தனர். டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வாஷிங்டனில் பதவியேற்க இருக்கிறார். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, வெள்ளை மாளிகையில் வந்து சந்திக்குமாறு அதிபர் ஜோ பைடன் அழைப்பு […]

Continue Reading

இஸ்ரேல் வான்தாக்குதல்: காசா முனையில் 46 பேரும், லெபனானில் 33 பேரும் பலி

ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா முனையிலும், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனானிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குல் நடத்திய வருகிறது. காசா முனையில் கடந்த 24 மணி நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட மனிதாபிமான பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லெபனான் நாட்டின் தெற்கு பெய்ரூட் பகுதிகளில் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். காசாவுக்குள் அதிக மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பதற்கான காலக்கெடு முடிந்த பிறகு, இஸ்ரேலுக்கான […]

Continue Reading

கடந்த மெகா ஏலத்திலும் சிஎஸ்கே என்னைத் தக்கவைக்கவில்லை: தீபக் சாஹர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களை தக்க வைத்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதிஷா பதிரானா மற்றும் டோனி ஆகிய ஐந்து வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது. இந்நிலையில் கடந்த மெகா ஏலத்திலும் அவர்கள் என்னைத் தக்கவைக்கவில்லை என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் […]

Continue Reading

அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற பாகிஸ்தான் வீரர்

துபாய்:12 ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது. அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்திருந்தது. ஐ.சி.சி வெளியிட்ட பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தானின் நோமன் அலி, தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா, நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதேபோல், சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் நியூசிலாந்தின் மெலி கெர், தென் […]

Continue Reading

சீனாவில் உடற்பயிற்சி செய்தவர்கள் மீது மகிழுந்து மோதி விபத்து: 35 பேர் பலி!

சீனாவின் ஷுஹாய் (Zhuhai) நகரில் உள்ள மைதானம் ஒன்றின் முன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது மகிழுந்து ஒன்று வேகமாக மோதியதில் 35 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 43 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  விபத்து ஏற்படுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  குறித்த விபத்தையடுத்து அந்த விளையாட்டு மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

Continue Reading

9 வயது சிறுமிகளை திருமணம் செய்து கொள்ளலாம்: ஈராக் சட்டத்திருத்தம்

ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண்குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும். பெண்களின் சுதந்திரத்தை மதத்தின் பெயரில் முற்றிலுமாக படுகொலை செய்யும் இந்த மசோதாவுக்கு சர்வதேச அளவில் கண்டங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த மசோதாவின்படி திருமண வயதை ஒன்பதாக குறைக்கும் சட்டத்திருத்தம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக […]

Continue Reading

மிஸ்டர் பீஸ்ட் வீடியோவில் விராட் கோலி?

உலக அளவில் மிகப்பெரிய யூடியூபர்களான மிஸ்டர் பீஸ்ட், லோகன் பால மற்றும் கேஎஸ்ஐ இந்தியா வந்துள்ளனர். இந்த மூவரின் பிரான்டுகள்- ஃபீஸ்டபில் மற்றும் பிரைம் ஆகியவற்றை இந்தியாவில் வெளியிடுவதற்காக அவர்கள் இந்தியா வந்துள்ளனர். மிஸ்டர் பீஸ்ட் இந்தியா வந்ததில் இருந்து அவர் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அதன்படி இன்ஸ்டாகிாமில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோரை ஃபாளோ செய்த மிஸ்டர் பீஸ்ட்-இடம் ரசிகர் ஒருவர் […]

Continue Reading

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டலால் இந்து கோவில் தூதரக நிகழ்ச்சி ரத்து

கனடாவில் காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து கோவில் முன்பு போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோவிலுக்குள் புகுந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய தூதரகம் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தது. இந்த நிலையில் காலிஸ்தான் […]

Continue Reading

மைக் வால்ட்ஸை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அறிவித்தார் டிரம்ப்: இந்தியாவுக்கு நெருக்கமானவர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் தனது ஆட்சி நிர்வாகத்தில் பணியாற்ற உள்ள மந்திரிகள், அதிகாரிகளை தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் வால்ட்சை டிரம்ப் தேர்வு செய்துள்ளார். முன்னாள் ராணுவ அதிகாரியான மைக்கேல் வால்ட்ஸ், புளோரிடா மாகாணத்தில் 3-வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்தியா மற்றும் இந்திய அமெரிக்கர்களுக்கான பாராளுமன்ற காகசின் இணைத் தலைவராக உள்ளார். காகஸ் என்பது இரு நாடுகள் இடையிலான உறவை வலுப்படுத்த பிரதிநிதிகள் […]

Continue Reading

வரலாறு காணாத உச்சத்தை தொட்ட பிட்காயின் மதிப்பு!

உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தல் பிட்காயின் மதிப்பை எகிறச்செய்துள்ளது. டிரம்பின் வெற்றி கிரிப்டோகரன்சியில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கிரிப்டோவின் முன்னணி காயினான பிட்காயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பில் 88,817 டாலர்களை எட்டி கிரிப்டோ சந்தையில் முதல் இடத்தில் உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75.62 லட்சம் ஆகும். 1,00,000 டாலரை நெருங்கிக்கொண்டிருக்கும் பிட்காயின் மதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் […]

Continue Reading