எரிபொருள் விலையில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 309 ரூபாவாகும். 283 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 286 ரூபாவாகும். மேலும், மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு […]

Continue Reading

“ஃபெஞ்சல்” புயல் தாக்கம்: காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெஞ்சல்” புயலின் தாக்கம் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை (30) காற்றின் தரம் குறைவடையலாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) எச்சரிக்கை விடுத்துள்ளது.  நாட்டில் சில பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் 92 – 120 வரை காணப்படலாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, குருணாகல், கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, புத்தளம், பதுளை, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, பொலன்னறுவை […]

Continue Reading

கரையை கடக்கும் புயல்: விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை இன்று (29) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொது மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக உருவெடுத்து திருகோணமலைக்கு வடகிழக்கே 310 கி.மீ தொலைவிலும் காங்கேசந்துரைக்கு வடகிழக்கே 280 கி.மீ தொலைவிலும் […]

Continue Reading

வாகன இறக்குமதி குறித்த புதிய அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கான அனுமதியின் முதல் கட்டத்தின் கீழ், பஸ்கள் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான முதல் கட்ட திட்டத்திற்கு நிதி அமைச்சகம் இன்னும் சில நாட்களில் ஒப்புதல் அளிக்கும் என அதன் தலைவர் இந்தியா சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்தார். வாகன இறக்குமதியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் கார்களின் இறக்குமதி அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் தொடங்கும் என்று அவர் […]

Continue Reading

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி!

ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது ஒழுங்கை நிலைநாட்ட ஜனாதிபதி இதனை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த வர்த்தமானி நவம்பர் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

தமிழ் நாட்டு கரையை நோக்கி நகர்ந்து செல்லும் சக்திமிக்க தாழமுக்கம்!

திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 290 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலை கொண்டிருந்த சக்திமிக்க தாழமுக்கமானது தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், நாட்டின் வானிலையில் காணப்படும் தாக்கமானது இன்று (29) முதல் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம், […]

Continue Reading

ஆழ்ந்த தாழமுக்கம் நாளை முதல் குறைவடையும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக, நிலவும் சீரற்ற காலநிலை நாளை முதல் படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் நாட்டின் கிழக்கு கடற்கரையை அண்மித்து வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதன்படி, மறு அறிவித்தல் நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் மீனவ […]

Continue Reading

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைகள் டிசம்பர் 4 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரையான 6 நாட்களுக்கான […]

Continue Reading

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில் நேற்று (27) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அந்தத் திகதியை நிர்ணயிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான குறிப்பிட்ட திகதி தீர்மானிக்கப்படவில்லை எனவும், எதிர்வரும் நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடி […]

Continue Reading

திருகோணமலைக்கு மிக அருகில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழ்ந்த தாழமுக்கம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி அதிகாலை 02.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அது இன்று (28) மேலும் தீவிரமடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் வடக்கு-வடமேற்கு திசை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த அமைப்பின் தாக்கத்தினால் நாட்டின் பல […]

Continue Reading

கொள்கை அடிப்படையிலேயே மருந்து இறக்குமதிக்கான அமைச்சரவை யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டது: ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

பொதுவாக தேர்தல் அறிவிக்கப்படும்போது அரசியல் கட்சிகள் பொதுவாக மற்றைய கட்சிகள் மீது சேறுபூசுவது வழமை. அதுபோலவே இம்முறை எம்மீது அளவுக்கு அதிகமான அளவில் இல்லாத பொல்லாத விடயங்களை எல்லாம் சமூக ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தியிருந்தார்கள் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இத்தகைய அவதூறுகளால் எமது அரசியல் பணிகள் ஒருபோதும் முடங்கிவிடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மருந்துகளின் அவசியத் தன்மையுடன் தங்களுக்கு வழங்கப்பட்ட தரவுகளுக்கு அமைய, கொள்கை அடிப்படையிலேயே, […]

Continue Reading

சீரற்ற வானிலையால் 4 பேர் உயிரிழப்பு

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் தெரிவித்துள்ளார். சீரற்ற வானிலையால் 18 மாவட்டங்களில் உள்ள 141 பிராந்திய செயலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் 66,947 குடும்பங்களைச் சேர்ந்த 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணத்தில் 1,893 குடும்பங்களைச் சேர்ந்த 6,615 பேர் […]

Continue Reading