மத்ரஸா மாணவர்கள் இருவரின் சடலங்கள் மீட்பு

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பங்கேற்றுள்ளதுடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளது. உழவு இயந்திரத்தில் 11 மாணவர்கள், சாரதி மற்றும் உதவியாளர் பயணம் செய்தனர், இதன்போது, வௌ்ளத்தில் சிக்கிய 5 மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். அதன்படி, காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களை தேடும் பணிகள் […]

Continue Reading

இன்று சூறாவளியாக வலுவடையும் தாழமுக்கம்! எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையானது திருகோணமலைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீற்றர் தொலைவில் நேற்றிரவு இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று (27) சூறாவளியாக மேலும் வலுவடையும். இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு, மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை, பலத்த காற்று வீசக்கூடும். வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு […]

Continue Reading

அடுத்த 3 நாட்களுக்கு உயர்தரப் பரீட்சை நடைபெறாது?

நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.அதன்படி, எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சைகள் நடைபெற மாட்டாது. குறித்த  தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம், 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Continue Reading

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இன்று (26) முற்பகல் 11.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து 170 கிலோமீற்றர் தொலைவிலும் திருகோணமலையிலிருந்து 240 கிலோமீற்றர் தொலைவிலும் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள இந்த அமைப்பு, நாட்டின் கிழக்கு கரையை அண்மித்து நகர்ந்து நாளை (27) மேலும் […]

Continue Reading

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதியில்லை – அரசாங்கம்!

உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் ஊடகவியலாளரினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, தீவிரவாத மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றுக்காக நிதி சேகரித்தல், ஒன்று கூடுதல், பிரசாரம் செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த […]

Continue Reading

அமைச்சுக்களின் விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 44 ஆம் பிரிவின் (01) உப சரத்தின் படி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளின் எண்ணிக்கை அதில் அமைச்சர்களுக்கான விடயதானங்கள், செயற்பாடுகள் மற்றும் திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் தொடர்பில் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 24 அமைச்சுப் பதவிகளுக்கான விடயதானங்கள், செயற்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் இந்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

மாவீரர் தினத்தில் விடுதலை புலிகளின் சின்னங்களை பயன்படுத்த முடியாது – பொது பாதுகாப்பு அமைச்சர்

யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு சுதந்திரம் உள்ளது, எனினும் அவற்றில் விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால், அந்த அமைப்பின் சின்னங்கள், சீருடைகள் அல்லது அங்கத்தவர்களின் படங்களைப் பயன்படுத்தி கொண்டாட்டங்களை நடத்த முடியாது. எனவே, நினைவுகூருவதற்கான உரிமை மற்றும் நாட்டின் சட்டக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் மதித்து, சட்டத்தின் […]

Continue Reading

வடக்கு, கிழக்கில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின: வடக்கில் மாத்திரம் 15,284 பேர் பாதிப்பு! 

நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வடக்கு, கிழக்கில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வட மாகாணத்தில் மாத்திரம் 15,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இந்நிலையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடளாவிய ரீதியில் மழை, வெள்ளம் காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.  தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த […]

Continue Reading

கடுமையான மழை: வௌியானது சிவப்பு எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு   வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (25) மாலை 04:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவித்தல் நாளை (26) மாலை 04:00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு  வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக  நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் […]

Continue Reading

200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி

இலங்கையின் எரிசக்தித் துறையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. போட்டித்தன்மை கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டை எளிதாக்குதல், எரிசக்தி உற்பத்தி செலவைக் குறைப்பதனை இலக்காகக் கொண்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக இந்தத் தொகை வழங்கப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டகபூமி கடோனோ குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

அஸ்வெசும விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்காக கால அவகாசம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான விண்ணப்பங்களை வழங்குவதற்கு இன்று (25) முதல் மேலதிக அவகாசம் வழங்க நலன்புரிப் பலன்கள் வாரியம் தீர்மானித்துள்ளது. அந்த கால அவகாசம் அடுத்த மாதம் 2ம் திகதி வரை இருக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்குள் நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பங்களை பிரதேச செயலகத்திலோ அல்லது நலன்புரிப் பலன்கள் சபையின் இணையத்தளத்திலோ பெற்றுக்கொள்ள முடியும். முதல்கட்ட பயனாளிகள் தேர்வின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என பயனாளிகள் நல வாரியம் […]

Continue Reading

இன்று ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது குறித்த பரீட்சை அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை 2 ஆயிரத்து 312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 33,185 பரீட்ச்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களில் 253,390 பாடசாலை பரீட்சார்த்திகளும் 79,793 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவதாகப் பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்தார். இந்தநிலையில், பரீட்சார்த்திகள் 30 நிமிடங்களுக்கு […]

Continue Reading