இன்று பலத்த மழை – கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது மேலும் வலுவடைந்து இலங்கையின் கிழக்கு கரையைக் கடந்து வட மாகாணத்தை ஊடறுத்து தமிழகத்தை நோக்கி நகர்கின்றது. இதன் காரணமாகக் கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் […]

Continue Reading

இந்த ஆண்டு மின் கட்டண திருத்தம் இனி இருக்காது! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இந்த ஆண்டு மின் கட்டண திருத்தம் இனி இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை முன்வைப்பதில் தாமதம் ஏற்பட்டமையே இதற்கு காரணம் என PUCSL பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் கூறியுள்ளார். மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எவ்வாறெனினும் தாங்கள் முன்வைத்துள்ள மின்சாரக் கட்டணக் குறைப்பு […]

Continue Reading

வாகன இறக்குமதி தொடர்பில் IMFஇன் அறிவிப்பு

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் உள்ள கையிருப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது நிதிக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். கேள்வி: வாகன இறக்குமதி […]

Continue Reading

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த நாட்களில் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது சந்தையில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான முட்டை 38 ரூபாய்க்கும், சாதாரண முட்டை 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Continue Reading

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்பொழுது? விஜித ஹேரத் வெளியிட்ட தகவல் 

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.  கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்டது.  இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Continue Reading

யாழில் சட்டத்தரணியின் வீட்டில் ரூ.1 கோடி 40 லட்சம் பெறுமதியான பொருட்கள் களவு: இருவர் கைது!

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும் குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுமே யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் இல்லாத சமயத்தில் 40 பவுண் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன களவாடப்பபட்டது.  […]

Continue Reading

அஸ்வெசும கொடுப்பனவு : விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு

கொழும்பு,23 அஸ்வெசும திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளை பெறுவதற்காக விண்ணப்பிக்கத் தவறிய பயனாளிகள் இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம்.  இக்கொடுப்பனவுகளை பெறுவதில் உள்ள பிரச்சினைகள், முறைப்பாடுகள் தொடர்பில் பயனாளிகள் உரிய அதிகாரிகளுக்கு இம்மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 15ஆம் திகதி வரை தெரிவிக்க முடியும். 

Continue Reading

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம்: வளிமண்டலவியல் திணைக்களம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் இன்று (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அது, அடுத்து வரும் 2 நாட்களில் காற்றழுத்தமாக விருத்தியடையும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் […]

Continue Reading

70 வயதை பூர்த்தி செய்த முதியோர்களுக்கு இம்மாதம் முதல் கொடுப்பனவு!

அஸ்வெஸ்வம நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவான 3,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த உதவித்தொகை இந்த மாதம் முதல் அஸ்வெசும பெறும் முதியவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது. நலன்புரி நன்மைகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.

Continue Reading

ஜனாதிபதி முன்னிலையில் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம செய்துக்கொண்டனர். பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் – அனில் ஜயந்த பெர்னாண்டோ விவசாயம் மற்றும் கால்நடைவளங்கள் பிரதி அமைச்சர் – நாமல் கருணாரத்ன கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் – வசந்த பியதிஸ்ஸ வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு […]

Continue Reading

அரச பணியாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி

தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை 2 இலட்சமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தி, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எமக்கு சிறந்த கடல் வளம் காணப்படுகிறது. அதனைப் பயன்படுத்தி இலங்கையை கடல்சார் வர்த்தக மையமாக மாற்ற வேண்டும். அதேபோன்று விவசாயிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். சர்வதேச நாடுகளுடன் போட்டியிடக் கூடிய விவசாயிகள் இலங்கையில் உள்ளனர். அவர்களைக் […]

Continue Reading

இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி!

இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்படி இன்று முற்பகல் 11.30 அளவில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்தார். தொடர்ந்தும் தமது கொள்கை உரையில் மக்களுக்கு நாட்டின் நீதித்துறை மீது அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை கட்டியெழுப்பப்படும். இதற்காக யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லாமல் அனைவரும் சுதந்திரமாக […]

Continue Reading