10வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று!

10வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இன்றைய தினம் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார். இதன்படி இன்று முற்பகல் 11.30 அளவில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Continue Reading

முடங்கி கிடப்பதற்கு நாம் கொள்கை கோட்பாடு அற்றவர்கள் அல்ல! செயலாளர் நாயகம் டக்ளஸ்

எமது இலட்சிய பயணத்தில் நாம் ஒரு போதும் இடையில் தரித்து நிற்கவோ முடங்கிக்கிடக்கவோ போவதில்லை. அவ்வாறு முடங்கி கிடப்பதற்கு நாம் கொள்கை கோட்பாடு அற்றவர்கள் அல்ல என கிளிநொச்சி மாவட்ட கட்சி செயற்பாட்டாளர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நேசிக்கின்ற மக்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக நிறைவேற்றுவதில் சிறிது இடைவெளி இருக்கலாம். ஆனாலும் எமது பயணம் நின்றுவிடப்போவதில்லை.எமக்கென்று ஒரு கொள்கை உண்டு, இலக்கு உண்டு,. அதை எட்டுவதற்கு ஒரு […]

Continue Reading

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது!

பதுளை நகரில் சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்திய குற்றச் சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் மௌன காலத்தில் பதுளை நகரில் சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்தியதற்காக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

Continue Reading

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான விசேட அறிவிப்பு!

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்திற்கு நாளை காலை 9.00 மணிக்கு வருகை தருமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு நாளை (21) காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் பங்குபற்றவிருக்கும் எம்.பி.க்கள் அனைவரையும் காலை 9.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகைதருமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்துக்கு வரும்போது உறுப்பினர்களின் வாகனங்கள் பொலிசாரால் அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்தலிடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களின் […]

Continue Reading

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் மரணம்: வைத்தியசாலையின் கவனயீனம் என குற்றச்சாட்டு

மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான வனஜா என்ற திருமணமாகி 10 வருடங்களே ஆன இளம் தாயே செவ்வாய்கிழமை மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். முன்னதாகவே குறித்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்த போதிலும் உரிய விதமாகக் கவனிக்கப்படவில்லை எனவும் பெண் தனக்கு சிசேரியன் செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் […]

Continue Reading

சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இந்த மாபெரும் வெற்றியை பயன்படுத்துங்கள்: நாமல்!

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொண்டு வர புதிய அரசாங்கம் ஒரு புதிய பாதையாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,  கடந்த வாரம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் எதிர்கால செயற்பாடுகளை நம்பிக்கையோடு கொண்டு செல்ல இந்த பொதுத் தேர்தல் ஒரு முக்கிய பலமாக […]

Continue Reading

உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விரிவுரைகள், பயிற்சி வகுப்புகள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் என்பன இன்று (19) நள்ளிரவுக்குப் பின்னர் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இது 2,312 பரீட்சை மையங்களிலும், 319 ஒருங்கிணைப்பு மையங்களிலும் உள்ளது.

Continue Reading

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று!

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதேவேளை பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். நேற்றைய தினம் 21 அமைச்சரவை அமைச்சர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

Continue Reading

IMF இன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர்  பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய  அமைச்சர்கள் குழுவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.   ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணையுடன் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தினார். […]

Continue Reading

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் – அநுர

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணத்தைத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, அந்த அதிகாரத்தை பாதுகாக்க புதிய அமைச்சர்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மக்களின் கடின உழைப்பு மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் வெற்றியடையச் செய்யும் வகையில் நல்லாட்சி இருக்க வேண்டும். “வெற்றி பெரியது, அந்த வெற்றிக்காக நம் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகள் சமமானவை.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கையின் வரலாற்றின் […]

Continue Reading

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – (முழு விபரம்)

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். 01.கல்வி , உயர்கல்வி , தொழிற்கல்வி அமைச்சராகவும் பிரதமர் ஹரிணி ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். 02.விஜித ஹேரத் வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார். 03.பேராசிரியர் சந்தன […]

Continue Reading