பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம்

இலங்கையின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது இடம்பெற்று வருகிறது. இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

Continue Reading

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது. 2024 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் அமோக வெற்றியைப் பதிவு செய்ததோடு, தேசிய பட்டியல் ஆசனங்கள் உட்பட பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களைக் கைப்பற்றியது. இதன்படி, புதிய அரசாங்கத்திற்கான அமைச்சரவை இன்று (18) பதவியேற்கவுள்ளது. இதன்போது, அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக […]

Continue Reading

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார். நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஈ.பி.டி.பி. கட்சியின் அடுத்த கட்ட நகர்விற்கு சிறந்த வலுவூட்டலை தந்துள்ளது என தெரிவித்துள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே பின்னடைவிற்கு காரணம் எனவும் தெரிவித்தார். அத்துடன், இந்த […]

Continue Reading

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை(18) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வு நாளை(18) காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Continue Reading

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

பத்தாவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று முதல் புதிய உறுப்பினர்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு தேவையான தகவல்களை அறிந்து கொள்வதற்காக எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் இரண்டு தகவல் சாளரங்களை திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற […]

Continue Reading

வர்த்தமானியில் வௌியான புதிய எம்.பி.க்களின் பெயர்கள்!

பொதுத் தேர்தலில் வாக்காளர்களால் 10 ஆவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 196 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்துக்கமைய, இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.  இதேவேளை தங்களது கட்சியின் சார்பில் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் கட்சிகள் அறிவிக்க வேண்டும்.  அதன் பின்னர் 29 தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் […]

Continue Reading

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் – தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் அனைத்து செலவு அறிக்கைகளையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 8888 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இது தொடர்பான விசாரணையின் போது, ​​உரிய நேரத்தில் வருமான அறிக்கையை சமர்ப்பிக்காத […]

Continue Reading

புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை குறித்த அறிவிப்பு

எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை பிற்பகல் 3.00 மணிக்கு சமர்ப்பிக்கவுள்ளார். பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு இதனை அறிவித்துள்ளது. இங்கு ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக தனது அரசாங்கத்தின் பார்வை பற்றிய விரிவான பகுப்பாய்வை பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வழங்கவுள்ளார்.

Continue Reading

நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் விஜித ஹேரத் சாதனை!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். அதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட விஜித ஹேரத் 716,715 வாக்குகளையும், அனில் ஜயரத்ன பெர்னாண்டோ 1 62, 433 வாக்குகளையும், மஹிந்த ஜயசிங்க 137, 315 வாக்குகளையும், எச் டி கிறிசாந்த சில்வா அபேசேன 121, 825 வாக்குகளையும், எம்.எம் மொஹமட் முனீர் […]

Continue Reading

மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க‌ தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி: ஜனாதிபதி

பொதுத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது நன்றிகளை  தெரிவித்துள்ளார். அவரது x தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி ‘மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க‌ தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி’ என அவர் பதிவிட்டுள்ளார்.

Continue Reading

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 97 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி – 26 ஆசனங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி – 3 ஆசனங்கள் புதிய ஜனநாயக முன்னணி – 2 ஆசனங்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி – 1 ஆசனம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1 ஆசனம் மற்றும் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி […]

Continue Reading

வன்னி மாவட்டம்: 5 கட்சிகளுக்கு ஆசனம்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,   தேசிய மக்கள் சக்தி (NPP)- 39,894 வாக்குகள் (2 ஆசனங்கள்)ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 32,232 வாக்குகள் (1 ஆசனம்)இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 29,711 வாக்குகள் (1 ஆசனம்)ஜனநாயக தமிழ் தேசிய […]

Continue Reading