யாழ்ப்பாணம் மாவட்டம் – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி முடிவுகள்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,066 வாக்குகள்இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,582 வாக்குகள்அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1,612 வாக்குகள்ஈழ மக்கள் […]

Continue Reading

கொழும்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP) – 28,475 வாக்குகள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,985 வாக்குகள்புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,814 வாக்குகள்ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன […]

Continue Reading

காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, தேசிய மக்கள் சக்தி (NPP) – 32,296 வாக்குகள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,523 வாக்குகள்புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,846 வாக்குகள்சர்வஜன அதிகாரம் (SB) – 607 வாக்குகள்

Continue Reading

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரம் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை

2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (14) நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்குச் சென்றடைந்த பின்னர் இரவு 7.15 மணிக்குப் பிறகு பிரதான வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க, தேர்தல் முடிவுகள் தேர்தல் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றவுடன் தேர்தல் முடிவுகள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என தெரிவித்தார். குறிப்பாக […]

Continue Reading

தபால்மூல வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பம்

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று இடம்பெறுகிறது. அதற்கமைய, இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது. தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏனைய வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இரவு 7.15 மணியளவில் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

2024 பொது தேர்தலில் அண்ணளவாக 60 முதல் 65 சதவீத வாக்குகள் பதிவு!

2024 பொதுத் தேர்தலில் அண்ணளவாக 60 முதல் 65 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பாரிய அளவிலான எந்தவித முறைகேடும் இதுவரை பதிவாகவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சில மாவட்டங்களில் அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெற்றன. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும், நுவரெலியா மாவட்டத்தில் 68 சதவீத வாக்குகளும், வன்னி தேர்தல் மாவட்டத்தில்  65 சதவீத வாக்குகளும், மொனராகலை மாவட்டத்தில் 63 சதவீத வாக்குகளும், மாத்தறை மாவட்டத்தில் 64 சதவீத வாக்குகளும், மாத்தளை மாவட்டத்தில் 67 […]

Continue Reading

அத்தியடி கணபதி கலாசார மண்டப வாக்குச்சாவடியில் வாக்குரிமையை செலுத்தியுள்ளார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா! 

தனது பிறந்த ஊரான யாழ் அத்தியடி கணபதி கலாசார மண்டபத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது வாக்குரிமையை செலுத்தியுள்ளார்.

Continue Reading

முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 மணிக்கு?

பொதுத் தேர்தலுக்கான முதலாவது தேர்தல் முடிவு இன்று (14) இரவு 10 மணியளவில் வெளியாகும் என தேர்தல் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. முதலாவது முடிவை தொடர்ந்து, அதன் பின்னர் தொடர்ச்சியாக ஒவ்வொரு முடிவுகளையும் வெளியிடக் கூடியதாக இருக்குமென எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார். அதற்கமைய, வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணிக்கு நிறைவடையும். வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் அமைக்கப்பட்டுள்ள 2034 வாக்களிப்பு நிலையங்களுக்க வாக்கு பெட்டிகள் கிடைத்ததும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் […]

Continue Reading

10வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்கள் தெரிவுக்கான பொது தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்!

10வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களில் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.இந்தமுறை வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 7, 140, 354 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்கலாக 690 குழுக்கள் போட்டியிடுகின்றன. அத்துடன் 8, 361 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு பணிகள் நாடளாவிய ரீதியில் […]

Continue Reading

10ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் இன்று!

10ஆவது நாடாளுமன்றத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று (14) இடம்பெறுகிறது. நாளை காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. இந்தமுறை வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 71 இலட்சத்து 40,354 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்கலாக 690 குழுக்கள் போட்டியிடுகின்றன. அத்துடன் 8,361 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் 196 உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் […]

Continue Reading

கல்கிஸ்ஸையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர், படோவிட்ட பிரதேசத்தில் வசித்த 30 வயதானவர் என தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், சந்தேகநபர்கள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை தெரியவரவில்லை. 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் ஊடாக இந்த சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக […]

Continue Reading

வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் எடுக்க வேண்டாம் – தேர்தல் ஆணைக்குழு

பொதுத் தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும், வாக்குச் சீட்டுகளையும் புகைப்படம் எடுத்தல், காணொளி எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் பதிவிடுதல் என்பன தேர்தல் சட்டங்களை மீறும் செயல்களாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே, இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து சமூக ஊடக வலைத்தள கணக்குகளின் உரிமையாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.

Continue Reading