வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் செயற்பாடு இன்று!

நாளை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் செயற்பாடு இன்று இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இன்று காலை 9 மணி முதல் மாவட்ட செயலகங்களிலிருந்து குறித்த வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன. விசேட காவல்துறை பாதுகாப்பின் கீழ் வாக்குப்பெட்டிகள் பிரதான வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர்: ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் முதலாவது அமர்வு நவம்பர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறும் என ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி  அறிவித்தலின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாவது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வுதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

மின்சார கட்டண குறைப்பு தொடர்பான புதிய பிரேரணை?

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான புதிய பிரேரணையை எதிர்வரும் வாரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.  மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான முன்மொழிவுகள் இதற்கு முன்னரும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  ஆனால் இந்த பிரேரணையை மீளாய்வு செய்து கடந்த 8ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.  இதற்கு இரண்டு வார கால அவகாசம் அளிக்குமாறு […]

Continue Reading

குறுஞ்செய்திகளினூடாக தேர்தல் பிரசாரம் – சட்டத்தை அமுலாக்க விசேட நடவடிக்கை

வேட்பாளர்களின் பெயர் மற்றும் போட்டி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு தொலைபேசி இலக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் தொடர்பில் எதிர்வரும் இரு நாட்களுக்கு கடுமையாக கவனம் செலுத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் இன்று (12) பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆன்னைகுழுவின் தலைவர் ரத்னாயக்க தெரிவித்தார். தேர்தல் பிரசார நோக்கில் குறுஞ்செய்திகளை அனுப்பும் செயற்பாடுகளின் பின்னணியில் இருக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் […]

Continue Reading

உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலையில் மாற்றம்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் சில தினங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலைமையை எதிர்பார்க்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் அதேவேளை ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய […]

Continue Reading

அவதூறு பரப்பும் “விண்ணனிடம்”  – 1000 கோடி நட்ட ஈடு கோரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பர் எனது நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான விடயங்களை அல்லது சேறுபூசல்களை திட்டமிட்ட வகையில் ஊடகங்கள் வாயிலாக பரப்பியமைக்கு எதிராக 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது விடயம் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள […]

Continue Reading

யுத்தத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை மீண்டும் நாடு திரும்புமாறு ஜனாதிபதி அழைப்பு!

யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், வடக்கைக் கட்டியெழுப்புவதற்கு மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கில் சுதந்திரமானதும் அமைதியானதுமாகச் சூழல் ஒன்றை ஏற்படுத்தத் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, வடக்கு முழுவதும் உலாவந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் தற்போதைய தேர்தல் […]

Continue Reading

அரசியல் கைதிகளை விடுவிப்பதுடன், மக்களின் காணிகளையும் விரைவில் விடுவிப்போம் – ஜனாதிபதி

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளை விடுவிப்பதுடன், மக்களின் காணிகளை விரைவில் விடுப்போம் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசியமக்கள் சக்தியின் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டம் வவுனியா நகரசபை விளையாட்டுமைதானத்தில் இன்று (10) இடம்பெற்றது. இக்கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க கலந்துகொண்டு வன்னிமாவட்ட, தேசியமக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றியிருந்தார். இதன்போதே மேற்கண்ட வாக்குறுதிகளை அவர் வழங்கியிருந்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த தேர்தலில் பிரச்சாரத்திற்காக இந்த மாவட்டத்துக்கு வந்தார். […]

Continue Reading

மின் கட்டணத் திருத்தம் – புதிய பிரேரணையை வழங்க கால அவகாசம்!

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான புதிய பிரேரணையை வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மேலும் 15 நாட்கள் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தரவுகளைப் பகுப்பாய்வு செய்து மேலதிக கணக்கீடுகள் செய்யப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாகவே இவ்வாறு கால அவகாசம் கோரியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Continue Reading

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

அம்பலாங்கொடை, ஊரவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading

பாரிய கொலைகளை நிகழ்த்தியவர்கள் தொடர்ந்தும் சுதந்திரமாக சுற்றித்திரிய முடியாது – ஜனாதிபதி

கடந்த காலங்களில் பாரிய கொலைகளை நிகழ்த்திவிட்டுத் தலைமறைவாகியுள்ளவர்களுக்குத் தொடர்ந்தும் சுதந்திரமாகச் சுற்றித்திரிய இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசியல் களத்தில் ஒருபோதும் வன்முறையாளர்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது. சிலருக்கு வேதனையளிக்கும் தீர்மானங்களுக்கும் எடுக்கப்படும். இதற்குப் பலமிக்கதொரு நாடாளுமன்ற அவசியமாகிறது. அனுபவமிக்கவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு கூறுபவர்களும், புதிய முகங்களையே அனுப்ப வேண்டும். ஏனெனில், நாடு எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பிறகு புதிய திசையில் செல்ல […]

Continue Reading

மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க நடவடிக்கை: ஜனாதிபதி!

மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இன்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  “ஒன்றரை வருடத்தில் மின்சாரத்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். மின்கட்டணத்தை 30%க்கு மேல் குறைப்போம்.அதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், எரிபொருள் விலையை கூட குறைக்க கால அவகாசம் வேண்டும்.நாங்கள் இவற்றை செய்வோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading