பல்கலைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அறிவிப்பு

கொழும்பு,டிச 09 பல்கலைக்கழகத்திற்காக தகுதிபெற்ற மாணவர்களை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகவுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் மேற்கொள்ள முடியும். இரண்டு வாரங்களுக்குள் அந்த பதிவு நடவடிக்கைகளை நிறைவுறுத்த திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

காலநிலை மாற்றம்: இன்று அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

கொழும்பு,டிச 09 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வளிமண்டல மாசடைவினால் பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் இன்று பாடசாலைகள் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

Continue Reading

பாடசாலைகளை நாளை மூடுவது தொடர்பில் தீர்மானிக்க கோரிக்கை!

கொழும்பு,டிச 08 வளிமண்டல சூழலை கருத்தில் கொண்டு நாளை (வெள்ளிக்கிழமை) பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர், சரா.புவனேஸ்வரன் கல்வி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அக் கடிதத்தில் தெரிவருவதாவது ” நாடு முழுவதும் வளிமண்டலம் மோசமாக உள்ளது. மலையக பிரதேசங்களில் சூறாவளியுடன் குளிந்த காலநிலைய மாறியுள்ளது வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மிகையான குளிருடன் […]

Continue Reading

பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள்

கொழும்பு,டிச 08 கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குழுவுக்கு உறுப்பினர்களை தெரிவுக்குழு நியமித்துள்ளது. அதன்படி, ஷெஹான் சேமசிங்க, தாரக பாலசூரிய, பவித்ரா தேவி வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மேலும், உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், அகில எல்லாவல, குமாரசிறி ரத்நாயக்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார மற்றும் மர்ஜான் ஃபளீல் ஆகியோரும் தெரிவுக்குழுவில் பெயரிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

Continue Reading

வெளியில் பயணிப்போர் கட்டாயமாக முகக்கவசம் அணியுமாறு ஆளுநர் கோரிக்கை

வெளியில் செல்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அவசர அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தற்பொழுது நாட்டில் வளிமண்டலத்தில் தூசு அதிகரித்துள்ள சீரற்ற காலநிலையினால் இதய நோய் உள்ளவர்கள் மற்றும் சிறுவர்கள் முதியவர்களுக்கு வேறு பல நோய்கள் ஏற்படக்கூடிய சாத்திய கூறு காணப்படுவதனால் வட பகுதியில் வெளியில் பயணிப்போர் கட்டாயமாக முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Continue Reading

8ஆம் தரத்தில் இருந்து செயற்கை நுண்ணறிவு பாடம் அறிமுகப்படுத்தப்படும்: சுசில்

கொழும்பு,டிச 08 2023ஆம் ஆண்டு முதல் சாதாரண தரப் பாடத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தை உள்ளடக்குவதோடு , 8ஆம் தரத்தில் இருந்து செயற்கை நுண்ணறிவு பாடமாக அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்தைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் வேலை வாய்ப்புகளைத் தேடுவது அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடினமான பணியாக இருக்கும் என்றும், இந்த வளர்ச்சியைத் தயாரிக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தரம் 10 இல் பாடத்தை […]

Continue Reading

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

கொழும்பு.டிச 08 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதுவர்களுடன் பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று அலரி மாளிகையில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நாட்டில் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை தொடர்பில் பிரதமர் தூதர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டெனிஸ் சிபி, ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட், நெதர்லாந்து தூதுவர் போனி ஹோர்பாக், பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பாக்டெட் மற்றும் ரோமானிய தூதரகத்தின் தூதுவர் விக்டர் […]

Continue Reading

வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் திலும்

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பது மிக முக்கியமானது என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இன்று காலை பாராளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் அமுனுகம, நாடு பாரிய கடன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள போதிலும் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தார். கடன் நெருக்கடிக்கு மேலதிகமாக, தனது அமைச்சு பல […]

Continue Reading

கொழும்பில் 10 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் (10) காலை 10 மணி முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலை நீர்விநியோக நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவெல மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளுக்கும் நாளை மறுதினம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி […]

Continue Reading

கொழும்பு – பதுளை இரவு நேர அஞ்சல் ரயில்கள் இரத்து

கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையிலான இரு இரவு அஞ்சல் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஒஹிய மற்றும் இடல்கஸ்ஹின்ன ஆகிய இடங்களுக்கு இடையில் புகையிரத மார்க்கத்தில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்தமையே இதற்கு காரணம் என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

Continue Reading

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வர்த்தமானி விரைவில்! – தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இந்த மாதத்தின் இறுதி வாரத்திற்குள் கோருவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அதன்படி அரசியலமைப்பின் 98ஆவது சரத்தின் 08 ஆவது உபசரத்திற்கு அமைய, உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்படக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இதற்கான வர்த்தமானி விரைவில் வௌியிடப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

காற்று மாசு நிலைமை கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல – வைத்தியர் அனில் ஜாசிங்க

பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசு நிலை காரணமாக சுகாதாரப் பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை அணியுமாறு வைத்தியர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்ள்ளார். இது தொடர்பில் வைத்தியர் தெரிவிக்கையில் “இயலுமானவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் இந்தியாவில் இருந்து வரும் காற்றால் , ​​கொழும்பு, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, புத்தளம், கண்டி, வவுனியா போன்ற முக்கிய நகரங்களில் இந்த மோசமான காற்று மாசு நிலை பதிவாகியுள்ளது இந்த நிலைமையை இலங்கையில் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், இதய நோயாளிகள் மற்றும் […]

Continue Reading