பல ரயில் சேவைகள் இரத்து

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வௌ்ளம் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, இன்று(27) கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த உதயதேவி ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் மலையக மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்து நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (27) இரவு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் செல்லவிருந்த இரவு அஞ்சல் ரயில் […]

Continue Reading

பிரதமருக்கும் பல நாடுகளின் தூதுவர்களுக்கிடையில் சந்திப்பு!

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு பல நாடுகளின் தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது அதன்படி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது இதில் எகிப்து நாட்டின் தூதுவர், அடெல் இப்ராஹிம்( Adel Ibrahim), ஈரான் தூதுவர், கலாநிதி அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh), ஜப்பான் தூதுவர் ISOMATA Akio மற்றும் இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் (Apostolic Nuncio) அதி […]

Continue Reading

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இம்மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை வானிலை நிலைவரம் மீளாய்வு செய்யப்பட்ட பின்னரே உயர்தர பரீட்சைகள் தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (27), நாளை (28), நாளை மறுதினம் (29) க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார். தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் பலத்த மழையினால் வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், 29ஆம் திகதி […]

Continue Reading

மன்னாரிற்கு விஜயம் செய்த பாதுகாப்பு பிரதி அமைச்சர்!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இன்று (27) புதன் காலை வரை 15,205 குடும்பங்களைச் சேர்ந்த 52,487 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் 1,240 குடும்பங்களைச் சேர்ந்த 4,128 நபர்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 43 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு தற்காலிக […]

Continue Reading

மழைக்கு மத்தியிலும் அஸ்வெசும விண்ணப்பங்களை பெற வந்த மக்கள்

அஸ்வெசும நிதி திட்டத்துக்கான புதிய அரசாங்கத்தின் விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்வதற்காக கடும் மழையிலும் நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு முன் பாரிய கூட்டம் (27) காலை முதல் காணப்பட்டன. இது தொடர்பாக நுவரெலியா பிரதேச செயலகத்திடம் நாம் வினவிய போது, புதிய அரசாங்கத்தினால் நிவாரண உதவித் திட்டத்திற்கு புதிய பயனாளிகளை தெரிவு செய்வதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தினால் இன்று வழங்கப்பட்ட போது விண்ணப்பங்களைப் பெற எதிர்பாராமல் மக்கள் குழுவொன்று வருகை தந்ததாக பொறுப்பான அதிகாரிகள் […]

Continue Reading

மேலும் நான்கு முன்னாள் அமைச்சர்களுக்கு சிஐடி அழைப்பு

இலங்கைக்குள் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மேலும் 04 முன்னாள் அமைச்சர்கள் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, முன்னாள் அமைச்சர்களான நளின் பெர்னாண்டோ, விதுர விக்கிரமநாயக்க, நசீர் அஹமட் மற்றும் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தந்துள்ளனர். இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி இந்த சம்பவம் தொடர்பில் […]

Continue Reading

சீரற்ற வானிலையால் 4 பேர் உயிரிழப்பு

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் தெரிவித்துள்ளார். சீரற்ற வானிலையால் 18 மாவட்டங்களில் உள்ள 141 பிராந்திய செயலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் 66,947 குடும்பங்களைச் சேர்ந்த 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணத்தில் 1,893 குடும்பங்களைச் சேர்ந்த 6,615 பேர் […]

Continue Reading

உள்நாட்டு உற்பத்தி 4.5 வீதம் முதல் 5 வீதம் வரை வளர்ச்சியடையும் – நந்தலால் வீரசிங்க!

இந்த வருடத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 வீதம் முதல் 5 வீதம் வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற செய்திக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடனை மீளச் செலுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுமாயின் நாடு நெருக்கடிக்கு உள்ளாகும் என்ற கருத்து தவறானதாகும். இலங்கை தொடர்ந்தும் தற்போதைய பாதையிலேயே பயணிக்குமாயின் நெருக்கடியைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என மத்திய […]

Continue Reading

சாதகமான விதத்தில் இடம்பெறும் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகள் – கத்தோலிக்க ஆயர் பேரவை வரவேற்பு

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகள் சாதகமான விதத்தில் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை எஞ்சியுள்ள பணிகள் விரைவில் முடிவடையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சிஐடியினர் முன்னெடுக்கும் விசாரணைகளில் சில சாதகதன்மைகளை அவதானித்துள்ளதாக கத்தோலிக்க ஆயர்பேரவையின் பேச்சாளர் ஜூட் கிறிசாந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ராஜபக்ச விக்கிரமசிங்க அரசாங்கங்கள் அலட்சியம் செய்த சில விடயங்கள் குறித்து சிஐடியினர் தற்போது கவனம் செலுத்துகின்றனர் என தெரிவித்துள்ள அவர் உதாரணத்திற்கு சனல் 4 ஆவணப்படத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட தனிநபர்களை தற்போது விசாரணைக்கு […]

Continue Reading

எலிக்காய்ச்சலால் அதிகளவு மரணங்கள் பதிவு!

எலிக்காய்ச்சலினால் அதிகளவான மரணங்கள் இந்த வருடம் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண சபை வளாகத்தில் நடைபெற்ற எலிக்காய்ச்சல் தடுப்பு அறிவிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். இரத்தினபுரி மாவட்டத்தில் 1,882 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 பேர் எலிக்காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் எஹெலியகொட, கிரியெல்ல, அலபத, பெல்மடுல்ல, ஓபநாயக்க, நிவித்திகல, கலவான மற்றும் கல்தொட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் அபாயம் […]

Continue Reading

இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இரத்து

இன்று (27) இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த இரவு நேர அஞ்சல் புகையிரதம் இரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Continue Reading

திருகோணமலை மாவட்டத்தில் 1708 குடும்பங்கள், 4851 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 1708 குடும்பங்களைச் சேர்ந்த 4851 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பலத்த மழை, வெள்ளம் காரணமாக 65 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். இதேவேளை, 532 குடும்பங்களைச் சேர்ந்த 1,621 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். மேலும், திருகோணமலை மாவட்டத்தில் 06 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Continue Reading