ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை வர்த்தக கண்காட்சி அக்டோபரில்!

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை வர்த்தக கண்காட்சி தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் நேற்று (26) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமையில் இடம்பெற்றது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள RAK கண்காட்சி மையத்தில் 2023 அக்டோபர் 20 முதல் 29 வரை வர்த்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. “தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில் இலங்கைக்கும் ஐக்கிய […]

Continue Reading

புதிய தொலைக்காட்சி மற்றும் வானொலி உரிமம் வழங்குவது குறித்த தீர்மானம்

புதிய தொலைக்காட்சி மற்றும் வானொலி அனுமதிப்பத்திரங்கள் அது தொடர்பில் நியமிக்கப்பட்ட இலத்திரனியல் ஒலிபரப்பு அதிகார சபை சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வழங்கப்படுமென வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான சந்தர்ப்பம் உள்ளதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொலைக்காட்சி மற்றும் வானொலி உரிமங்களை வழங்குவது தொடர்பாக வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக மின்னணு ஒலிபரப்பு அதிகாரசபை […]

Continue Reading

நீர் கட்டணத்தை உயர்த்த திட்டம்!

நீர் கட்டணத்தை விரைவில் உயர்த்த வேண்டும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் பிரதி பணிப்பாளர் என்.கே. ரணதுங்க இன்று தெரிவித்துள்ளார். அண்மையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மேலதிக செலவை சபை ஏற்க வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். “மின் கட்டண உயர்வால், 10 வருடங்களுக்கு பின்னர், கடந்தாண்டு செப்டெம்பரில் நீர் கட்டணமும் உயர்த்தப்பட்டது. மீண்டும் 2023 ஜனவரியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது, ஆனால் அந்த உயர்வு இன்னும் நீர் கட்டணத்தில் சேர்க்கப்படவில்லை,” என்றார். […]

Continue Reading

வசந்த கரன்னாகொட அமெரிக்கக் கறுப்புப் பட்டியலில் – இலங்கை அரசாங்கம் கண்டனம்

முன்னாள் கடற்படை தளபதியும், தற்போதைய வட மேல் மாகாண ஆளுநருமான அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரண்ணாகொட கறுப்புப் பட்டியலில் சேர்த்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இன்று (27) அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் இந்த முடிவு தொடர்பான கடுமையான கவலைகளை தெரிவித்தார். உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் அமெரிக்காவின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கையானது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் இலங்கை எடுத்துள்ள முழுமையான […]

Continue Reading

தாமதமாகும் உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்த மருத்துவர்கள் தயார்

தொடர்ந்து தாமதமாகும் உயர்தர மாணவர்களின் விடைத்தாள்களை மருத்துவர்களால் மதிப்பீடு செய்ய முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் அதனை நிறைவேற்ற முடியும் என சங்கத்தின் தலைவர் ருக்ஷான் பெல்லான தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும், அதற்குப் பதிலாக அரசாங்கம் வேறு தகுதியானவர்களை வேலைக்கு அமர்த்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் […]

Continue Reading

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வலிவடக்கு தையிட்டி விகாரைக்கு கலசம் வைப்பு

யாழில் மற்றும் ஒரு புத்தர் கோயிலுக்கு கலசம் வைக்கம் நிகழ்வு இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிகழ்விற்கு பெருமளவான இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள குறித்த விகாரை யாழிலேயே அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விகாரையிலேயே இன்று கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெறுகின்றது. தமிழர் தாயகம் எங்கும் சிறிலங்கா அரசாங்கம் புத்தர் கோயில்களை […]

Continue Reading

சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு இலங்கை மக்களுக்கு அறிவிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான நால்வர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 72 ஆயிரத்து 143 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றானது குறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதானது ஆபத்தான விடயம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றிலிருந்து தங்களை […]

Continue Reading

அதிக நீரை பருகுங்கள் – பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தற்போதைய வெப்பமான காலநிலையின் போது நீர்ப்போக்குதலைத் தடுக்க போதிய கனிமங்களுடன் கூடிய திரவங்களை அதிகளவில் உட்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை (LRH) ஆலோசகர் மற்றும் குழந்தை மருத்துவரான வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் வழங்க வேண்டும். நெற் செய்கை , வீதி அமைத்தல், பாடசாலை மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் விளையாடுதல், படைகளால் நடத்தப்படும் பயிற்சி அமர்வுகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் புத்தாண்டு விளையாட்டு அமைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் போன்றவற்றில் மக்கள் […]

Continue Reading

கடற்றொழில் அபிவிருத்திக்கு சவூதியின் ஒத்துழைப்பை பெற முயற்சி!

கடற்றொழில் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு சவூதி அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சிற்கு இன்று (27.04.2023) வருகைதந்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இவ்விடயம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது. கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் முன்னேற்றும் நோக்கில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய பல்வேறு திட்ட முன்வைரைபுகள் தயார்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை சவூதி அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்வது […]

Continue Reading

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க நீதிமன்றம் அனுமதி

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதேவேளை பொலிஸார் எடுத்துச்சென்றுள்ள விக்கிரகங்களையும் ஆலய பரிபாலனசபையிடம் உடனடியாக ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றம் குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது. குறித்த வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,காவல் நிலையத்தில் உள்ள அனைத்து திருவுருவச்சிலைகளும் பூசாரியிடம் ஒப்படைக்க […]

Continue Reading

சவேந்திரவுக்கு எதிராக விமல் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு: மறுக்கும் பாதுகாப்பு அமைச்சு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, பாதுகாப்புத் தலைமை அதிகாரி சவேந்திர சில்வாவுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டை, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா, அரகலய போராட்டத்தின்போது இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் சதித்திட்டத்திற்கு ஆதரவளித்ததாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார். 2022ஆம் ஆண்டு மே 09ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களின் முதல் திட்டமாக, அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தலைவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் […]

Continue Reading

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் சபையில் சமர்பிப்பு

புதிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நீதி , சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவினால் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வாய்மூல விடைக்கான கேள்விநேர நிறைவின் பின்னர் இந்தச் சட்டமூலம் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Continue Reading