சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க புதிய முறைமை

சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கையடக்க தொலைபேசிகளுக்கான ரிங்டோனை அறிமுகப்படுத்த அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் 99.9 வீதமான மக்கள் கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பதால், சுனாமி அபாயம் குறித்து கையடக்கத் தொலைபேசியின் ரிங்டோன் மூலம் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சுதந்த ரணசிங்க தெரிவித்தார். தொலைபேசி நிறுவனங்கள் இணைந்து இந்தப் பணியைச் செய்து வருவதாகத் தெரிவித்தார். பெரும்பாலானோர் அதிகாலை 1 […]

Continue Reading

நாட்டில் 7 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் 26ஆம் திகதி புதன்கிழமை 7 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் அறிக்கைப்படி, இதுவரை 6,72,143 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

வரி செலுத்தும் செயல்முறைக்கு இலத்திரனியல் முறை

வரிவிதிப்பு வரம்பை விரிவுபடுத்தும் நோக்கில் 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் பல விசேட திருத்தங்கள் நாளை (28) பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வரி செலுத்தும் செயல்முறைக்கு இலத்திரனியல் முறைகளை அறிமுகப்படுத்துதல், தடுத்து வைத்தல் வரி விலக்கை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட பல திருத்தங்கள் இதில் உள்ளடங்குவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். “தனிப்பட்ட வருமான வரி செலுத்துவோருக்கு மின்னணு வழிமுறைகள் மூலம் வரிக் கணக்கு தாக்கல் […]

Continue Reading

நயினாதீவில் புதிய மின் பிறப்பாக்கி – குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

நயினாதீவு பிரதேசத்தில் பழுதடைந்திருந்த மின்பிறப்பாக்கிக்கு பதிலாக சுமார் 300 மெகாவாட்ஸ் உற்பத்தி திறனுள்ள மின்பிறப்பாக்கி ஒன்று புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இலங்கை மின்சார சபையினால் இந்த மின்பிறப்பாக்கி பொருத்தப்பட்டளே்ளது. இதன்மூலம், நயினாதீவிற்கு 24 மணித்தியால மின்சார விநியோகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், RO திட்டத்தினை சீராக செயற்படுத்தி நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகியவற்றுக்கான குடிநீர் விநியோகத்தினை தொடர்ச்சியாக வழங்குவதற்கான வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

தமிழர்கள் ஜனாதிபதி ரணிலின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும் – மனுஷ கோரிக்கை

தமிழ் மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கரங்களைப் பலப்படுத்தினால் தீர்வை விரைவில் வென்றெடுக்க முடியும். அதைவிடுத்து இனவாத நோக்குடன் அரசு மீது விமர்சனங்களை முன்வைப்பதால் எதனையும் பெற முடியாது – என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இது ராஜபக்சக்கள் தலைமையிலான ஆட்சி அல்ல; ரணில் தலைமையிலான ஆட்சி. இந்த ஆட்சியில் இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் ஒருபோதும் இடமில்லை. தமிழர்களை அரவணைத்தே இந்த அரசு பயணிக்கின்றது. இந்நிலையில், தமிழ் மக்களின் அரசியல் […]

Continue Reading

வெப்பமான காலநிலை விரைவில் குறையும் – வளிமண்டலவியல் திணைக்களம்

எதிர்வரும் மே மாதம் 20ம் திகதிக்கு பின்னர், வெப்பமான காலநிலை குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டில் தற்போது மழை கிடைக்கப்பெறும் நிலையில், வெப்பம் குறைவடைவதற்கான சாத்தியங்கள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் காணப்பட்ட வெப்பநிலை தற்போது சிறியளவில் குறைவடைந்துள்ளது. எனினும், இன்னும் வெப்பநிலை நீங்கவில்லை. மழைவீழ்ச்சி தொடர்ந்தும் அதிகரிக்குமானால், வெப்பநிலை அடுத்த மாதம் 20ம் திகதிக்கு பின்னர் குறைவடையும் […]

Continue Reading

அதிவேக கட்டணங்களில் மாற்றம் – புதிய வர்த்தமானி அறிவிப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டணங்களை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு அச்சுகள் மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் அல்லது இரண்டு அச்சுகள் மற்றும் 06 சக்கரங்களைக் கொண்ட இரட்டைப் பயன்பாட்டு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Continue Reading

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் நுகர்வோருக்கு விற்பனை

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்தால், அவர்கள் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை நுகர்வோருக்கு விற்பனை செய்வார்கள் என்று அரச வணிக இதர சட்டப்பூர்வக் கழகம் தெரிவித்துள்ளது. குறித்த திணைக்களத்திடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார். நாட்டில் முட்டை தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. எவ்வாறாயினும், மேல் மாகாணத்தில் உள்ள பேக்கரி பொருட்கள் மற்றும் ஹோட்டல் தொழிற்சாலைகளுக்கு மாத்திரம் […]

Continue Reading

வசந்த கரணாகொடவிற்கு பயணத்தடை விதித்த அமெரிக்கா

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொடவிற்கு அமெரிக்கா பயணதடை விதித்துள்ளது அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் தளபதியாக பதவிவகித்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுடன் இலங்கையின் வடமேல் மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக உள்ள வசந்த கரணாகொடவிற்கு உள்ள தொடர்புகள் காரணமாக வெளிநாட்டுச்செயற்பாடுகள் மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டுச்சட்டம் 2023 இன் பிரிவு 7031 இன் கீழ் வசந்தகரனாகொடவை இந்த பட்டியலில் […]

Continue Reading

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மாலை வேளையில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிலீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் கரையோரப்பகுதிகளில் முற்பகல் […]

Continue Reading

நாவலர் கலாசார மண்டப விவகாரம்; யாழ்ப்பாண மேல்நீதிமன்றின் இடைக்கால கட்டளை நீடிப்பு

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் விதித்த இடைக்கால கட்டளை மே மாதம் 29ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டபோதே நீதிமன்றம் இடைக்கால கட்டளையை நீடித்து உத்தரவிட்டது. வடக்கு மாகாண ஆளுநர் யாழ் மாநகர சபையினை நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேற பணித்ததுடன் அதனை புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள […]

Continue Reading

யாழ் சாவகச்சேரியில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை!

யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் நன்கொடையாளர்களின் உதவியுடன் இலவசமாக கண்புரை சத்திரசிகிச்சையினை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நோயாளர்களைத் தெரிவுசெய்யும் முதலாவது கண்பரிசோதனை முகாம் எதிர்வரும் 29.04.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. எனவே கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட நோயாளர்கள் […]

Continue Reading