பாராளுமன்ற உறுப்பினர்களின் நாடகம் இன்று அம்பலமானது: சுமந்திரன்
கொழும்பு, மே 05 “சியம்பலாப்பிட்டியவுக்கு பதிலாக சியம்பலாபிட்டிய“ என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அண்மையில் பதவியை இராஜினாமா செய்த ரஞ்சித் சியம்பலாபிடிய இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “சியம்பலாப்பிட்டியவுக்கு பதிலாக சியம்பலாபிட்டி! எண்ணிக்கை இப்போது தெளிவாகிவிட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் உண்மையான எதிர்க்கட்சி 65 (இன்று இல்லாதவர்கள் +5 பேர் இருக்கலாம்). “அதிருப்தியாளர்களின்” நாடகம் இன்று அம்பலமானது.
Continue Reading