மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு!

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று வரை 2 வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று அதிகாலை மேலும் ஒரு வான்கதவு திறக்கப்பட்டது. இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது. அத்துடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. அத்தோடு, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் […]

Continue Reading

யாழ்ப்பாணத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவு!

இன்று (27) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, அங்கு 253 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் முல்லைத்தீவு, துணுக்காய் பகுதியில் 253 மி.மீ. மழை வீழ்ச்சும், அச்சுவேலி பகுதியில் 245.3 மி.மீ மழை வீழ்ச்சும் பதிவாகியுள்ளது. இதேவேளை, தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 130 கிலோ […]

Continue Reading

அதிகாரிகளின் விடுமுறை இரத்து – நீர்ப்பாசன அமைச்சு அறிவிப்பு

நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இதன்படி, நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் தமது பணியிடங்களில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது விடுமுறை கோரியுள்ள அதிகாரிகளின் விடுமுறை இரத்துச் […]

Continue Reading

மத்ரஸா மாணவர்கள் இருவரின் சடலங்கள் மீட்பு

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பங்கேற்றுள்ளதுடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளது. உழவு இயந்திரத்தில் 11 மாணவர்கள், சாரதி மற்றும் உதவியாளர் பயணம் செய்தனர், இதன்போது, வௌ்ளத்தில் சிக்கிய 5 மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். அதன்படி, காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களை தேடும் பணிகள் […]

Continue Reading

மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை

சீரற்ற காலநிலை காரணமாக மலையக மற்றும் மட்டக்களப்புக்கான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பு மார்க்கத்தில் பொலனறுவை வரையிலான ரயில் போக்குவரத்தை மட்டுப்படுத்தவும் நானுஓயா வரையிலான மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்தை மட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Continue Reading

நாடாளுமன்றத்தை வலுப்படுத்தும் பொறுப்பு சபாநாயகரின் கரங்களில் – கர்தினால்

புதிய சபாநாயகர் நாடாளுமன்றத்தை வலுப்படுத்தவேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய சபாநாயகரை சந்தித்தவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பலவீனமான நிலையில் நாடாளுமன்றத்திற்கு புத்துயிர் அளிக்கும் பணி சபாநாயகர் அசோக ரண்வலவின் கரங்களில் உள்ளது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Continue Reading

கொழும்பு உட்பட சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்!

களனி ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் கொழும்பு உட்பட சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. சீதாவாக்கை, தொம்பே, ஹோமாகம, கடுவலை, பியகம, கொலன்னாவை, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கே வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிகவும் கவனமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Continue Reading

சுண்ணாம்புச்சூளை வீதி வெள்ளத்தில் மூழ்கியது

கன மழை காரணமாக முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கைவேலி சுண்ணாம்புச்சூளை வீதி நீரில் மூள்கியுள்ளதால் அவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் பலத்த இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதிக்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். அந்த வகையில் சுமார் 1.5 கிலோமீற்றர் தூரமான சுண்ணாம்புச்சூளை வீதியானது நீண்டகாலமாக சீரின்றி காணப்படுவதாக அப்பகுதி மக்களால் நாடாளுன்ற உறுப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இதனால் பாடசாலை மாணவர்கள், அவசர மருத்துவ சேவையைப் பெறுவதற்காக செல்பவர்கள் […]

Continue Reading

பாதிப்பு தொடர்பில் தமிழில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்!

நிலவும் அசாதாரண காலநிலையின் பாதிப்புகள் குறித்து தமிழ் மொழி மூலம் அறிவிக்கவும், அவசர ஒத்துழைப்புகளைக் கோரவும் 107 என்ற விசேட அவசர அழைப்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Continue Reading

அம்பாறை – ஒலுவில் பகுதியில் உடைந்து விழுந்த பாலம்

அம்பாறை மாவட்டத்தின் ஓலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்து விழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று-கல்முனை பிரதான பாதையின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியில் ஒலுவலில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் இன்று அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக அதன் ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. வெள்ள நீரோட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக […]

Continue Reading

யாழ்ப்பாணம் – கொழும்பு வீதியின் போக்குவரத்து பாதிப்பு

யாழ்ப்பாணம்-கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் இன்று (27) காலை பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், அக்குரஸ்ஸ, இம்புல்கொடவில் படகில் ஏறி வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 16 வயது மாணவன் ஒருவரை 20 வயது இளைஞன் காப்பாற்றியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. களனி கங்கை நிரம்பி வழிவதால் க்ளென்கொஸ், கித்துல்கல, தெரணியகல மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு வண்டி – மாயமான 8 பேரை மீட்கும் பணிகள் தொடர்கிறது

அம்பாறை – காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் வெள்ளத்தில் கலப்பை அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 6 சிறுவர்கள் உட்பட 8 பேரை மீட்கும் பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இதன்போது உழவு வண்டியில் 11 சிறுவர்கள் பயணித்துள்ளனர். இதையடுத்து அவர்களில் 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 6 பேர் காணாமல் போயுள்ளனர். இதேவேளை, குறித்த உழவு வண்டியின் சாரதி மற்றும் உதவியாளரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. […]

Continue Reading