10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் 3 மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மூன்றாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் ஹரிஸ்பத்துவ, மெததும்பர, கங்கவட்ட கோரளை, உடதும்பர, […]

Continue Reading

ஓமந்தை பகுதியில் வௌ்ளம்- சாரதிகளுக்கு அறிவித்தல்

யாழ்ப்பாணம் செல்லும் A9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Continue Reading

அரச வாகனங்களை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை மீண்டும் ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில், அரச வாகனங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த கேள்விக்கு மேலும் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்துக்குச் சொந்தமான வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு உரிய நபர்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அரச வாகனங்களை மீண்டும் ஒப்படைத்தவர்கள் மற்றும் […]

Continue Reading

நீர்த்தேக்கங்கள், ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம்

நாட்டின் பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாகவும் பெரும்பாலான ஆறுகள் பெருக்கெடுத்து வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (27) காலை நிலவரப்படி தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 32,145 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதாக அதன் பொறியாளர் ஜி. டபிள்யூ. ஏ. சதுரா தில்தாரா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, ஹலவத்தை, ஆராச்சிக்கட்டுவ, ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு […]

Continue Reading

இலங்கை பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் – கிரிஷ்டலினா ஜோர்ஜியேவா!

இலங்கை அதிகாரிகள் தங்களது சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் நிலைத்து நின்று பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தைச் செயற்படுத்தி வருகின்றனர். கடன் நிலைத்தன்மை மற்றும் வெளிப்புற நம்பகத்தன்மை என்பவற்றை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த […]

Continue Reading

ஜனாதிபதி இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுகிறார் – சரத் வீரசேகர

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு நடைமுறையில் பிறிதொன்றை செயற்படுத்துவது முறையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் குறை, […]

Continue Reading

ஜனாதிபதிக்கு டலஸ் கடிதம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை மீளப்பெற நடவடிக்கை எடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும், உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த ஏற்பாடு செய்யுமாறும் உரிய கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் இன்றைய நிலவரப்படி நடைமுறையில் இல்லை எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

Continue Reading

சீரற்ற காலநிலையால் ஒருவர் மரணம் – 77,670 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 77,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, 821 குடும்பங்களைச் சேர்ந்த 2,770 பேர் நிவாரண நிலையங்களில் உள்ளனர். 6 வீடுகள் இடிந்தும், 265 பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

Continue Reading

மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வட்டி விகிதம் அறிமுகம்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி முதல் தற்போதைய இரட்டைக் கொள்கை வட்டி வீத முறைக்குப் பதிலாக ஒற்றைக் கொள்கை வட்டி வீத முறையை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியால் செயல்படுத்தப்படும் நெகிழ்வான பணவீக்க இலக்கு கட்டமைப்பில் இது மற்றொரு முக்கியமான முன்னேற்றமாகும். அதன்படி, மத்திய வங்கி தனது பணவியல் கொள்கை நிலைப்பாட்டை தெரிவிக்கவும் செயல்படுத்தவும் பயன்படுத்தும் முக்கிய பணவியல் கொள்கை கருவியாக ஓரிரவு கொள்கை […]

Continue Reading

பாராளுமன்ற நீர் தடாகத்திற்குள் வீழ்ந்த தேசிய மக்கள் கட்சியின் உறுப்பினரின் வாகனம்

தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் நேற்று (26) மாலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்கவை மீண்டும் ஏற்றிச் செல்ல சாரதி வந்தபோதே இவ்வாறு தடாகத்திற்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Continue Reading

இன்று சூறாவளியாக வலுவடையும் தாழமுக்கம்! எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையானது திருகோணமலைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீற்றர் தொலைவில் நேற்றிரவு இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று (27) சூறாவளியாக மேலும் வலுவடையும். இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு, மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை, பலத்த காற்று வீசக்கூடும். வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு […]

Continue Reading

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம்!

நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் வசதியாக காவல்துறை தலைமையகத்தில் 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொதுமக்கள் 0112 027 148 0112 472 757 0112 430 912 மற்றும் 0112 013 051 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும், ‘[email protected]’ என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும் என காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

Continue Reading