மக்களின் மத நம்பிக்கைகளுடன் விளையாடுவது ஆபத்தானது – ஜனாதிபதி தெரிவிப்பு

மக்களின் மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே உலகம் முன்னோக்கி நகர்கின்றது. எனவே மக்களின் மத நம்பிக்கைகளுடன் விளையாடுவது முறையல்ல என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத சுதந்திரத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான் கொண்டு வரும் தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கும் என்றும் கூறினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வியாழக்கிழமை (13) பிற்பகல் பொருளாதார மீளாய்வு கலந்துரையாடல்களில் கலந்துக்கொள்வதற்காக நிதியமைச்சுக்கு சென்றிருக்கையில், விடயதாணத்திற்கு முன்னர் அங்கிருந்த நிதி இராஜாங்க அமைச்சர் […]

Continue Reading

அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் நீக்கம்

வாகனங்கள் தவிர மற்ற அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் செப்டம்பர் முதல் வாரத்தில் அரசாங்கம் நீக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சு அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சின் போதே ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 286 பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் உட்பட மேலும் 930 பொருட்களின் இறக்குமதித் தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இதேநேரம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 500 பொருட்களுக்கு […]

Continue Reading

சீமாட்டி வைத்தியசாலை காத்திருப்புப் பட்டியலில் 2,000 சிறுவர்கள்

இதய அறுவை சிகிச்சைகளுக்காக 2,000 வரையிலான சிறுவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்தது. வைத்தியசாலையின் இதய நோய் பிரிவின் மருத்துவ ஊழியர்கள் குழாம் நாளொன்றுக்கு 05 அறுவை சிகிச்சைகள் வீதம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, அதன் பணிப்பாளர் வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார். மருத்துவ ஊழியர்கள் குழாம் இதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும், பௌதீக வளங்கள் பற்றாக்குறையினால் இதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாதுள்ளது. இதற்கான தீர்வாக 11 மாடிகளைக் […]

Continue Reading

செவ்வாயன்று ஜனாதிபதியை சந்திக்கிறது தமிழரசுக்கட்சி – அதிகாரப்பகிர்வை வலியுறுத்த உத்தேசம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கு முன்பதாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) அவரைச் சந்திக்கவுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ள நிலையில், தமிழர் விவகாரத்தில் ஜனாதிபதியிடம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி எவ்விடயங்களை வலியுறுத்தவேண்டும் என்பது பற்றித் தமிழ்த்தேசிய கட்சிகள் கடிதங்களை அனுப்பிவைத்திருப்பதுடன் இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமது நிலைப்பாடுகளை நேரடியாகவும் […]

Continue Reading

சாரதியின் கவனயீனமே பதுளை – தெமோதரை பேருந்து விபத்திற்கான காரணம்

சாரதியின் கவனயீனமே பதுளை – தெமோதரை பேருந்து விபத்திற்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று தெமோதரை பகுதியில், வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில், காயமடைந்த 21 பேர் தொடர்ந்தும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். விபத்தில் காயமடைந்தவர்களில், 8 பெண்களும் 12 ஆண்களும் […]

Continue Reading

இன்று எட்டரை மணித்தியால நீர் வெட்டு!

பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (16) காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. சபுகஸ்கந்த மின்சார உப நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகம் இன்று எட்டரை மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டமையால் இந்த நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் […]

Continue Reading

அலங்கார வேலைகளுக்கு கட்டணம் – முச்சக்கரவண்டி அலங்கரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு

வெவ்வேறு உதிரிபாகங்கள் பொருத்தப்பட்ட முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு முச்சக்கரவண்டி அலங்கரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் அலங்கார வேலைகளுக்கு கட்டணம் அறவிடுவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மேற்கொண்டுள்ள தீர்மானம் நியாயமற்றது எனவும் அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டிகளை அலங்கரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு உதிரிபாகங்களுக்கான விலைகளை அறிவிக்கும் வர்த்தமானியை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அண்மையில் வெளியிட்டது. எவ்வாறாயினும், இதன் காரணமாக தொழில்சார்ந்த முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கடும் நெருக்கடியை […]

Continue Reading

பின்தங்கிய பாடசாலைகளின் நிலைமைக்கு அதிகாரிகளின் அசமந்த போக்கே காரணம் – இராஜாங்க அமைச்சர்

பின்தங்கிய பாடசாலைகளின் நிலைமைக்கு அதிகாரிகளினது அசமந்த போக்கே காரணம் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். எனினும் பல பகுதிகளில் பின்தங்கிய பாடசாலைகளின் முன்னேற்றத்துக்கு பாடசாலை அதிபர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுவதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த் குமார் தெரிவித்தார்.

Continue Reading

அரச வருமானத்தை அதிகரிக்க மக்கள் மீது வரிகளை சுமத்தப் போவதில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக மக்கள் மீது தொடர்ந்தும் வரி சுமைகளை சுமத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. எனினும், இவ்வாண்டு மொத்த தேசிய வருமான இலக்கை அடைவதற்கு இன்னும் 100 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற வேண்டியிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான மூலோபாயங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய […]

Continue Reading

பல தடவைகள் மழை பெய்யும் – இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை […]

Continue Reading

பேராதனை வைத்தியசாலையில் யுவதி மரணம் – தடுப்பூசிக்குத் தடை

பேராதனை வைத்தியசாலையில் தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் இளம் பெண்ணொருவரின் மரணத்திற்கு காரணமான தடுப்பூசி தொகுதியின் பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேராதனை வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அந்த தடுப்பூசி தொகுதிகளின் பாவனை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Continue Reading

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் முன்னேற்றம்: சர்வதேச நாணய நிதியம்

G20 பொதுப் பொறிமுறையில் உள்ளடக்கப்படாத போதிலும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் முன்னேற்றமடைந்து தொடர்ந்து இயங்கி வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பில், அதன் தகவல் தொடர்புத் துறையின் இயக்குனர் ஜூலி கோசாக், இந்த செயல்முறையை துரிதப்படுத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தையின் போது கடனாளி நாடுகளுக்கு சில நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றும் கூறினார். வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில், பொதுவான […]

Continue Reading