10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அத்துடன், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி ஆராய்வு

அரசாங்கத்தின் முறையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த முதலீட்டு வாய்ப்புக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கவனம் செலுத்தியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ஜீ.என்.ஆர்.டீ.அல்போன்ஸூ ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பிலேயே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது அதற்கமைய வலுசக்தி,நவீன விவசாயம் மற்றும் காலநிலை அனர்த்த துறைகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் […]

Continue Reading

வாகன இறக்குமதிக்கு அனுமதியா?

எதிர்காலத்தில் வாகனங்களை எவ்வாறு இறக்குமதி செய்வது என்பது குறித்து தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (26) விளக்கமளித்தார். இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். “பல பிரிவுகள் அடிப்படையிலேயே கீழ் அனுமதி வழங்கப்படும், குறிப்பாக வணிக வாகனங்கள், ஆனால் அது அந்நிய செலாவணி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஆனால் , இந்த விடயத்தை கருத்திற்கொண்டு, எத்தனை இருப்புக்கள் உள்ளன […]

Continue Reading

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்துவரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக 26.11.2024 அன்று நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்தோடு காசல்ரீ நீர்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. […]

Continue Reading

70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம்!

70 ஆயிரம் மெற்றிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது திறந்த விலைமனு கோரலின் பின்னர் இலங்கைக்கு, அரிசி இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அத்துடன் அரச வர்த்தக பல்வேறு சட்டபூர்வ கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா சதொச ஆகியவற்றின் ஊடாக இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்யப்படும் எனவும் […]

Continue Reading

ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை

ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து ஆசிரியர்களும் இச்சபையில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதுடன், சம்பள முரண்பாடுகளை நீக்குதல், சம்பளம் தொடர்பான தீர்மானங்களை எடுத்தல் உள்ளிட்ட ஆசிரியர்களின் தேவைகளை நிர்ணயம் செய்யும் பணியும் இந்த சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், சுயாதீன அமைப்பாக செயற்படும் இந்த சபையின் அமைப்பு தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இந்த சபை நியமிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல […]

Continue Reading

நிதி அமைச்சின் கீழ் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2025 நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிடுவது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்கவே இந்த நடவடிக்கை […]

Continue Reading

சீரற்ற வானிலை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் அறிவித்தல்!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மின்சார விநியோகத்தடை ஏற்படுமாயின் அது தொடர்பில் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார விநியோகத்தடை ஏற்படும் நிலையில், அது தொடர்பில் அறிவிப்பதற்கான முறைமையினையும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, CEBCare எனும் செயலி ஊடாக அல்லது இலங்கை மின்சார சபையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் அல்லது 1987 எனும் துரித இலக்கத்திற்குக் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் அறிவிக்க முடியுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாரத்தில் ஏழு நாட்களும் […]

Continue Reading

மின் கட்டண திருத்தம் குறித்து இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொய்யான அறிக்கைகளை வன்மையாக நிராகரிப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2014-2022 காலகட்டத்தில் கடன் பெற வேண்டியிருந்தது. இச்செலவுக்கு மின்சார சபை அனுமதி வழங்கிய போதிலும், ஒழுங்குமுறை அதிகாரிகள் அதற்கேற்ப மின் கட்டணத்தை திருத்தவில்லை. தற்போதுள்ள வழிமுறையின்படி, 2024ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் திட்டமிடப்பட்ட செலவினம், இரண்டாவது மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் வருவாய், 2014 – 2022 காலப்பகுதியில் பெறப்பட்ட கடனை திருப்பிச் செலுத்தியதைக் […]

Continue Reading

48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை!

நிலவும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கை, ஹெத ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகிறது. நீர்ப்பாசன திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக திம்புலாகல, கந்தளாய், கிண்ணியா, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில மற்றும் தமன்கடுவ வெலிகந்தை ஆகிய தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Continue Reading

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், நவம்பர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 2,655 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இவ்வருடம் ஆரம்பித்து காலப்பகுதி வரை 45,004 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 19,294 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதும் இம்மாகாணத்திலேயே ஆகும். மேலும், வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 4,999 […]

Continue Reading

மேலதிக வகுப்புகளை தடை செய்ய தீர்மானிக்கப்படவில்லை – அமைச்சர் நலிந்த

மேலதிக வகுப்புகளை தடை செய்ய தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர், கல்வி விரிவான சீர்திருத்தத்திற்குள் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றார். தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் கல்வியின் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் தொடர்பிலான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதன்படி, முறையான கலந்துரையாடலின் பின்னர், ஒட்டுமொத்த பரீட்சை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த […]

Continue Reading