இரண்டு சட்டமூலங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

பொருளாதார மாற்ற சட்டமூலம் மற்றும் பொது நிதி முகாமைத்துவ சட்டமூலம் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Continue Reading

பேருந்து சில்லில் சிக்கி பாடசாலை மாணவி பலி!

புதிய கருவாத்தோட்டம் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். மல்கொல்ல படிதலாவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று காலை புதிய கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடஹென்தென்ன பிரதேசத்தில் பேருந்தில் இருந்து இறங்கி குறித்த பேருந்துக்கு முன்னால் வீதியைக் கடக்கச் சென்ற போதே இந்த துரதிஷ்டவசமான விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மாணவி, புதிய கருவாத்தோட்டம் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். […]

Continue Reading

பௌத்த கொடியின் வர்ணங்களில் தாமரை கோபுரம் ஒளிரும்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் பௌத்த கொடியிலுள்ள வர்ணங்களில் ஒளிரும் என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை வியாழக்கிழமை (23) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) கோபுரம் ஒளிரும். கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் வெசாக் பண்டிகையை கொண்டாடுமாறு நிர்வாகம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், வெசாக் தினங்களில் பிக்சல் ப்ளூம் புத்தம் புதிய, ஊடாடும் டிஜிட்டல் கலை அனுபவத்தை அனுபவிக்கும் நேரத்தையும் தாமரை கோபுர நிர்வாகம் […]

Continue Reading

அத்தியாவசிய உணவுகளுக்கான கட்டுப்பாட்டு விலைகள்

இந்த வாரத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த வாரத்திற்கான விலைகள் கீழே உள்ளன. கோதுமை மாவு – ரூ.176 – 202வெள்ளை சீனி – ரூ.264 – 287பருப்பு – ரூ. 288 – 311உருளைக்கிழங்கு (பாகிஸ்தான்) – ரூ. 155 – 185பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்) – ரூ.175 – 192பெரிய வெங்காயம் (இந்தியா) – ரூ.246 – 271சிவப்பு வெங்காயம் (இறக்குமதி செய்யப்பட்டது) – ரூ.281 […]

Continue Reading

நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது!

நாடாளுமன்றம் இன்று (22) கூடவுள்ளதாக நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைய இன்று முற்பகல் 9.30 அளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன் மே மாதம் 14ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ‘பொருளாதார நிலைமாற்றம்’ மற்றும் ‘பகிரங்க நிதிசார் முகாமைத்துவம்’ ஆகிய 2 சட்டமூலங்களும் முதலாவது வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. அத்துடன் எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்படும் […]

Continue Reading

கொழும்பு நகர எல்லையில் இரண்டு நாட்களில் முறிந்து வீழ்ந்த சுமார் 20 மரங்கள்

கடந்த இரண்டு நாட்களில் கொழும்பு நகர எல்லையில் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. அதன் பிரகாரம் கொழும்பு நகரில் மரங்கள் ஆபத்தானவை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், முறிந்து வீழ்ந்த மரங்களில் அபாயகரமானதாக இனங்காணப்பட்ட மரங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகர எல்லையில் ஆபத்தில் உள்ள சுமார் 200 மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி இதுவரை சுமார் 100 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

வடக்கு ரயில் சேவை பாதிப்பு

பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அலுவலக ரயில் ஒன்றே இவ்வாறு தடம் புரண்டது. இதனால், வடக்கு ரயில் சேவையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை இரு வாரங்களில் அறிவிப்போம் – பியல் நிஷாந்த டி சில்வா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்க தீர்மானித்தால் அதற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம்.எமது வேட்பாளரை இன்னும் இரு வாரங்களில் அறிவிப்போம் என கடற்றொழில் வளங்கள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார். கடற்றொழில் வளங்கள் அமைச்சின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி அமைப்பதற்கு […]

Continue Reading

இன்றும் கனமழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாடு முழுவதும்தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, வடமேற்கு, தெற்கு மற்றும் வடக்கு […]

Continue Reading

அடுத்த தேர்தல் வரை ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் – நாமல்

இந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பான கொள்கைப் பிரச்சினைகள் தொடர்பில் விவாதம் நடத்தினால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறந்த அரட்டையாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான விவாதம் நடத்தப்படுகிறது எனவும் அதற்கான இரண்டு சிறந்த வேட்பாளர்களும் சஜித் மற்றும் அனுர எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். பூஜாபிட்டிய திவானவத்த ஸ்ரீ போத்திருக்கராம விகாரையில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் […]

Continue Reading

வரிக்குறைப்பு செய்தால் பொருளாதாரம் பலவீனமடையும் – பதில் நிதியமைச்சர் செஹான்

கோட்டபய ராஜபக்ஷ வரி குறைப்பு செய்ததால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகட்சியினர் தமது அரசாங்கத்தில் வரி குறைப்பு செய்வதாக குறிப்பிடுவது வேட்டிக்கையாகவுள்ளது. அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரத்தை தீர்மானிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வரிச் சலுகை (வரி குறைப்பு) வழங்கியதை கடுமையாக விமர்சித்த […]

Continue Reading

இந்தியாவில் பிடிபட்ட ISIS பயங்கரவாதிகள் குறித்து பல தகவல்கள்!

இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு கூட தயாராக இருந்ததாக குஜராத் பொலிஸ்மா அதிபர் விகாஷ் சாஹே தெரிவித்துள்ளார். இந்த நான்கு பயங்கரவாதிகளும் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு பகுதிகளில் வசிப்பவர்கள் என குஜராத் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கில் இந் நாட்டிலிருந்து அகமதாபாத் நகருக்கு வந்த இலங்கையை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் […]

Continue Reading