அம்பாறையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையால் மாவட்டத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் பெய்துவரும் அடைமழை காரணமாக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர் என்பதுடன் வீதிகள், வயல் வெளிகள் உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகள், வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஆலையடிவேம்பு பிரதேச செயலக அலுவகத்தின் ஒரு பகுதிக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளமையால், அலுவலக நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளதுடன், பரீட்சைக்காக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளதுடன், […]

Continue Reading

சாவகச்சேரியில் விபத்து – இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் நேற்று இரவு சொகுசு பஸ்ஸ_ம் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். நுணாவிலை சேர்ந்த யோ. சபேஸ்குமார் (வயது 35) மற்றும் க.மோகன் (வயது 34) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸ_ம், சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், விபத்து தொடர்பிலான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து […]

Continue Reading

புதிய சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் நியமனம்

வைத்தியர் அனில் ஜெயசிங்க புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் புதன்கிழமை தான் பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக, அனில் ஜெயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

கட்சியைப் பலப்படுத்த ஐ.தே.க நடவடிக்கை

மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகள் உள்ளடங்கிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இலக்குவைத்து, கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று (26) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. “அரச ஆட்சியில் காணும் மாற்றம்”, “பலம்மிக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்”, “புதிய தேர்தல் முறைமை” ஆகிய பிரதான மூன்று கருப்பொருள்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. முதலாவது கூட்டம், நாவலப்பிட்டி கிரான்ட் மண்டபத்தில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றதைத் தொடர்ந்து, மற்றுமொரு கூட்டம், கொலன்னாவை மங்களபாய மண்டபத்தில் நேற்று மாலை நடத்துவதற்கு […]

Continue Reading

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவராக மீண்டும் பழனி திகாம்பரம்

தொழிலாளர் தேசிய சங்கத்தின் 15ஆவது பேராளர் மாநாடு நேற்று ஹட்டன் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற போது, சங்கத்தின் தலைவராக அமைச்சர் பழனி திகாம்பரம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக எஸ். பிலிப், பிரதி பொதுச் செயலாளராக எம். திலகராஜா, நிதி செயலாளராக ஜே.எம்.செபஸ்டியன், உதவி நிதி செயலாளராக சோ.ஸ்ரீதரன், பிரதித் தலைவராக உதயகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சிரேஷ்ட ஆலோசராக சிங்.பொன்னையா, மகளிர் அணித் தலைவி சரஸ்வதி சிவகுரு, தேசிய அமைப்பாளராக நகுலேஸ்வரன், இளைஞர் அணித் […]

Continue Reading

வடக்குக் கிழக்கில் மழை

வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் இப்பகுதிகளில் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசுவதற்கு வாய்ப்பு காணப்படுவதாகவும், மழை காலநிலைக் காரணமாக கரையோரப் பகுதிகளில், கடல் கொந்தளிப்பும் ஏற்படலாம் எனவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு, காங்கேசன்துறை, கொழும்பு மற்றும் காலி ஆகிய கரையோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு கடுமையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

தென்மாகாணத்தில் முதலைகள் சரணாலயம்

தென் மாகாணத்தில் முதலைகளுக்கான சரணாலயம் ஒன்றை அமைக்க வன விலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. காலி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஹிக்கடுவ தேசிய சரணாலயத்தின் பொறுப்பதிகாரி ஏ.வீ.கசுன் தரங்க இதனைத் தெரிவித்ததுடன், காலி, பலப்பிட்டி பகுதியில் இந்த முதலைகளுக்கான சரணாலயத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அம்மாவட்டத்தில் முதலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தினால், மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும், வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இந்த முதலைகள் பொதுமக்கள் வசிக்கும் பிரதேசங்களுக்கு ஊடுருவி வருவதன் காரணமாக மக்கள் […]

Continue Reading

வித்தியாவின் பிறந்த தினத்தில் விழிப்புணர்வு நிகழ்வு (Photos)

புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் 21ஆவது பிறந்த தினமான இன்று மாணவியின் மரணத்திற்கான நினைவஞ்சலியும், விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. மாணவி வித்தியா கல்வி கற்ற பாடசாலையான புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வினை முன்னாள் நடிகையான சுகினிதா வீரசிங்க மற்றும் அவரது கணவர் களனி பல்கலைகழக விரிவுரையாளர் நந்தலால் மலான்கொட ஆகியோரால் யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியுடன் இணைந்து ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது. நாட்டில் இனி எங்கும் வித்தியாவுக்கு இடம்பெற்றது போன்றதான […]

Continue Reading

தேர்தல் ஆணைக்குழுவின் திடீர் அறிவிப்பு

93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் சட்டரீதியான சிக்கல்கள் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்காக வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் 27ம் திகதியில் இருந்து 14 நாட்களின் பின்னர் வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் முடிவில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றிரவு மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றதைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியுடனான அரசியல் பயணத்தை சுதந்திரக் கட்சி கைவிடுமானால், சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கு […]

Continue Reading

செல்ஃபி மோகத்தால் 24 பேர் உயிரிழப்பு

ரயில் பாதையில் செல்ஃபி எடுப்பதற்கு முயன்ற காரணத்தினால் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 24 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. இந்த நிலைமையை எதிர்காலத்தில் குறைத்துக் கொள்ளும் பொருட்டு பரந்தளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமென அந்த சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளதுடன், இந்த வருடத்துக்குள் மாத்திரம் செல்ஃபி எடுக்க முயன்ற 24 இளைஞர் யுவதிகள் உயிரிழந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்காதிருக்க உரிய நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் […]

Continue Reading

பதவிகளைத் துறக்கத் தயார் – ஜனாதிபதி சவால்

ஊழல், மோசடிக்கு எதிராக தீர்மானங்களை எடுக்கும் போது, அதற்கு எதிராகவும் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின், சகல பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு, மக்களுடன் கைகோர்த்து முன்னோக்கி பயணிப்பதற்கு தாம் தயாரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிக்கவரெட்டிய பிரதேசத்தில், நேற்று (24) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம், தவறு செய்தமையால் தான், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் 2015ஆம் ஆண்டு தோல்வியடைந்த நிலையில், ஐக்கிய தேசியக் […]

Continue Reading