யாழில் தொடரும் வாள்வெட்டுக் கலாசாரம்

சாவகச்சேரி, அல்லாரைப் பகுதியில், வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் இளைஞர் ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவருக்கே காலில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிசார் தெரிவித்துள்ள அதேவேளை, தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென காயமடைந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

புதையல் தோண்டியவர்கள் கைது

நாகரீக வளர்ச்சியடைந்துவரும் தற்போதைய காலகட்டத்திலும், சில மூடநம்பிக்கைகளை எமது மக்கள் செயற்படுத்தி வருகின்றநிலை காணப்படுகின்றது. அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் கொஸ்கொல்ல பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொஸ்கொல்ல காட்டுப்பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட நிலையிலேயே நேற்று இரவு குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவின் கிழக்கு மாகாணப் பொறுப்பதிகாரி நளின் வீரரத்ன தெரிவித்தார். குறித்த கைது நடவடிக்கையின் போது, சந்தேக நபர்களிடமிருந்து பூஜைப் […]

Continue Reading

ஜேர்மன் பாராளுமன்றத் தலைவர் – இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இலங்கை வந்துள்ள ஜேர்மன் பாராளுமன்றத்தின் தலைவருக்கும், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பு இன்று காலை பாராளுமன்ற கட்டிட தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் தெளிவுபடுத்தியதுடன், சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

Continue Reading

மின்விளக்கால் பரபரப்பான இலங்கை நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள அலங்கார மின் விளக்கு திடீரென விழும் நிலைக்குச் சென்றதால் சற்று நேரம் பதற்றம் நிலவியது. குறித்த சம்பவம் நேற்று இரவு நாடாளுமன்றில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உலோகங்களால் நிர்மாணிக்கப்பட்டு வெள்ளி முலாம் பூசப்பட்ட மின்விளக்கு நாடாளுமன்றில் பொருத்தப்பட்டுள்ளது. குறித்த விளக்கைச் சுத்தம் செய்வதற்காக மின்மோட்டர் ஊடாக கீழே இறக்கப்பட்டு, பின்னர் மேலே ஏற்றப்படும். மின்விளக்கினை உரிய இடத்தில் பொருத்தும் சந்தர்ப்பத்தில் திடீரென இரண்டு அடிமட்டம் வரை விளக்கு பூமியை நோக்கிக் கீழுறங்கியுள்ளது. […]

Continue Reading

ஐரோப்பிய ஒன்றியம் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடமாகாண சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட் ப்ரே வலியுறுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட் ப்ரே மற்றும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில், இன்று (03) சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. வடமாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடமாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. வடமாகாண […]

Continue Reading

தீர்வைவரி வாகனங்களுக்கான நிதித்தொகை அதிகரிப்பு

எதிர்வரும் ஆண்டு முதல் ஓய்வுபெறவுள்ள அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு, தீர்வைவரி முறையில் வழங்கப்படும் வாகனங்களுக்கான நிதித் தொகை அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது. முதலாம் தரத்திலுள்ள சிரேஷ்ட அதிகரிகளுக்கு தீர்வைவரி முறையில் வாகனங்களை பெற்றுக் கொடுப்பதற்காக 30,000 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிதித் தொகை 45,000 அமெரிக்க டொலர் வரையும், இரண்டாம் தரத்திலுள்ள அதிகரிகளுக்கு 27,000 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிதித் தொகை, 40,000 அமெரிக்க டொலர் வரையும், மூன்றாம் தரத்திலுள்ள அதிகரிகளுக்கு 27,000 அமெரிக்க டொலராக […]

Continue Reading

பல்கலைக்கழகத்தை முடக்குவோம் – யாழ். பல்கலை மாணவர்கள் எச்சரிக்கை!

வகுப்புத் தடைவிதிக்கப்பட்ட 13 மாணவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மீள இணைக்காவிடின் அனைத்துப் பீடங்களையும் முடக்குவோமென யாழ். பல்லைக்கழக கலைப்பீட மாணவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று காலை பல்கலைக்கழகத்தில் கறுப்புதுணியால் வாய்மூடி அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். கலைப்பீட மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்ததுடன், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக தமது கண்டனத்தினையும் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற அசம்பாதவிதத்தின் பின்னர் கலைப்பீட மாணவர்கள் 13 பேருக்கு வகுப்புத் […]

Continue Reading

பலாலியில் மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாட முடிவு

மீள்குடியேற்றம் செய்யப்படாத பலாலி ஆரோக்கிய மாதா ஆலயத்தின் பூசை வழிபாட்டிற்காக அப்பகுதி மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக பங்கு நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடமபெயர்ந்து பல்வேறு பகுதிகளில் வாழும், பலாலி ஆரோக்கிய மாதா ஆலய பங்கு மக்கள் வருடாந்தம் ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஆலயத்தின் பூசை வழிபாட்டிற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (26) அப்பகுதி மக்கள் செல்லவுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் […]

Continue Reading

ஆவா பிரதான நபரின் கார் மீட்பு!

ஆவா குழுவின் பிரதான நபர் ஒருவரின்; கார் ஒன்றினை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர். யாழ். கொக்குவில் பகுதியில் உள்ள பூசகரின் வீட்டில் இருந்தே குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 70 லட்சம் மதிக்கத்தக்க காரை குறித்த பூசகரின் வீட்டில் நிறுத்தி விட்டு, அந்த நபர் தலைமறைவாகியுள்ளார். குறித்த காரினை யாழ்ப்பாணம் பொலிஸார் மீட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள அந்த நபரை வலைவீசித் தேடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading