அம்பாறை மாவட்டத்தில் 916 பேர் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்ததால் நாற்பத்தி 6 ஆயிரத்து 766 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்படைந்துள்ளனர் அத்துடன் குளாரான காலநிலை நிலவுவதால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . அத்துடன் கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததினால் நாற்பத்தி 6 ஆயிரத்து 766 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்டைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க […]

Continue Reading

நாரஹேன்பிட்டி பகுதியில் கொலை சம்பவம் – 6 பேருக்கு மரண தண்டனை!

நாரஹேன்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய வழக்கின் பிரதிவாதிகள் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு, நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் மரண வீடொன்றில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததையடுத்து, ஒருவரைக் கொலை செய்து மற்றுமொருவரைக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே […]

Continue Reading

நீதிமன்றில் ஆஜரான அமைச்சர் விஜித!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அபிவிருத்தி லொத்தர் சபை ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைமனு கோரல் முறைக்கு மாறாக பல தனியார் நிறுவனங்களுக்கு லொத்தர் ஊக்குவிப்பு பணிகளை ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி அதன் முன்னாள் தலைவர் சந்திரவன்ச பதிராஜவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தது.. இந்த வழக்கு […]

Continue Reading

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதி மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பச்சை மிளகாய் கிலோ 800 ரூபா, தக்காளி கிலோ 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன. கறி மிளகாய் கிலோ 650 ரூபாவாகவும், போஞ்சி கிலோ 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக ஹட்டன் பகுதி மரக்கறி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். மரக்கறி செய்கை நீரில் மூழ்கியுள்ளமையே விலை அதிகரிபிற்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி!

ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது ஒழுங்கை நிலைநாட்ட ஜனாதிபதி இதனை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த வர்த்தமானி நவம்பர் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

கலாஓயா வௌ்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

கலாஓயா ஆற்றுப்படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் இன்று (29) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் இந்த நிலைமையை மிகுந்த அவதானத்துடன் கையாளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்துடன், அப்பகுதிகளை கடந்து செல்லும் வீதிகளிலும் கிளை வீதிகளிலும் பயணிக்கும் வாகன சாரதிகள் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் நீர்ப்பாசன திணைக்களம் தனது வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உரிய […]

Continue Reading

வடக்கின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆளுநருடன் சிறீதரன் சந்திப்பு!

வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அதன்படி இன்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது இந்தச் சந்திப்பின் போது, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்கல், காலநிலைத் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது

Continue Reading

அரிசி இறக்குமதிக்கான விலைமனு கோரல்

அரிசி இறக்குமதிக்கான விலைமனு இன்று(29) முதல் கோரப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் இன்று (29) முதல் 7 நாட்களுக்குள் இறக்குமதியாளர்கள் விண்ணப்பிக்க முடியும் என லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா குறிப்பிட்டுள்ளார். பல்வேறு கட்டங்களின் கீழ் 70 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு முன்னர் அரிசியை சந்தைகளுக்கு விநியோகிக்கும் எதிர்பார்ப்புடன், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இறக்குமதி செய்யப்படும் […]

Continue Reading

மாகாண சபைத் தேர்தல் வேட்புமனு தாக்கல்: அடுத்த வாரம் கலந்துரையாடல்

மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல், அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெறும் இந்த கலந்துரையாடலில், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக, அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். இக்கலந்துரையாடலின் போது எடுக்கப்படும் தீர்மானங்களே எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு […]

Continue Reading

நிவாரண பணிகளை மேற்பார்வையிட குழுக்கள் நியமனம்

வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அமைச்சரவை அமைச்சர்கள் தலைமையில் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, அந்தந்த மாகாணங்களில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை, நேற்று (28) இக்குழுவினர் கண்காணித்தனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, கிழக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு தலைமை தாங்கும் கிராம […]

Continue Reading

ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவதற்காக வேலையற்ற பட்டதாரிகள் குழு

ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவதற்காக வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று இன்று (29) ஜனாதிபதி செயலகத்திற்கு வந்துள்ளது. அங்கு ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் குழுவினருக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தாம் ஆட்சிக்கு வந்தவுடன் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாக தற்போதைய ஜனாதிபதி பதவியேற்கும் முன்னர் உறுதியளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்தக் குழு ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கான திகதி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

கரையோர ரயில் சேவையில் பாதிப்பு

அநுராதபுரத்தில் இருந்து பெலியத்த நோக்கி பயணிக்கும் ரஜரட்ட ரஜின கடுகதி ரயில் கொழும்பு கோட்டைக்கும் தலைமைச் செயலகத்திற்கும் இடையில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக கரையோர வீதியின் ஒரு வீதி தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், கடலோரப் பாதையில் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

Continue Reading