நடுத்தர வயதுடையவர்களிடையே உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய இறப்புகளில் ஆபத்தான அதிகரிப்பு

இலங்கையில் உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்) தொடர்பான இறப்புகள் சமீப வருடங்களில் அதிகரித்துள்ளன, குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் திடீர் எதிர்பாராத மரணங்களைத் தடுக்க வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, உயர் இரத்த அழுத்தம்-சில நேரங்களில் “அமைதியான கொலையாளி” என அழைக்கப்படுகிறது – வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லை, ஆனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற கடுமையான உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதேவேளை, இலங்கையில் வயது முதிர்ந்த […]

Continue Reading

நாட்டின் வர்த்தகச் செயற்பாடுகளை இலகுபடுத்தல் குறித்து விசேட பணிப்புரை

இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்தல் மற்றும் துரிதபடுத்தலுக்கான முன்மொழிவொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான குழுவின் (NTFC) செயற்திறன் மீளாய்வு கூட்டத்தின் போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்படி அறிவுரைகளை வழங்கினார். இலங்கைக்குள் வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான உகந்த சூழலை கட்டமைப்பதற்கான துரிதமானதும் மிக முக்கியமானதுமான தீர்மானங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் […]

Continue Reading

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ‘இன்சுலின்’ தட்டுப்பாடு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு தேவையான ‘இன்சுலின்’ இன்மையால் வரும் நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தேசிய மருத்துவமனைகளின் நீரிழிவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பலர் ‘இன்சுலின்’ தட்டுப்பாட்டினால் ஆதரவற்ற நிலையில் உள்ளதால், மருத்துவர்கள் இன்சுலின் இனை வெளியில் வாங்குமாறு தெரிவிக்கும் போது நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளிடம் ‘இன்சுலின்’ வாங்க பணம் இல்லை என்று கூறும் மருத்துவர்கள், சில நோயாளிகளுக்கு மாதத்திற்கு இரண்டு குப்பிகளில் ‘இன்சுலின்’ தேவைப்படுவதாக தெரிவித்தனர். […]

Continue Reading

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் தொடா்பான முக்கிய பரிந்துரை

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்க பரிந்துரைக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா டெலிகொம் தனியார்மயப்படுத்தப்படுவதன் ஊடாக தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் வெளிவரும் சாத்தியம் காணப்படுவதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

கொழும்பு மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டின் வருமான நிலுவை குறித்து கோபா குழுவின் அறிக்கை

கொழும்பு மாநகர சபையின் 2020/2021 ஆண்டுகளுக்கான கணக்காளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (06) கூடிய போதே இந்த விடயம் புலப்பட்டது. இதன்போது, 2021 ஆம் ஆண்டின் மொத்த நிலுவை வருமானம் 5,835.6 மில்லியன் ரூபாய் எனவும், 2020 இல் 5,386.4 மில்லியன் ரூபாய் எனவும் 2019 இல் 4,481.5 […]

Continue Reading

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

கடந்த 05 வருடங்களில் நாட்டிலுள்ள தலா 5 பேரில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வாகனத்தை இறக்குமதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இவற்றில் 75% வாகனங்கள் வங்கிக் கடனில் பெறப்பட்டவை என அவர் இன்று (09) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். வாகன இறக்குமதிக்கான வரியை டொலரில் செலுத்துவது தொடர்பான யோசனையை எதிர்காலத்தில் முன்வைக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2,498,714 ஆகும். 2015 […]

Continue Reading

ஹர்ஷ எம்.பி தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் முதலாவது கூட்டம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.டி சில்வா தலைமையில் அண்மையில் (07) பாராளுமன்றத்தில் முதல் தடவையாகக் கூடியது. பந்தய, சூதாட்ட விதிப்பனவு திருத்தச்சட்டமூலம் இதில் விவாதிக்கப்பட்டதுடன், சூதாட்ட நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஆணைக்குழுவை நிறுவவதற்கான கால அட்டவணையை உருவாக்கும்வரை குறித்த சட்டமூலத்தை மதிப்பீடு செய்வது ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. கசினோ வர்த்தகம் தொடர்பான ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பில் முன்னர் கலந்துரையாடப்பட்டதாகவும், நிதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட காலக்கெடுவின் பிரகாரம் 2023 ஜனவரி […]

Continue Reading

பொன்சேகாவுக்கு பதில் ரவூப் ஹக்கீம்

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தேசிய பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு இன்று (09) அறிவித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, அந்த வெற்றிடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் அறிவித்தார்.

Continue Reading

சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான அறிவித்தல்

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்தவுடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கணக்கெடுப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை நிறைவடைந்த பின்னர் நேற்று (08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

வடக்கு ஆசிரியர் நியமனம் சிக்கல்!

2019/2020 ஆம் ஆண்டில் கல்வியியல் கல்லூரிகளில் 8 ஆயிரம் பேர் உள்ளீர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு வர்த்தமானி அறிவித்தில் பிரகாரம் நியமிப்பதாகவும் வடக்கில் தெரிவு செய்யப்பட்டோரும் அதன்படியே நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த, “இது சிக்கலானதுதான். ஆனாலும் எதுவும் செய்ய முடியாது. எனினும் ஏதாவது மாற்று வழிகளை கண்டறிய முயற்சிக்கின்றேன்” என்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. ஸ்ரீதரன் […]

Continue Reading

அந்தோனியார் தேவாலயத்துக்குள் நுழைய முயன்றவர் கைது

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்தியாஸ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று கடற்கரை பொலிஸார் தெரிவித்தார். மாத்தளை அகலவத்தையை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட மேற்படி சந்தேகநபர், மட்டக்குளிய பிரதேசத்தில் தற்காலிகமாக வசிக்கும் 46 வயதானவர் ஆவார. தேவாலயத்துக்குள் துதிப்பாடல்களை கேட்க வேண்டும் என்பதற்காக வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189வது வருடாந்த பெருவிழா இம்மாதம் […]

Continue Reading

இன்று முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைகிறது

இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை, குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் பாசிப்பயறு, 325 ரூபாவினால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 225 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு கிலோ கிராம் செத்தல் மிளகாய், 60 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,290 ரூபாவுக்கும், பருப்பு கிலோ ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 299 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. சிவப்பு நாட்டரிசி கிலோ ஒன்றின் விலை 200 ரூபாவாகவும், நெத்தலி கிலோ ஒன்றின் விலை […]

Continue Reading