ஆழ்ந்த தாழமுக்கம் நாளை முதல் குறைவடையும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக, நிலவும் சீரற்ற காலநிலை நாளை முதல் படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் நாட்டின் கிழக்கு கடற்கரையை அண்மித்து வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதன்படி, மறு அறிவித்தல் நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் மீனவ […]

Continue Reading

சொலிசிட்டர் ஜெனரலாக விராஜ் தயாரத்ன நியமனம்

சொலிசிட்டர் ஜெனரலாக ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்புமேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். ஜனவரி 2020 முதல் ஜனவரி 2023 வரை, அவர் இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. 

Continue Reading

அவசரமாகக் கூடியது வவுனியா ஒருங்கிணைப்புக் குழு

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், இன்று வியாழக்கிழமை (28) காலை, வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் சரத்சந்திர உட்பட பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், பாதுகாப்புப் துறை அதிகாரிககள் எனப் பலரும் கலந்துகொண்டனர். சீரற்ற காலநிலையால் வவுனியா மாவட்டத்தில் […]

Continue Reading

07 ஈரானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை!

2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவிட இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி, கொழும்பு மட்டக்குளிக்கு அருகிலுள்ள கடற்கரையில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டுசெல்லும் போது பொலிஸ் […]

Continue Reading

மட்டக்களப்பில் வெள்ளத்தால் 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமையும் (28) மழை சற்ற ஓய்ந்துள்ள நிலையில் மாவட்டத்தின் பிரதான தரை வழிப்போக்குவரத்துக்கள் தற்போது வரையிலும் முற்றாகத் தடைப்பட்டுள்ளன. இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்வில் தழம்பல் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. மண்டூர் – குருமண்வெளி படகுப்பாதை, அம்பிளாந்துறை குருக்கள்மடம் படகுப்பாதைப் போக்குவரத்துக்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. பட்டிருப்பு பெரியபோரதீவு பிரதான வீதி, மண்முனை கொக்கட்டிச்சோலை பிரதான வீதி, வவுணதீவு மட்டக்களப்பு நகர் பிரதான வீதி, உள்ளிட்ட பிரதான வீதிகளை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்துவருவதானல் அவ்வீதிகளுடனான […]

Continue Reading

மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவை!

சீரற்ற காலநிலை காரணமாகக் கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவை இன்று (28) பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்படும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இரவு நேர நீண்ட தூரத் தொடருந்து சேவைகளைத் திட்டமிட்டபடி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Continue Reading

அர்ச்சுனாவின் பிடியாணை இரத்து!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக இன்று (28) நீதிமன்றில் முன்னிலையான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி இன்னுமொரு மகிழுந்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், வாகன சாரதியைத் தாக்கிக் கடுமையாகக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 26ஆம் திகதி […]

Continue Reading

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு வண்டி – 7 பேரின் சடலங்கள் மீட்பு!

காரைதீவு – மாவடிபள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உழவு வண்டியொன்று அடித்துச் செல்லப்பட்டதையடுத்து காணாமல் போனவர்களில் இதுவரையில் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிந்தவூர் பகுதியிலிருந்து சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உழவு வண்டியொன்று நேற்று முன்தினம் இரவு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சம்பவத்தின்போது, அதில் 14 பேர் பயணித்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காரைதீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், காணாமல் போயிருந்தவர்களில் ஐவர் நேற்று முன்தினம் மீட்கப்பட்டதுடன், நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 4 சிறுவர்களின் […]

Continue Reading

37 குளங்களின் வான்கதவுகள் திறப்பு!

நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அத்துடன் குளங்கள் மற்றும் நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஆறுகளை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி தெதுறு ஓயா, நில்வளா கங்கை, களனி கங்கை, மகாவலி கங்கை, யான் ஓயா, மல்வத்து ஓயா, மகா ஓயா, அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் […]

Continue Reading

வெள்ளத்தினால் 4, 800 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதம்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 4, 800 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக 2, 000 மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் சுமார் 3, 900 ஏக்கருக்கும் அதிக விவசாய நிலப்பரப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் நிலவுகிறது. குறித்த விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டால், சுமார் 3, […]

Continue Reading

சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் மூடப்பட்ட பல வீதிகள்!

நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்து வெள்ளப்பெருக்கு காரணமாக ஊரணி பகுதியில் தடைப்பட்டுள்ளது. அத்துடன், மட்டக்களப்பு – வவுணதீவு வீதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வடமுனை – ஊத்துச்சேனை வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதுடன் அங்குப் படகு மூலமான போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, பண்டாரவளையிலிருந்து பசறை செல்லும் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பசறை […]

Continue Reading

இலங்கையின் கரையோர பிரதேசத்தின் வழியாக தமிழகம் நோக்கி நகரும் தாழமுக்கம்

நாட்டில் தொடர்ந்தம் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது . இந்நிலையில், தாழமுக்கம் வடக்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இலங்கையின் கரையோர பிரதேசத்தின் வழியாக தமிழ்நாடு நோக்கி மிக மிக மெதுவாக நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று மாலை ஒரு சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தற்போது மட்டக்களப்பில் இருந்து வடக்கு வடகிழக்காக 160km தூரத்திலும், திருகோணமலையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 110km தூரத்திலும், முல்லைதீவிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 135km தூரத்திலும், யாழ்ப்பாணத்திலிருந்து (பருத்தித்துறை) தென்கிழக்காக 210km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.

Continue Reading