எமது நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க முடியாது! – ஜனாதிபதி ரணில்

கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் 45வது வருடாந்த நவம் மகா பெரஹெரா நேற்று (05) இரவு உலா வந்தது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் வீதி உலா வருவதற்காக மங்கள ஹஸ்தி ராஜா மீது அலங்கார கலசத்தை வைத்தனர். இந்த வருட நவம் மஹா பெரஹெரா மலையகம் மற்றும் தாழ்நில சப்ரகமுவம் மற்றும் யானைகளின் பல நடனங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பெரஹெரா திருவிழாவை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “இன்று நாம் […]

Continue Reading

ஒவ்வொரு மாவட்டத்திற்குமான புதிய எரிவாயு விலை

இன்று முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையை அதிகரிக்கப்பதற்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்திருந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்குமான புதிய விலையினை அறிவித்துள்ளது.

Continue Reading

சிற்றுண்டி விலைகளில் மாற்றம்?

சமையல் எரிவாயு விலை அதிகரித்த போதிலும், தமது உற்பத்திகளினது விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்களிடையே நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், லாஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, லிட்ரோ எரிவாயு […]

Continue Reading

உயர் நீதிமன்ற நீதியரசராக கே.பி பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

நீதியரசர் கே.பி பெர்னாண்டோ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

Continue Reading

அடையாள அட்டைக்கான புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலைகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, தேசிய அடையாள அட்டையின் பாடசாலை விண்ணப்பங்களுக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் விதிக்கும் காலம் ஆகியவை நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி, புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் வசூலிக்கும் காலம் 2022.03.31 ஆம் திகதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த கால அவகாசம் பாடசாலைகளின் மற்றும் பிரிவேனாக்களின் அதிபர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களால் சான்றளிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

Continue Reading

13ஜ முழுமையாக அமுல்படுத்த அவசர அவசரமாக தீர்மானத்தை எடுக்கக் கூடாது! சாகர காரியவசம்

சர்ச்சைக்குரிய 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான தீர்மானத்தை அவசர அவசரமாக எடுக்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அதிகாரப் பகிர்வை நிச்சயமாக எதிர்க்கவில்லை என்றாலும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சி நிரலுக்கு எக்காரணம் கொண்டும் ஆதரவளிக்க முடியாது என கூறியுள்ளது. 13 ஆவது திருத்தம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 7 ஜனாதிபதிளும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதை ஏன் தவிர்த்தார்கள் […]

Continue Reading

13 ஆவது திருத்தம்: அரசியல் கட்சிகள் நிலைப்பாடு என்ன?

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடமிருந்து எந்தவொரு ஆலோசனைகளும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக 08 ஆம் திகதி நாடாளுமன்றில் விளக்கமளிக்க உத்தேசித்துள்ள ஜனாதிபதி, அதற்கான ஆலோசனைகளை 04 ஆம் திகதிக்குள் வழங்குமாறு கட்சித் தலைவர்களிடம் கோரியிருந்தார். இருப்பினும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

Continue Reading

பா.உறுப்பினர்களின் சம்பளத்தை 2 மாதங்களுக்கு இடைநிறுத்த யோசனை

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு இல்லை என்றால் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் சம்பளத்தை இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தி அந்த பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும் என இராதா கிருஷ்ணன் கூறுகிறார். உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை தாமதப்படுத்தி தேர்தலை நடத்தாமல் இருக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிடுகிறார். நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இராதா கிருஷ்ணன் இதனை தெரிவித்தார். “தேர்தல் […]

Continue Reading

இலங்கை வந்தடைந்தார் பான் கீ மூன்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையை வந்தடைந்துள்ளார். இவரது விஜயத்தின்போது நிலையான அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நாளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார். தென் கொரியாவின் குளோபல் கிரீன் க்ரோத் இன்ஸ்டிட்யூட்டின் தலைவராக உள்ள பான் கீ மூன், அந்த அமைப்பின் […]

Continue Reading

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆசிரியர்களுக்கு நாளாந்தம் ரூ.3,000 கொடுப்பனவு

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாளாந்தம் மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி கோரி கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சரவையில் இன்று (06) பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளார். இதற்கான மதிப்பிடப்பட்ட தொகை சுமார் எண்ணூறு கோடி ரூபாய். பயணக் கட்டணம் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டு மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஆசிரியர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளதால், அதற்கேற்ப நாளாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேவைகளில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே […]

Continue Reading

ஒரு லீட்டர் பாலின் விலை ரூ.20 இனால் உயர்வு

பால் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு லீட்டர் பாலின் விலையை இருபது ரூபாய் உயர்த்த மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் தற்போதைய பால் லீட்டர் ஒன்றின் விலை 140 ரூபாவாகும், இது 160 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அதன் தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார். தனியார் துறையினர் ஒரு லீட்டர் திரவப் பாலை 160 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர், அதே நேரத்தில் சந்தையில் 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Continue Reading

சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருங்கள் – அமைச்சருக்கு ஜனக்க அறிவுரை

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள், பொதுப்பயன்பாடுகள் சட்டம் மற்றும் மின்சார சபை சட்டத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களான பிரதித் தலைவர் உதேனி விக்கிரமசிங்க மற்றும் மொஹான் சமரநாயக்க ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை ஆணைக்குழுவிலிருந்து விலகினர். பின்னர் நேற்று, டக்ளஸ் என்.நாணயக்கார ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் ஆணைக்குழு தலைவரின் தன்னிச்சையான நடவடிக்கை மற்றும் அவரது தொழில் ரீதியற்ற தன்மை காரணமாகவே […]

Continue Reading