உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில் நேற்று (27) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அந்தத் திகதியை நிர்ணயிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான குறிப்பிட்ட திகதி தீர்மானிக்கப்படவில்லை எனவும், எதிர்வரும் நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடி […]

Continue Reading

சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல்

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் புதுப்பிக்கப்பட்ட சமீபத்திய அறிவிப்பு நேற்று(27) இரவு 7:00 மணி முதல் இன்று(28) இரவு 7:00 மணி வரை செல்லுபடியாகும். எச்சரிக்கை நிலை 3 – வெளியேறவும் (சிவப்பு) கண்டி மாவட்டம்:– உடுதும்பர– உடபலாத– தெல்தோட்ட– கங்கவட்ட கோரலை– பதஹேவாஹெட்ட– ஹாரிஸ்பத்து– […]

Continue Reading

அஸ்வெசும குறித்து விசேட அறிவிப்பு

தற்போதைய வெள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அஸ்வெசும உதவித்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

இரு தினங்களுக்கு மூடப்படும் முஸ்லிம் பாடசாலைகள்!

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இன்றும், நாளையும் மூடப்படவுள்ளதாக மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏலவே, நேற்று முன்தினமும் நேற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கும் (29) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Continue Reading

உர மானியத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வு!

விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்கப்படுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Continue Reading

இலங்கையின் டீசல் இறக்குமதி ஒப்பந்தத்தை சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வழங்க அனுமதி!

சிங்கப்பூரின் பிபி எனர்ஜி நிறுவனத்திற்கு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்கு இலங்கைக்கான டீசல் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட விலை மனுக்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரையிலான 6 மாத காலத்திற்கு 4 கப்பல் டீசல் தொகையை இறக்குமதி […]

Continue Reading

மஹிந்த கஹந்தகமவை கைது செய்யுமாறு பிடியாணை

டேன் பிரியசாத், மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி (27) பிடியாணை பிறப்பித்துள்ளார். காலிமுகத்திடல் போராட்டத்தின் மீது (கோட்டா கோ கிராமம்) தாக்குதல் நடத்தப்பட்ட வழக்குக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது சம்பவத்தின் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட பிணையில் உள்ள சந்தேகநபர்கள் அனைவரும் நீதிமன்றில் முன்னிலையாகினர். எனினும் இந்த சம்பவத்தில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள டேன் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம […]

Continue Reading

நீதியரசர்களை நியமிக்காமை தொடர்பான மனு – ரணிலை பிரதிவாதியாக பெயரிட அனுமதி

கடந்த ஆட்சி காலத்தின் போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் வெற்றிடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்காததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி சேனக வல்கம்பாயவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (27) […]

Continue Reading

திருகோணமலைக்கு மிக அருகில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழ்ந்த தாழமுக்கம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி அதிகாலை 02.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அது இன்று (28) மேலும் தீவிரமடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் வடக்கு-வடமேற்கு திசை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த அமைப்பின் தாக்கத்தினால் நாட்டின் பல […]

Continue Reading

நிவாரணம் வழங்க 11 கடற்படை குழுக்கள்

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 11 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடற்படையின் நிவாரணக் குழுக்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே, வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக விமானப் படையின் 50 பேர் 06 இடங்களில் 6 ஹெலிகொப்டர்களுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது

Continue Reading

வெள்ளத்தில் அடித்துச் சென்ற உழவு இயந்திரம் – இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்பு

காரைதீவு – மாவடிபள்ளி பகுதியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் அடித்துச் சென்றதில், காணாமல் போனவர்களில் மேலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இதுவரை 4 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல்போன மாணவர்களை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Continue Reading

பிரதமருக்கும் பல நாடுகளின் தூதுவர்களுக்கிடையில் சந்திப்பு!

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு பல நாடுகளின் தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது அதன்படி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது இதில் எகிப்து நாட்டின் தூதுவர், அடெல் இப்ராஹிம்( Adel Ibrahim), ஈரான் தூதுவர், கலாநிதி அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh), ஜப்பான் தூதுவர் ISOMATA Akio மற்றும் இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் (Apostolic Nuncio) அதி […]

Continue Reading