சீனாவில் ஒரே நாளில் புதிதாக 21,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெய்ஜிங், டிச 09 உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று முன்தினம் அங்கு […]

Continue Reading

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

முல்தான், டிச 09 இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 657 ரன்களும், பாகிஸ்தான் 579 ரன்களும் குவித்தன. அடுத்து 78 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் அதிரடி காட்டிய இங்கிலாந்து 35.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்களுடன் துணிச்சலாக ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 343 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி […]

Continue Reading

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை

சென்னை,டிச 09 வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது தீவிர புயலாக வலுப்பெற்று இன்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 கி.மீ. முதல் 85 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே, மாண்டஸ் புயல் தற்போது […]

Continue Reading

ஈரான் போராட்டத்தில் கைதானவருக்கு தூக்கு

டெக்ரான்,டிச 09 ஈரானில் ‘ஹிஜாப்’ அணியாத மாஷா ஆமினி என்ற 22 வயதே ஆன இளம்பெண்ணை அந்த நாட்டின் அறநெறி போலீஸ் கைது செய்ததும், அவர் போலீஸ் காவலில் கடந்த செப்டம்பர் 16-ந் தேதியன்று, கொல்லப்பட்டதும் அங்கு பெண்களை போராட்டக்களத்தில் இறங்கி போராட வைத்தது. இந்தப் போராட்டத்தை ஈரான் அரசு ஒடுக்கியது. இதில் 475 பேர் கொல்லப்பட்டனர். 18 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தின்போது பாதுகாப்பு படை வீரர் ஒருவரை கத்தியால் தாக்கியதாக குற்றம் […]

Continue Reading

ரஷிய எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள விலை வரம்பு அமல்

பெர்லின்,டிச 09 ஜி7 நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ரஷியாவின் கடல்வழி கச்சா எண்ணெய் விலையை பீப்பாய் ஒன்றுக்கு 60 அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு ஒப்பந்தம் செய்தன. இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ரஷிய எண்ணெய்க்கான சராசரி சந்தை விலையை விட குறைந்தது 5 சதவீதம் உச்சவரம்பு குறைவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதன்படி ரஷிய எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள விலை வரம்பு அமலுக்கு […]

Continue Reading

பிரபல சிங்கள மொழி பாடகர் காலமானார்

பிரபல சிங்கள மொழி பாடகர் நுவன் குணவர்தன காலமானார். கொழும்பில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

அமெரிக்கா: மிக இளம் வயதில் மேயர் தேர்தலில் வெற்றி; வரலாறு படைத்த வாலிபர்

நியூயார்க், டிச 08 அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் இருந்து கிழக்கே இயர்லே என்ற சிறிய நகரத்திற்கான மேயர் தேர்தலில், சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து போட்டியிட்ட ஜெய்லன் ஸ்மித் என்பவர் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நகரின் சாலை மற்றும் துப்புரவு சூப்பிரெண்டாக உள்ள நெமி மேத்யூஸ் என்பவரை வீழ்த்தி ஸ்மித் வென்றுள்ளார். ஸ்மித்துக்கு 18 வயதே ஆகிறது. இதனால், அமெரிக்க வரலாற்றில் மிக இளம் வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை […]

Continue Reading

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க்

வாஷிங்டன், டிச 08 உலக அளவில் பணக்காரர்களாக உள்ளவர்களின் தரவரிசை பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்க் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். இவரை விட, லூயிஸ் விட்டன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பெர்னார்டு அர்னால்ட் என்பவர் அதிக சொத்து மதிப்புடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்படி இவரது சொத்து மதிப்பு ரூ.15 லட்சத்து 30 ஆயிரத்து […]

Continue Reading

கிரிக்கெட் இல்லன்னா டென்னிஸ்; ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை, டிச 08 சென்னை, ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஆடம்பர கேளிக்கை விடுதி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னைக்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி .சென்னை எப்போதும் தனக்கு அன்பையும் ஆதரவையும் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். சென்னையில் கிடைக்கும் உணவு தனக்கு மிகவும் பிடிக்கும் . கிரிக்கெட் வீரர்களிலேயே தனக்கு மிகவும் பிடித்தவர் தோனி. தான் கிரிக்கெட் வீரராகாமல் இருந்திருந்தால், டென்னிஸ் வீரராகியிருப்பேன் […]

Continue Reading

இந்தியாவுக்காக விளையாடும்போது முழு உடல்தகுதியுடன் இருக்க வேண்டும்- ரோகித் சர்மா

மிர்புர்,டிச 08 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேச அணி 2-0 என தொடரை […]

Continue Reading

ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்த அவதார் 2: எகிறும் எதிர்பார்ப்பு

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், டிசம்பர் 16 […]

Continue Reading

கொழும்பு அணி 9 ஓட்டங்களால் வெற்றி

இன்று இடம்பெற்ற LPL போட்டித் தொடரின் 5 ஆவது போட்டியில் Colombo Stars அணி Dambulla Aura அணியை 9 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற Colombo Stars முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. இதற்கமைய, Colombo Stars அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றனர். Colombo Stars அணி சார்பில் Niroshan Dickwella 62 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். Dambulla […]

Continue Reading