பேஷன் அழகியான மூதாட்டி: வைரலான புகைப்படத்தால் வெப் தொடரிலும் நடிக்க வாய்ப்பு

வயது என்பது வெறும் நம்பர்தான் என்பார்கள். இதற்கு ஏற்றாற்போல ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் பேஷன் அழகியாக மாறி உள்ளார். மார்கரெட் சோலா என்ற அந்த மூதாட்டியின் பேத்தி நியூயார்க்கில் ‘மேக்கப்’ கலைஞராக உள்ளார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த நாடான ஜாம்பியாவுக்கு வந்திருந்து தனது பாட்டியை சந்தித்தார். அப்போது பாட்டிக்கு நவநாகரீக உடைகள் அணிவித்தும், விக் அணிவித்தும் விதவிதமாக புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படங்கள் […]

Continue Reading

நிஜ்ஜார் கொலை சதி பிரதமர் மோடிக்கு தெரியும் என செய்தி வெளியிட்ட நாளிதழ்: அடிப்படை ஆதாரமற்றது என கனடா உடனடியாக மறுப்பு

இந்தியா – கனடா இடையிலான உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடாவில் வெளியாகும் செய்தித்தாளில் செய்திகள் வெளியாகின. இதனை தொடர்ந்து நிஜ்ஜாரின் கொலையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்தது. மேலும் அந்தக் குற்றச்சாட்டுகளை “அபத்தமானது” மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று நிராகரித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்த […]

Continue Reading

சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் நிறைவு

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் இலங்கை அரசாங்கம் சார்பில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர். இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

Continue Reading

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தொடர்பான உலகளாவிய மாநாடு சவுதி அரேபியாவில்

‘ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தொடர்பான சர்வதேச தினம் 24 ஆம் (நவம்பர்) திகதியாகும். அதனையொட்டி சவுதி அரேபியா 24 ஆம் 25 ஆம் திகதி ரியாத் நகரில் உலகளாவிய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இம்மாநாட்டில் துறைசார் மருத்துவ நிபுணர்கள், புத்திஜீவிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது’. ‘ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை மருத்துவ சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்தெடுக்கும் வேலைத்திட்டத்தை முப்பது வருடமாக முன்னெடுத்துவரும் சவுதி அறுபதுக்கும் மேற்பட்டவர்களை பிரித்தெடுத்து சாதாரண வாழ்வை […]

Continue Reading

உலகின் மிகவும் பிரபலமான இடமாக பெயரிடப்பட்டுள்ள இலங்கை

2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் பிரபலமான இடமாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. ஃப்ளாஷ் பேக் சர்வே இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைகளில், ஜப்பானுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. மேலும், பின்லாந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2024 ஃபிளாஷ் பேக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இலங்கை 04 வது இடத்தில் உள்ளது.

Continue Reading

குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

குவைத் இராச்சியத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் பயோமெட்ரிக் கைரேகையை வழங்குமாறு அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. கைரேகைகளை வழங்குவதற்கான இறுதித் திகதி 2024 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குவைத்தில் பணிபுரியும் அனைத்து இலங்கை பணியாளர்களும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதன்படி, குவைத் இராச்சியத்தை சேர்ந்த […]

Continue Reading

நாட்டின் வங்கித் துறைக்கு சாதகமான சூழல் – ஃபிட்ச் ரேட்டிங் அறிக்கை

வெளிநாட்டுக் கடன்கள் ஊடான அழுத்தங்கள் குறைக்கப்படும் போது, நாட்டின் வங்கிச் செயற்பாடுகளை இலகுபடுத்த முடியும் எனவும், ஃபிட்ச் ரேட்டிங்க் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வங்கிச் செயற்பாடுகள் கடந்த பொருளாதார நெருக்கடிக் காலத்தில் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி இருந்தன. எனினும் அடுத்தக்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக அந்தச் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் விளைவால் ஏற்படுகின்ற இறையாண்மை அழுத்தக் குறைப்பின் காரணமாக, வங்கிகளின் செயற்பாட்டுச் சூழ்நிலை இலகுபடுத்தப்படும். […]

Continue Reading

சர்வதேச வர்த்தக சட்டம் தொடர்பிலான ஐ.நா. ஆணைக்குழுவுக்கு இலங்கை தெரிவு

சர்வதேச வர்த்தக சட்டம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவிற்குத் இலங்கை தெரிவாகியுள்ளது. ஐ.நா பொதுச் சபையினால் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிற்கு (UNCITRAL) தெரிவுசெய்யப்பட்ட 31 உறுப்பு நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிய பசுபிக் குழுவிலிருந்து இலங்கை ஒரு ஆசனத்திற்கு போட்டியிட்டு 177 வாக்குகளைப் பெற்றது. ஆசிய பசுபிக் குழுவிற்குள் கிடைத்த இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் என்பதுடன், 31 உறுப்பு நாடுகளில் ஒட்டுமொத்தமாக இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான வாக்குகளாகும். […]

Continue Reading

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்தது Jetstar Asia

இலங்கைக்கும் சிங்கபூருக்கும் இடையிலான நேரடி புதிய விமான சேவை வியாழக்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டது. இந்த விமான சேவையை சிங்கப்பூரை தளமாகக் கொண்ட குறைந்த கட்டண Jetstar Asia விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலிருந்து புதிய விமான சேவையின் முதல் விமானமான Jetstar Asia விமான நிறுவனத்திற்கு சொந்தமான 3K333 என்ற விமானம் வியாழக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்தது. ஒவ்வொரு வாரமும் காலை அல்லது மாலையில் சிங்கப்பூரிலிருந்து இலங்கை வருவதற்கு ஏர்பஸ் A320 […]

Continue Reading

மூன்று வருட ஐபிஎல் தொடர்களுக்கான திகதிகள் அறிவிப்பு

உலகின் மிகவும் கவர்ச்சிகரமான ஃபிரான்சைஸ் கிரிக்கெட் லீக்காக கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக், 2025 உட்பட அடுத்த மூன்று IPL லீக்’களுக்கான திகதிகளை அறிவித்துள்ளது. மூன்று கட்ட ஐபிஎல் அட்டவணை அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. அதன்படி, எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப் போட்டி மே 25ஆம் திகதி நடைபெறவுள்ளது. 2026 சீசனை மார்ச் 15 முதல் மே 31 வரையிலும், 2027 சீசனை மார்ச் 14 முதல் மே […]

Continue Reading

மின்சார வாகன இறக்குமதி – 1000 உரிமங்களில் முறைகேடு

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட தணிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு உண்மையில் தகுதியுடைய பல வெளிநாட்டு பணியாளர்கள் அவற்றைப் பெறவில்லை என்று கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன கூறுகிறார். கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் விசேட கணக்காய்வு அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த அறிக்கை உரிய நேரத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading

முத்து ராஜா யானையின் தந்தங்களை வெட்ட திட்டம்!

இலங்கையில் இருந்து தாய்லாந்திற்கு கொண்டு வரப்பட்ட 29 வயதுடைய ப்ளாய் சாக் சுரின் (முத்து ராஜா) என்ற யானையின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த லாம்பாங்கில் உள்ள தாய்லாந்து யானைகள் பாதுகாப்பு மையத்தின் கால்நடை மருத்துவர்கள் அதன் தந்தங்களை வெட்ட திட்டமிட்டுள்ளனர். யானையின் நீண்ட மற்றும் கனமான தந்தங்கள் அதன் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கத் தொடங்கியமை கண்டறியப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் லாம்பாங் மாகாணத்தில் உள்ள தேசிய யானைக் கழகத்தின் தாய் யானைகள் பாதுகாப்பு […]

Continue Reading