தமிழக உரிமைகளை பாதுகாக்க ஸ்டாலினின் முயற்சிக்கு தேர்தல் மூலம் மக்கள் பேராதரவு: வைகோ

சென்னை, பெப்.23 தமிழகத்திற்கான உரிமைகளை பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலம் மக்கள் பேராதரவு அளித்துள்ளனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி, தமிழக மக்களின் பேராதரவோடு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலினின் நல்லாட்சிக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் தான் அடிப்படைக் காரணம் ஆகும். தமிழகத்திற்கான உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநில சுயாட்சிக் கோட்பாடு […]

Continue Reading

இரட்டை வேடம் போடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்: சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டு

கொழும்பு, பெப் 23: ‘சமஷ்டி இலங்கைக்கு கூடாது’ எனக் கூறி சமஷ்டியை எதிர்த்தவர் ஜி.ஜி.பொன்னம்பலம், அவரின் பேரன் கஜேந்திர குமார் பொன்னம்பலம் 13 ஆம் திருத்தத்தை எதிர்ப்பது வேடிக்கையானது என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில் “இலங்கை நாட்டிற்குள் ஒற்றை ஆட்சியை ஏற்றுக் கொண்டு, இலங்கை அரசில் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தவர் ஜி.ஜி.பொன்னம்பலம். அவரின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி இலங்கையின் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக் கொண்டது. அது அகில […]

Continue Reading

பெரும்போக வேளாண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்புறுதி: மகிந்தானந்த அளுத்கமகே

கொழும்பு, பெப் 23: கடந்த பெரும்போக வேளாண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். பெரும்போக வேளாண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பாக இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும் விவசாய அமைச்சின் ஆலோசனைச் சபையின் கூட்டம் புதன்கிழமை நடந்தது. மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிக விரைவாக குறித்த இழப்பீட்டு காப்புறுதியினை வழங்க வேண்டுமென குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின் தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, […]

Continue Reading

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை: நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாவனைக்கு அனுமதி

கொழும்பு, பெப்.23 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாவனைக்கு சபாநாயகர் புதன்கிழமை அனுமதியளித்துள்ளார். இந்த அறிக்கையை சபையில் முன்வைத்து சபாநாயகர் கூறியதாவது, சாட்சியங்களுக்கமைய தயாரிக்கப்பட்ட 88 அத்தியாயங்களுடன் கூடிய அறிக்கையை  நாடாளுமன்ற வாசிகசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

Continue Reading

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக நடக்கிறது: நீதி அமைச்சர்

கொழும்பு, பெப் 23: ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள், எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக இடம்பெற்று வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய பொது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் “தாக்குதல் நடந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தற்போது எதிர்கட்சியில் உள்ளனர்.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே கிடைத்த புலனாய்வுத் தகவல்களை கவனத்தில் எடுத்திருந்தால், இந்தத் தாக்குதலை தடுத்திருக்கலாம். இந்நிலையில், தற்போது இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் […]

Continue Reading

மின்வெட்டு தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுக்கலாம்: ரணில்

கொழும்பு, பெப்.23 நாட்டில் ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறான நேரத்துக்கே மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. இதற்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் வழக்கு தாக்கல் செய்யலாம் என ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் புதன்கிழமை தெரிவித்துள்ளார். மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் உயர்த்தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இஸட் ஸ்கோர் முறைமை இதில் தாக்கம் செலுத்தும். எனவே, மார்ச் 5 ஆம் திகதிவரை மின்வெட்டை அமுல்படுத்த வேண்டாம் என்றார்.

Continue Reading

EPF பணத்தில் 30 வீதம் இலகுவாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை

கொழும்பு, பெப்.23 EPF இன் புதிய சட்டத் திருத்தத்துக்கமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். தொழிலாளர் ஆலோசனை சபையின் மாதாந்த கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் கூறியதாவது, இதுவரை, ஊழியர் சேமலாப நிதியின் 30% பயனாளிகளின் நிதி வீட்டுக் கட்டுமான பணிகள், மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே விடுவிக்கப்பட்டது. எனினும், எதிர்காலத்தில் உறுப்பினர்கள் தமது தேவைகளுக்காக 30% நிதியை ஊழியர் சேமலாப […]

Continue Reading

37, 500 மெட்ரிக் தொன் டீசலுக்கான பணத்தை செலுத்திய அரசாங்கம்

கொழும்பு, பெப்.23 கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்துள்ள 37,500 மெட்ரிக் தொன் டீசல் கப்பலுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தியுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, சிங்கப்பூர் நிறுவனத்திற்கு  நேற்றிரவு 35.3 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைய தினம் கப்பலில் இருந்து டீசலை தரையிறக்க முடியும் என வலுசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Continue Reading

மோடியிடம் செல்வேன் மனோ திட்டவட்டம்

கொழும்பு, பெப்.23 மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் அடங்கிய ஆவணத்தை இறுதி செய்து பிரதமர் மோடிக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த ஆவணம் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டு பின்னரே இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் மனோ கூறியதாவது, மலையக மக்களின் அரசியல், கலாச்சார, பொருளாதார மற்றும் சமூகத் துறைகள் இலங்கை அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பிற்குள் […]

Continue Reading

மீண்டும் இந்தியா செல்லும் பசில்

கொழும்பு, பெப்.23 நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மீண்டும் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அவருடன், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிதியமைச்சர் அண்மையில் இந்தியாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியமை வெற்றியளித்ததாக தெரிவித்த அரசாங்கம், இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு மீண்டும் அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்வார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

43 வருடங்களின் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தப்பட்டு வருகிறது: ஜீ.எல்.பீரிஸ்

கொழும்பு, பெப்.23 43 வருடங்களின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச நியதிகள், சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். புதுடில்லியை தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரப் படையினருக்கு மத்தியில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் பல மாதங்களாக நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் திருத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும் விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதற்கான ஆரம்பப் படியாகும் என […]

Continue Reading

இலங்கை கடற்படை தளபதி- இம்ரான் கான் சந்திப்பு

கொழும்பு, பெப் 23: இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை செவ்வாய்க்கிழமை (22) சந்தித்தார். இதன்போது, பாகிஸ்தானின் நம்பகமான நண்பர் இலங்கை என்றும் இலங்கையுடனான உறவுகளுக்கு பாகிஸ்தான் முக்கியத்துவத்தை வழங்குவதாகவும் இம்ரான்கான் குறிப்பிட்டார். மேலும், 2021 பெப்ரவரியில் இலங்கை வந்ததை நினைவு கூர்ந்த இம்ரான் கான், இரு நாடுகளுக்கும் இடையில் அணைத்து துறைகளிலும் வலுவான சகோதர உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தான் விரும்புவதாக தெரிவித்தார். மேலும், இலங்கை அரசு தலைவர்களின் […]

Continue Reading