5 மாநில சட்ட சபை தேர்தல்: 4 மாநிலங்களில் பா.ஜ.க அமோக வெற்றி

இந்தியா, மார்ச் 10 இந்தியாவின் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்தது. உத்தரபிரதேசத்தில் இந்த தடவை 4 முனைப்போட்டி ஏற்பட்டு இருந்தது. ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அப்னாதளம், நிசாத் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. 4 […]

Continue Reading

ரஷ்யாவில் தனது அனைத்து சேவையையும் நிறுத்திய வார்னர் மீடியா

அmமெரிக்கா, மார்ச் 10 உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் பல ரஷியாவில் தங்களின் வர்த்தகம் மற்றும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களான பெப்சி, கோகோ கோலா, மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகியவை ரஷியாவில் தங்களின் வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்தன. இந்நிலையில், வார்னர்மீடியா ரஷ்யாவில் அனைத்து புதிய வணிகங்களையும் தற்காலிகமாக […]

Continue Reading

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்குவதில் பிரச்சினை: கமலா ஹாரிஸ் போலாந்துக்கு பயணம்

அமெரிக்கா, மார்ச் 10 உக்ரைன் மீது ரஷ்யா இன்று 15-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதற்கிடையில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி செய்து வருகின்றன. அந்த வகையில், உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பு நாடுகள் வழங்கும் போர் விமானங்களுக்கு அதே அம்சங்களை கொண்ட புதிய போர் விமானத்தை அமெரிக்கா வழங்க முன்வந்தது. இதனை […]

Continue Reading

உக்ரைன் தனியார் ராணுவ வீரர்களுக்கு தினசரி சம்பளம் ரூ.4.30 லட்சம்

உக்ரைன், மார்ச் 10 உக்ரைனில் நடக்கிற போரால், ரகசியமாக அந்த நாட்டுக்குச் சென்று, ரஷ்ய படைகளுக்கு எதிராக ஒரு நல்லதொரு தொகைக்காகப் போரிடத் தயாராக இருக்கிற தனியார் ராணுவ வீரர்களின் தேவை அதிகரித்துள்ளது என்று பி.பி.சி. தெரிவித்துள்ளது. ஆள் சேர்ப்புக்கான நிபந்தனையாக தன்னார்வலர்கள் பல மொழி பேசுகிறவர்களாக இருக்க வேண்டும், ஒரு நாளைக்கு 2 ஆயிரம் டாலர் வரை ஊதியம், மேலும் போனஸ் வழங்கப்படும், இவர்கள் போரில் சிக்கிய குடும்பங்களை மீட்க உதவ வேண்டும் என்று கூறப்படுகிறது. […]

Continue Reading

உக்ரைனுக்கு உதவிகளை வழங்கும் சீனா

சீனா, மார்ச் 10 உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா நடுநிலை நிலைப்பாட்டை கொண்டு உள்ளது. மேலும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண இருதரப்பையும் சீனா வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில் உக்ரைன் அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த நாட்டுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறுகையில், உணவு மற்றும் மருந்து […]

Continue Reading

செர்னோபில் அணு உலையின் மின் கட்டமைப்புகள் சேதம்: உக்ரைன் குற்றச்சாட்டு

உக்ரைன், மார்ச் 10 உக்ரைன் மீது ரஷ்யா இன்று 15-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்யா தொடர்ந்து தலைநகரை கைப்பற்றும் திட்டத்துடன் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள மிகப்பெரிய அணு உலையான செர்னோபில்லையும் ரஷ்யா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், செர்னோபில் அணு மின் நிலையத்திற்கு மின்வசதி வழங்கும் மின் கட்டமைப்புகள் முழுமையாக சேதம் அடைந்து விட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. மின் கட்டமைப்புகளை மீண்டும் சரி […]

Continue Reading

உக்ரைன் – ரஷ்ய போர்: உயிரிழப்பு விவரங்களை அறிவித்தது ஐ.நா

உக்ரைன், மார்ச் 10 உக்ரைன் மீது ரஷ்யா 15 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ் உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷ்ய விமானங்கள் இரவில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 லட்சம் பொதுமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் மார்ச் 8-ந் திகதி அதிகாலை வரை 474 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா […]

Continue Reading

இந்திய மாணவர்கள் வேறு யாராவது உக்ரைன் படையில் இணைந்தனரா? வெளியுறவு துறை தீவிர விசாரணை

இந்தியா, மார்ச் 10 உக்ரைனுக்கு கல்விக்காக சென்று அந்நாட்டு இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழக மாணவர் சாய்நிகேஷ் போல் இந்திய மாணவர்கள் வேறு யாராவது உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்து உள்ளார்களா என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்த தமிழக மாணவர் கசாய்நிகேஷ் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்று உள்ளார். இதைத்தொடர்ந்து அவரது பெற்றோரிடம் உளவுத்துறையினர் விசாரணை நடத்தினர். உக்ரைனிலுள்ள பதற்றமான சூழல் காரணமாக வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்களின் நாடுகளுக்கு செல்ல […]

Continue Reading

நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய விரும்பவில்லை: ஜெலன்ஸ்கி

உக்ரைன், மார்ச் 09 நேட்டோ நாடுகள் அமைப்பில் சேரவேண்டும் என்று உக்ரைன் விரும்பியது. ஆனால் நேட்டோ, உக்ரைனை ஏற்க விரும்பவில்லை என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்தார். எனவே நேட்டோ அமைப்பில் எங்களை உறுப்பினராக சேர்த்து கொள்ளுங்கள் என்ற எங்களின் கோரிக்கைக்கு இனியும் அழுத்தம் கொடுக்க போவதில்லை. இனி நேட்டோ நாடுகள் அமைப்பில் சேரவிரும்ப வில்லை என தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க NATO நாடுகளில் உக்ரைன் […]

Continue Reading

ரஷ்ய தாக்குதலில் வீரமரணம் அடைந்த உக்ரைனிய நடிகர்

உக்ரைன், மார்ச் 09 ரஷ்ய தாக்குதலில் உக்ரைனிய நடிகர் தனது இளம் வயதில் வீரமரணம் அடைந்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்களுக்கு ஈடாக ரஷ்ய உக்ரைன் வீரர்களும் போராடி வருகிறார்கள். அதனால் உக்ரைனில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தாய்நாட்டை பாதுகாக்க ரஷ்யாவிற்கு எதிரான போரில் களமிறங்கிய உக்ரைனிய நடிகர் பாஷா லீ ரஷ்ய தாக்குதலில் வீர மரணம் அடைந்தார். தனது இளம் வயதில் உயிர் […]

Continue Reading

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தலாம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷ்யா இன்று 14-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷ்யாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷ்ய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் […]

Continue Reading

உக்ரைனில் 61 வைத்தியசாலைகள் ரஷ்ய ராணுவத்தால் அழிப்பு

கீவ், உக்ரைன் மீது ரஷ்யா இன்று 14-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷ்யாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷ்ய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ரஷ்ய தாக்குதலால் இதுவரை 61 […]

Continue Reading